யாருமே கண்டுக்காத காரை லேசா பட்டி டிங்கரிங் மட்டும் பாத்து மக்களின் தலையில் கட்டிய பிரபல நிறுவனம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சைரோஸ் (Kia Syros). இதன் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வந்தது. எனவே கியா நிறுவனம் சைரோஸ் காரை அப்டேட் செய்துள்ளது. புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்ட 2026 கியா சைரோஸ் கார், வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது 2026 கியா சைரோஸ் கார், டீலர்ஷிப்களுக்கு (Dealerships) வர தொடங்கியுள்ளது. எனவே இந்திய சந்தையில் 2026 கியா சைரோஸ் காரின் டெலிவரி (Delivery) பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாகும். ஏனெனில் பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் (Crash Test), கியா சைரோஸ் கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 2 தரப்பினருக்குமான மோதல் சோதனைகளிலும் கியா சைரோஸ் கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
2026 கியா சைரோஸ் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆட்டோ ஹோல்டு உடன் எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ரியர் பார்க்கிங் சென்சார்கள், எமர்ஜென்ஸி ஸ்டாப் சிக்னல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரிமைண்டர் உடன் அனைத்து இருக்கைகளுக்கும் 3 பாயிண்ட் சீட்பெல்ட்கள் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features), 2026 கியா சைரோஸ் கார் பெற்றுள்ளது.

அத்துடன் 12.3 இன்ச் ஹெச்டி டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12 இன்ச் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ட்யூயல் பேன் பனரோமிக் சன்ரூஃப், ஹார்மன் கார்டன் 8 ஸ்பீக்கர் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், புஷ் பட்டன் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்ற வசதிகளும், 2026 கியா சைரோஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற மேலும் பல்வேறு வசதிகளையும், 2026 கியா சைரோஸ் கார் கொண்டுள்ளது. இதில், கனெக்டட் கார் தொழில்நுட்பத்தில் 80க்கும் மேற்பட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
அதே நேரத்தில் 2026 கியா சைரோஸ் காரில் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) கொடுக்கப்பட்டுள்ளன. அவை 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 டீசல் ஆகியவை ஆகும். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய 2026 கியா சைரோஸ் காரின் ஆரம்ப விலை வெறும் 8.40 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) போன்ற கார்களுக்கு எல்லாம், கியா சைரோஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications