லிட்டருக்கு 19 கிமீ மைலேஜ் தரும் காரை மேம்படுத்தும் மாருதி! அடுத்த சில வருடத்திற்கு எல்லாரும் வாங்க போறாங்க!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் பிரெஸ்ஸா (Brezza) ஒன்றாகும். மாருதி சுஸுகியின் சப்-காம்பாக்ட் எஸ்யூவி (Sub-Compact SUV) ரக காரான இது இந்த 2026ஆம் ஆண்டில் புதிய ஃபேஸ்லிஃப்ட் (Facelift) அப்கிரேடை பெற உள்ளது. இந்த நிலையில், புதிய பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
அறிமுகத்திற்கு முன்னதாக நடத்தப்பட்டுள்ள சோதனை ஓட்டம் என்பதால், காரின் தோற்றம் யாருக்கும் தெரிவிடக் கூடாது என்பதற்காக, கார் முழுவதுமாக மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது. புதிய ஃபேஸ்லிஃப்ட் கார்களில் முன் மற்றும் பின் பக்கங்களில் மட்டுமே அப்கிரேட்கள் கொண்டுவரப்படும் என்பதால், காரின் முன் & பின் பக்கங்களை மட்டும் மறைத்திருந்தாலே போதும்; ஆனால் இந்த சோதனை ஓட்டத்தில் கார் முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சல் பிரதேசத்தின் சிம்லா பகுதியில் நடத்தப்பட்டுள்ள புதிய பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்டின் இந்த சோதனை ஓட்டம் தொடர்பான படங்கள் 'கார் இந்தியா நியுஸ்' (CarIndiaNews) என்கிற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தின் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன. இந்த படங்களில் கார் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருப்பினும், காரின் முன்பக்கத்தில் எல்இடி டிஆர்எல்-கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.
அதேபோல், காரின் பின்பக்கத்திலும் கவனிக்கத்தக்க டிசைன் மாற்றங்களை பார்க்க முடிகிறது. புதிய பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்படுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. இதற்கு முந்தைய சோதனை ஓட்டங்களில் புதிய பிரெஸ்ஸாவில் புதிய டிசைனிலான அலாய் சக்கரங்களை பார்க்க முடிந்தது.

அத்துடன், டிசைன் மாற்றப்பட்ட முன்பக்க க்ரில் மற்றும் புதிய பம்பர்களையும் முன் & பின்பக்கத்தில் புதிய பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்றுவர உள்ளது. மற்றப்படி, காரின் பரிணாம அளவுகள் மற்றும் வடிவமைப்பில் பெரிய அளவிற்கு மாற்றம் இருக்காது என்பது தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கும் படங்களிலும் பார்க்க முடிகிறது.
இருப்பினும், புதிய பிரெஸ்ஸாவின் உட்புறத்தில் 10.1 இன்ச்சில் பெரிய அளவில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட உள்ளது. தற்சமயம் பிரெஸ்ஸாவில் 9 இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படும் நிலையில், புதிய பிரெஸ்ஸாவில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Grand Vitara) காரில் வழங்கப்படும் 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட உள்ளது.
இந்த தொடுத்திரை ஆனது புதிய பிரெஸ்ஸாவின் டாப் வேரியண்ட்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி உடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய பிரெஸ்ஸா காரின் கேபினுக்குள் ஃபிட் & ஃபினிஷ் மற்றும் மெட்டீரியல்கள் உள்ளிட்டவை மேம்பட்டு வழங்கப்படும் என்றும், கேபின் முழுவதற்கும் புதுமையான நிறங்கள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று, இன்ஃபோடெயின்மெண்ட் திரையை போன்று இன்ஸ்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரையும் அப்கிரேட் செய்யப்பட்டு வழங்கப்படலாம். இவற்றுடன், புதிய பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் காரில் வெண்டிலேட்டட் இருக்கைகளை புதிய மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். மேலும், தற்போது வெளியாகி இருக்கும் படங்களில் காரின் பின்பக்கத்தில் 360-டிகிரி கேமராவையும் பார்க்க முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முக்கியமான கார்களுள் ஒன்றாக விளங்கும் பிரெஸ்ஸா அப்கிரேட் செய்யப்படுவது, அதன் விற்பனையை பெரிய அளவிற்கு உயர்த்தும் என்பது உறுதி. இந்திய மார்க்கெட்டில் தொடர்ந்து போட்டிகள் அதிகமாகி வருவதால், இவ்வாறான புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்கள் அவசியமாகின்றன. இருப்பினும், பிரெஸ்ஸாவின் என்ஜின் உள்ளிட்ட முக்கிய மெக்கானிக்கல் பாகங்களில் பெரியதாக எந்த மாற்றமும் இருக்காது.


Click it and Unblock the Notifications