எர்டிகா காரை போன்று தோற்றம், 7- 8 பேர் அமர்ந்தாலும் அசவுகரியம் இருக்காது... மாருதி சுஸுகியின் புதிய தயாரிப்பு!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக விற்பனைக்கு வர உள்ள கார் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் பொது வெளியில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 'ஹேமந்த் ஆன் ரோடு' (Hemant On Road) என்கிற யூடியூப் (Youtube) சேனலின் மூலம் கிடைக்கப் பெற்றுள்ள படங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து பல புதிய கார்கள் அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஆதலால், மாருதி கார் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் பொது சாலையில் சோதனை செய்யப்படுவதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. இந்த சோதனை ஓட்டத்தில் காரின் வடிவத்தை வைத்து பார்க்கும்போது, இது புதிய பிரெஸ்ஸா (Brezza) காராக இருக்கலாம் என தோன்றுகிறது.

new maruti suzuki mpv car spy images

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் பிரெஸ்ஸா காருக்கு புதிய அப்கிரேடை வழங்க தயாராகி வருகிறது. முந்தைய விட்டாரா பிரெஸ்ஸா கார் 'பிரெஸ்ஸா' என மாற்றப்பட்டதற்கு பிறகு அந்த காருக்கு வழங்கப்படும் முக்கியமான அப்கிரேட் இதுவாகும். புதிய பிரெஸ்ஸா காரின் அறிமுகத்தை இந்த 2026ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக எதிர்பார்க்கிறோம்.

இந்த சோதனை ஓட்டத்தில் காரின் தோற்றம் முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளதால், தற்போதைய பிரெஸ்ஸாவை காட்டிலும் தோற்றத்தில் பெரிதும் வித்தியாசமானதாக புதிய பிரெஸ்ஸா எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, பிரெஸ்ஸாவின் முன்பக்கத்தில் க்ரில்லின் டிசைன் மாற்றப்படலாம். அதேபோல், முன்பக்க பம்பர் மற்றும் அதில் வழங்கப்படும் ஃபாக் விளக்குகள் உள்ளிட்டவற்றின் வடிவம் மற்றும் பொசிஷனும் மாற்றப்படலாம்.

new maruti suzuki mpv car spy images

பிரெஸ்ஸாவின் முன்பக்க எல்இடி ஹெட்லைட்களின் வடிவத்தில் பெரியதாக மாற்றம் இருக்காது என கூறப்பட்டாலும், ஹெட்லைட் சிஸ்டத்தில் வழங்கப்படும் பல்ப்கள் இன்றைய காலத்திற்கு ஏற்ப மாற்றப்படும். அதுவே காரின் பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட் சிஸ்டத்தில் விளக்குகள் மாற்றப்படாமல், டெயில்லைட்களின் வடிவம் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.

தற்போது வெளியாகி இருக்கும் சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலம் பார்க்கும்போது, காரின் பின்பக்க பம்பரின் வடிவம் மாற்றப்பட உள்ளது. ஆனால், பின்பக்க பூட் ஸ்பேஸுக்கான கதவு உள்பட பிரெஸ்ஸாவின் பின்பக்கத்தில் பெரியதாக எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. காரின் பக்கவாட்டு பகுதிகளிலும் அலாய் சக்கரங்களின் டிசைன் மாற்றப்படுவதுடன் பெரியதாக எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

ஆனால், காருக்கு உள்ளே கேபினின் அலங்கரிப்பு மெருக்கேற்றப்படுவதுடன், புதிய வசதிகள் சேர்க்கப்படலாம். இதன்படி, கேபின் அலங்கரிப்புக்காக பயன்படுத்தப்படும் மெட்டீரியல்கள் மாற்றப்படலாம் மற்றும் டாஷ்போர்டின் வடிவம் மாற்றப்படும். புதிய வசதிகளாக புதிய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை (தற்போதைய 9-இன்ச்க்கு பதிலாக), வெண்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் பவர் டிரைவர் சீட் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன.

360-டிகிரி கேமராவும் புதிய பிரெஸ்ஸாவின் டாப் வேரியண்ட்களில் வழங்கப்படலாம். இருப்பினும், காரின் என்ஜின் & கியர்பாக்ஸ் சிஸ்டத்தில் எந்த அப்கிரேட்களும் இருக்காது. வழக்கம்போல், அதே 1.5 லிட்டர் கே15சி பெட்ரோல் என்ஜின் தான் மூன்று விதமான எரிபொருளில் இயங்கக்கூடியதாக வழங்கப்பட உள்ளது. அந்த மூன்று எரிபொருட்களாவன, பெட்ரோல், சிஎன்ஜி (CNG) மற்றும் மைல்ட்-ஹைப்ரீட் (Mild-hybrid) ஆகும்.

என்ஜினில் மாற்றம் இருக்காது எனினும், புதிய கியர்பாக்ஸ் ஆப்ஷன் சேர்க்கப்படலாம். அதாவது, பிரெஸ்ஸாவில் தற்போதைக்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆனது என்ஜின் உடன் வழக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் சேர்க்கப்படலாம். தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில், சோதனை ஓட்டத்தில் புதிய பிரெஸ்ஸா காருடன் மற்றுமொரு புதிய மாருதி காரையும் பார்க்க முடிகிறது.

மாருதி சுஸுதி நிறுவனம் எம்பிவி (MPV) வகையைச் சேர்ந்த புதிய கார் ஒன்றை வடிவமைக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. அதுவாக கூட இது இருக்கலாம். இருப்பினும், இந்த படங்களில் கார் முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளதால், இது எஸ்யூவி காராக அல்லது எம்பிவி காரா என்பதை உறுதியாக கூற முடியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம் இரு கார்களையும் ஒன்றாக சோதனை ஓட்டத்தில் உட்படுத்தி உள்ளதால், இந்த இரு கார்களையும் வடிவமைக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருவதை அறிய முடிகிறது. இருப்பினும், இதில் முதலாவதாக புதிய பிரெஸ்ஸா கார் தான் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். மாருதியின் இந்த புதிய எம்பிவி கார் விற்பனையில் கியா கேரன்ஸ் கிளாவிஸ் (Kia Carens Clavis) காருக்கு போட்டியாக இருக்கும்.

Article Published On: Wednesday, May 6, 2026, 21:16 [IST]
English summary
New maruti suzuki mpv car like ertiga spotted testing in india check all details here
மேலும்... #maruti suzuki #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+