புதிய தலைமுறை மிட்சுபிஷி பஜேரோ வெளியானது... இந்தியாவுக்கு எப்போது?

இந்தியாவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி சந்தையில் தனக்கென தனி வாடிக்கையாளர் வட்டத்தை பெற்ற மாடல்களில் ஒன்றாக மிட்சுபிஷி பஜேரோ இருந்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு சர்வதேச சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட இந்த பிரபலமான ஆஃப்ரோடு எஸ்யூவி, தற்போது புதிய தலைமுறை மாடலாக மீண்டும் உலகளாவிய அளவில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

கடந்த 1982ம் ஆண்டு முதல்முறையாக அறிமுகமான மிட்சுபிஷி பஜேரோ, தொடர்ந்து நான்கு தலைமுறை மாடல்களாக வெளிவந்து 170க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனையாகியது. மொத்தம் 32.9 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டன. இந்த நிலையில், ஐந்தாம் தலைமுறை மாடலாக தற்போது வெளியாகியுள்ள புதிய தலைமுறை பஜேரோ முற்றிலும் புதிய கட்டமைப்புக் கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Mitsubishi Pajero

ஆஜானுபாகுவான தோற்றம்

புதிய பஜேரோ எஸ்யூவியின் டிசைன் வேற வெவலுக்கு மாறி இருந்தாலும், வடிவமைப்பில் பழைய மாடல்களின் டிசைன் தாத்பரியங்கள் ஆங்காங்கே தெரிகிறது. உயரமான, நேர்த்தியான முன்பகுதி, வலிமையான ஃபெண்டர்கள் மற்றும் T வடிவிலான LED ஹெட்லைட்டுகள் இதற்கு பிரம்மாண்டமான தோற்றத்தை வழங்குகின்றன. முதல் தலைமுறை பஜேரோவின் ரோல்பாரை நினைவுபடுத்தும் வகையில் காரின் சி பில்லர் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் பழைய பஜேரோக்களில் இருந்த வெளிப்புற ஸ்பேர் வீலை நினைவுபடுத்தும் வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளது.

Mitsubishi Pajero Interior

டீசல் எஞ்சின்

புதிய பஜேரோவில் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. டர்போசார்ஜர் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 204 பிஎஸ் பவரையும், 480என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதனுடன் புதிய 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பஜேரோவின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் ஆஃப்-ரோடு திறன் என்பது அறிந்ததே. இதற்காக, மீண்டும் தற்போது உறுதியான லேடர்-ஃபிரேம் சேஸியில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. தவிரவும், Super Select 4WD-II என்ற விசேஷ 4 வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இந்த கார் 7 சீட்டர் மாடலாக இருந்து வருகிறது.

Mitsubishi Pajero

இந்தியாவுக்கு வருமா?

புதிய பஜேரோ முதலில் தாய்லாந்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதன்பிறகு ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த நிதி ஆண்டு முதல் ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ளிட்ட 100 நாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மிட்சுபிஷி பஜேரோ எஸ்யூவியானது அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்திய சந்தையில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால், இதுகுறித்து உறுதியான தகவல் இதுவரை மிட்சுபிஷி நிறுவனத்திடம் இருந்து வரவில்லை. ஒருவேளை மிட்சுபிஷி இந்தியாவுக்கு மீண்டும் வர முடிவு செய்தால், டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி மெஜஸ்டர் உள்ளிட்ட லேடர் ஃபிரேம் எஸ்யூவிகளுக்கு புதிய பஜேரோ போட்டியை தரும். குறிப்பாக, பஜேரோவின் பழைய ரசிகர்கள் மத்தியில் இதன் வருகை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

Article Published On: Wednesday, September 2, 2026, 18:46 [IST]
English summary
New generation mitsubishi pajero india launch 2027 price engine details
மேலும்... #mitsubishi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X