நம்ம ஊரு ரோட்ல இந்த மாதிரி வண்டியை எல்லாம் பாக்கவே முடியாது! டொயோட்டா செய்ய போகும் தரமான சம்பவம்!
இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிக்-அப் டிரக்குகளில் (Pick-up Trucks) ஒன்று டொயோட்டா ஹிலக்ஸ் (Toyota Hilux). இதன் புதிய தலைமுறை மாடலை டொயோட்டா நிறுவனம் வரும் ஜூலை 28ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக காடிவாடி செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே இருக்கும் நிலையில், புதிய தலைமுறை டொயோட்டா ஹிலக்ஸ் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
புதிய தலைமுறை டொயோட்டா ஹிலக்ஸ் பிக்-அப் டிரக்கில், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகளை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம்.

அத்துடன் 9 ஸ்பீக்கர் ஜேபிஎல் பிரீமியம் ஆடியோ சிஸ்டம், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், யூஎஸ்பி டைப் சி ஃபாஸ்ட் சார்ஜர்கள் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு வசதிகளையும் நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள டொயோட்டா ஹிலக்ஸ் பிக்-அப் டிரக்கில் சன்ரூஃப் கிடையாது. எனவே இந்தியாவிலும் சன்ரூஃப் வசதியை எதிர்பார்க்க முடியாது.
மேலும் தற்போது விற்பனையில் உள்ள மாடலில் ஹெவி ஹைட்ராலிக் பவர் ஸ்டியரிங் சிஸ்டம் வழங்கப்படுகிறது. ஆனால் புதிய தலைமுறை டொயோட்டா ஹிலக்ஸ் பிக்-அப் டிரக்கில் அப்டேட் செய்யப்பட்ட எலெக்ட்ரானிக் பவர் ஸ்டியரிங் சிஸ்டம் வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செயல்திறனை பொறுத்தவரையில், 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பவர் அவுட்புட் 204 பிஎஸ் பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனாக இருக்கலாம். இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை நாம் எதிர்பார்க்கலாம்.
மறுபக்கம் பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ், 7 ஏர்பேக்குகள், பிரேக் அஸிஸ்ட், ஹில் அஸிஸ்ட் கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா, முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள் போன்ற அம்சங்களை எல்லாம், புதிய தலைமுறை டொயோட்டா ஹிலக்ஸ் பிக்-அப் டிரக்கில் நாம் எதிர்பார்க்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை டொயோட்டா ஹிலக்ஸ் பிக்-அப் டிரக்கின் ஆரம்ப விலை 35 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனையில் உள்ள மாடலின் ஆரம்ப விலை 28.52 லட்ச ரூபாயாக இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இந்தியாவில் இசூஸு வி-க்ராஸ் (Isuzu V-Cross) மட்டுமே டொயோட்டா ஹிலக்ஸ் பிக்-அப் டிரக்கிற்கு இருக்கும் ஒரே ஒரு நேரடி போட்டி மாடல் ஆகும். இந்தியாவில் தற்போது பிக்-அப் டிரக் போன்ற லைப்-ஸ்டைல் செக்மெண்ட் வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. எனவே புதிய தலைமுறை டொயோட்டா ஹிலக்ஸ் விற்பனையில் சாதனை படைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
சர்வதேச சந்தைகளில் டொயோட்டா ஹிலக்ஸ் பிக்-அப் டிரக்கின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இது நடக்க தற்போதைக்கு வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் வேண்டுமானால் டொயோட்டா ஹிலக்ஸ் பிக்-அப் டிரக்கின் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications