பிராண்டின் பெயரை பார்த்தவுடனே கண்ணை மூடிட்டு காரை வாங்கிவிடுவது தவறு! BMW காரை விட ஹூண்டாய் காரின் சிறப்புகள்!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தில் இருந்து புதியதாக ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் (Ioniq 5 Facelift) கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் இந்த ஹூண்டாய் எலெக்ட்ரிக் காருக்கு பல விதமான எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) போட்டியாக விளங்குகின்றன. அவற்றுள் முக்கியமானது, பி.எம்.டபிள்யூ (BMW) நிறுவனத்தின் ஐ.எக்ஸ்1 லாங்-வீல்பேஸ் (iX1 Long-wheelbase) கார் ஆகும். ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் காரை போன்று மார்க்கெட்டில் மிக சமீபத்தில் இந்த பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த இரு எலெக்ட்ரிக் கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தோற்றம்: பிரத்யேக இ-ஜிஎம்பி எலெக்ட்ரிக் (E-GMP Electric) பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் கார் ஆனது ஐஎக்ஸ்1 எலெக்ட்ரிக் காரை காட்டிலும் நீளமான வீல்பேஸை கொண்டுள்ளது. நீளமான வீல்பேஸ் ஆனது நேரடியாக இந்த எலெக்ட்ரிக் காரினுள் கேபினின் அளவை அதிகரித்துள்ளது. அத்துடன், முந்தைய ஐயோனிக் 5 கார் உடன் ஒப்பிடுகையில் புதிய மாடலின் தோற்றத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

new hyundai ioniq 5 facelift vs bmw ix1 long-wheelbase

மறுப்பக்கம், பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 ஆனது பெட்ரோல்/டீசல் எக்ஸ்1 காரின் பிளாட்ஃபாரத்தில் இருந்து வடிவமைக்கப்பட்ட பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக முன்பக்கத்தில் பொனெட்டிற்கு அடியில் பெரிய அளவில் ஃப்ரங்க் (Frunk) பகுதி இந்த காரில் இல்லை. அதேபோல், உட்புறத்திலும் கேபினின் அளவு ஐயோனிக் 5 கார் அளவிற்கு விசாலமானதாக இல்லை.

செயல்படுதிறன்: 2026 ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் ஆனது 690கிமீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 690கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். அதுவே, ஐஎக்ஸ்1 காரில் ஏறக்குறைய 450கிமீ ரேஞ்ச் தான் கிடைக்கிறது.

new hyundai ioniq 5 facelift vs bmw ix1 long-wheelbase

அதேபோல், புதிய ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் கார் 350 கிலோவாட்ஸ் வரையிலான டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஏற்கக்கூடியதாக உள்ளது. அதுவே, ஐஎக்ஸ்1 ஆனது 130 கிலோவாட்ஸ் வரையிலான சார்ஜிங்கை ஏற்கக்கூடியதாக உள்ளது. அதேபோல், ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் 215 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கும் நிலையில், ஐஎக்ஸ்1 எலெக்ட்ரிக் காரில் 204 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கிறது.

உட்புற வசதிகள்: ஐயோனிக் 5 ஆனது அதன் விசாலமான உட்புற இடவசதி மற்றும் சவுகரியமான அம்சங்களுக்கு பெயர் பெற்றது. இதன்படி, வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், மற்றும் ஒட்டோமேன்ஸ் அலங்கரிப்பு உள்ளிட்டவை பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 காரை விட கூடுதலாக இந்த காரில் வழங்கப்படுகிறது. மேலும், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோலையும் பில்லர் வழங்கப்பட்ட துளைகள் உடன் ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் பெறுகிறது.

ஐஎக்ஸ்1 லாங்-வீல்பேஸ் காரினுள் டாஷ்போர்டில் வளைவான டிஸ்பிளே வழங்கப்படுகிறது. ஐடிரைவ் ஐஎஸ்9 கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமான இது நன்கு விரிவானதாக இருந்தாலும், அதேநேரம் சில டிரைவர்களுக்கு சற்று குழப்பமானதாக உள்ளது. ஏனெனில், இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் பெரும்பாலான கண்ட்ரோல்கள் தொடுதல் மூலம் மேற்கொள்ளக் கூடியதாகவும், பொத்தான்கள் இன்றியும் உள்ளன. அத்துடன், 360-டிகிரி கேமரா மற்றும் ஹெட்-அப் டிஸ்பிளே போன்ற இன்றைய கால மாடர்ன் வசதிகளும் இந்த பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் காரில் இல்லை.

விலை: புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் கார் ஆனது ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே ரூ.55.70 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 லாங்-வீல்பேஸ் காரும் இடிரைவ்20எல் எம் ஸ்போர்ட் என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே ரூ.51.40 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விசாலமான உட்புற கேபின், விரைவான சார்ஜிங், சிறந்த ரேஞ்ச் உள்ளிட்டவற்றை எதிர்பார்ப்பவர்களுக்கு ஹூண்டாய் ஐயோனிக் 5 ஏற்றதாக இருக்கும். அதுவே, பிஎம்டபிள்யூ பிராண்டின் அனுபவத்தை அனுபவிக்க விரும்புபவர்களுக்கும், வழக்கமான எஸ்யூவி தோற்றத்திலான காரை பிரீமியம் வசதிகளுடனும் எதிர்பார்ப்பவர்களுக்கு ஐஎக்ஸ்1 லாக்-வீல்பேஸ் கார் உகந்ததாக இருக்கும்.

Article Published On: Wednesday, April 29, 2026, 9:59 [IST]
English summary
New hyundai ioniq 5 facelift vs bmw ix1 long wheelbase electric cars comparison
மேலும்... #hyundai #bmw
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+