மிடில்-கிளாஸ் மக்களும் வாங்கக்கூடிய இந்தியாவின் விலை குறைவான பென்ஸ் கார்! இதைவிட கம்மியான விலையில் சீன கார்

இந்திய சந்தையில் மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) காருக்கு விற்பனையில் சீனாவின் பிஒய்டி (BYD) கார் ஒன்று போட்டியாக இருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. அதாவது, அந்த அளவிற்கு இந்திய லக்சரி கார்கள் சந்தை மாற்றம் கண்டுள்ளது. மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் காரான 'சிஎல்ஏ எலெக்ட்ரிக்' (CLA Electric) காருக்கு பிஒய்டி சீல் (Seal) எலெக்ட்ரிக் கார் விற்பனையில் போட்டியாக உள்ளது.

இந்த இரு கார்களும் அளவில் தாழ்வான எலெக்ட்ரிக் செடான் வகை கார்கள் என்றாலும், தோற்றத்தில் இரண்டும் நிறைய வித்தியாசங்களை கொண்டுள்ளன. இருப்பினும், இந்த இரு எலெக்ட்ரிக் கார்களுமே அவற்றின் ஒவ்வொரு நாடுகளிலும் பிரபலமானவைகளாக உள்ளன. இந்த இரு கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

mercedes-benz cla electricbyd seal

செயல்படுதிறன்: புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார் சிஎல்ஏ 200 மற்றும் சிஎல்ஏ 250+ என இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சிஎல்ஏ 200 வேரியண்ட்டில் 165 கிலோவாட்ஸ் வரையிலான இயக்க ஆற்றலையும், 335 என்.எம் வரையிலான டார்க் திறனையும் பெறலாம். அதுவே, சிஎல்ஏ 250+ வேரியண்ட்டில் 200 கிலோவாட்ஸ் ஆற்றலையும், அதே 335 என்.எம் டார்க் திறனையும் பெறலாம்.

இதன் மூலமாக, சிஎல்ஏ 200 வேரியண்ட்டில் 0-இல் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை 7.5 வினாடிகளிலும், சிஎல்ஏ 250+ வேரியண்ட்டில் வெறும் 6.7 வினாடிகளிலும் எட்டிவிடலாம். மறுப்பக்கம், பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் கார் ஆனது ரியர்-வீல்-டிரைவ் (RWD) வேரியண்ட்டில் 230 கிலோவாட்ஸ் மற்றும் 360 என்.எம் டார்க் திறனையும், ஆல்-வீல்-டிரைவ் (AWD) வேரியண்ட்டில் 390 கிலோவாட்ஸ் மற்றும் 670 என்.எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இந்த காரின் ஆல்-வீல்-டிரைவ் வேரியண்ட்டில் 100kmph வேகத்தை வெறும் 3.8 வினாடிகளில் எட்டிவிடலாம்.

mercedes-benz cla electricbyd seal

ரேஞ்ச்: சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரின் சிஎல்ஏ 200 வேரியண்ட்டில் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 542கிமீ தொலைவிற்கும், சிஎல்ஏ 250+ வேரியண்ட்டில் 792கிமீ தொலைவிற்கும் பயணிக்கலாம் என்கிறது மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம். அதுவே பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காரில் இரண்டிற்கும் மத்தியில் 650கிமீ ரேஞ்ச் கிடைக்கிறது.

சார்ஜிங்: சிஎல்ஏ 200 வேரியண்ட் ஆனது 200 கிலோவாட்ஸ் டிசி சார்ஜரை ஏற்கக்கூடியதாக உள்ளது. இது 320கிமீ பயணத்திற்கான சார்ஜை 20 நிமிடங்களில் நிரப்பிவிடும். சிஎல்ஏ 250+ ஆனது 800 வோல்ட் கட்டமைப்பை கொண்டுள்ளதால் இது 320 கிலோவாட்ஸ் டிசி வரையிலான சார்ஜிங்கை ஏற்கக்கூடியதாக உள்ளது. இதன் மூலமாக அதே 20 நிமிடங்களில் 400கிமீ பயணத்திற்கான சார்ஜை பெற்றுவிடலாம். பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காரின் 61.44kWh பேட்டரி 110 கிலோவாட்ஸ் வரையிலான சார்ஜரை ஏற்கும் நிலையில், பெரிய 82.56kWh பேட்டரி 150 கிலோவாட்ஸ் சார்ஜர் வரையில் ஏற்கிறது.

தொழிற்நுட்ப அம்சங்கள்: சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரில் முக்கிய அம்சங்களாக மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் சிஸ்டம் மற்றும் லெவல்-2 அடாஸ் (ADAS) வழங்கப்பட்டுள்ளது. பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காரில் அனைத்து வேரியண்ட்களிலும் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி வழங்கப்படுகிறது. அத்துடன், லெவல்-2 அடாஸ் மற்றும் என்.எஃப்.சி கார்டு ஆக்ஸஸ் (NFC Card Access) உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

விலை: சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரின் சிஎல்ஏ 200 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.55 லட்சமாகவும், சிஎல்ஏ 250+ வேரியண்ட்டின் விலை ரூ.59 லட்சமாகவும், சிஎல்ஏ 250+ லான்ச் எடிஷனின் விலை ரூ.64 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே, பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.41 லட்சத்தில் இருந்து அதிகப்பட்சமாகவே ரூ.53.15 லட்சம் வரையில் மட்டுமே உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸின் லக்சரி பேட்ஜ், அதிகப்படியான ரேஞ்ச், விரைவான சார்ஜிங் திறனை பயன்படுத்த விரும்புபவர்கள் சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரை வாங்கலாம். அதேநேரம், வலிமையான செயல்படுதிறன், அதிநவீன மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களை எதிர்பார்ப்பவர்கள் பிஒய்டி சீல் பக்கம் செல்லலாம். மேலும், இந்த பிஒய்டி எலெக்ட்ரிக் காரின் விலையும் குறைவாக உள்ளது.

Article Published On: Thursday, April 30, 2026, 6:31 [IST]
English summary
New mercedes benz cla electric vs byd seal electric cars comparison check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+