ரூ.9 லட்சத்தில் வரும் புதிய ஹூண்டாய் எஸ்யூவி சோதனை ஓட்டம்... கிரெட்டாவை விட விலை குறைவான மாடல்!!

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஹூண்டாய் நிறுவனம் தனது எஸ்யூவி வரிசையை மேலும் விரிவுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வென்யூ மற்றும் கிரெட்டா ஆகிய இரு மாடல்களுக்கு இடையில் புதிய மாடலை களமிறக்க உள்ளது. இந்த புதிய மிட் சைஸ் எஸ்யூவி இந்திய சாலைகளில் வைத்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த புதிய மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் பேயான் காரை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என தெரிகிறது. இருப்பினும், இந்தியாவுக்காக தயாராகும் மாடலின் வெளிப்புற வடிவமைப்பில் கணிசமான மாற்றங்கள் இடம்பெற உள்ளது தெரிய வந்துள்ளது.

Hyundai SUV Spied
Photo Credit:

டிசைன்

சமீபத்திய சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்களில் முன்பக்கத்தில் ஸ்பிளிட் ஹெட்லைட் அமைப்பு, L வடிவிலான பகல்நேர விளக்குகள் மற்றும் அகலமான ஏர் டேம் அமைப்பு ஆகியவற்றை காண முடிகிறது. பக்கவாட்டில் பெரிய வீல் ஆர்ச்சுகள், ரூஃப் ரெயில்கள் மற்றும் அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன.

Also Read

பின்புறத்திலும் இந்த எஸ்யூவி தனித்துவமான வடிவமைப்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரிவான அமைப்புடன் பின்புற கண்ணாடி, ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெறும் என்று தெரிய வந்துள்ளது. சோதனை காரின் அடையாளங்கள் மறைக்கப்பட்டு இருந்தாலும், அதன் ஒட்டுமொத்த தோற்றம் வழக்கமான பாக்ஸி எஸ்யூவியை விட கிராஸ்ஓவர் பாணியில் இருப்பது தெரிய வருகிறது.

Hyundai SUV Spied
Photo Credit:

தொழில்நுட்ப வசதிகள்

இந்த காரின் உட்புறம் தொடர்பான சில தகவல்களும் சோதனை கார்களின் மூலம் வெளியாகியுள்ளன. ஓட்டுநரை நோக்கி சற்று வளைந்த வகையில் அமைந்துள்ள இரட்டை திரை அமைப்புடன் கூடிய சாதனங்கள் இதில் இடம்பெறும்.

Also Read

மேலும், 360 டிகிரி கேமரா மற்றும் தடம் மாறுதல் குறித்து எச்சரிக்கும் வசதி, ADAS பாதுகாப்பு அம்சத்திற்கான கேமரா ஆகியவை சோதனை காரில் இருப்பது தெரிய வந்துள்ளது. கனெக்டிவிட்டி வசதிகள், யூஎஸ்பி டைப்-ஏ மற்றும் டைப்-சி போர்ட்டுகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.

Hyundai SUV Spied
Photo Credit:

எஞ்சின் தேர்வுகள்

சர்வதேச அளவில் விற்பனையில் இருக்கும் பேயான் எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் இந்தியாவுக்கான மாடலில் வேறுபட்ட எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கிரெட்டாவில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன் தேர்வுகள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய எஸ்யூவி வென்யூவுக்கு மேலேயும், கிரெட்டாவுக்கு கீழேயும் இடையிலான ரகத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு மிக விரைவில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால், வாடிக்கையாளர் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.9 லட்சத்தையொட்டிய ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

Article Published On: Thursday, September 3, 2026, 11:53 [IST]
English summary
New hyundai mid size suv spied india design interior features launch timeline expected price
மேலும்... #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X