ஆஃப்ரோடு கிங்... செப்டம்பர் 2ல் வெளிவரும் புதிய தலைமுறை மிட்சுபிஷி பஜேரோ...!!

ஆஃப்-ரோடு எஸ்யூவி உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய மிட்சுபிஷி பஜேரோ, புதிய தலைமுறை மாடலாக வரும் செப்டம்பர் 2-ம் தேதி உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த தேதியை மிட்சுபிஷி தனது அதிகாரப்பூர்வ பஜேரோ டீசர் தளத்தில் தற்போது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

1982-ல் அறிமுகமான இந்த எஸ்யூவி, நான்கு தலைமுறைகளாக உலகம் முழுவதும் ஆஃப்ரோடு பிரியர்களின் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருந்தது. குறிப்பாக டக்கார் ராலியில் 12 முறை பெற்ற வெற்றிகள் பஜேரோவின் ஆஃப்-ரோடு திறமைக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக இருக்கின்றன. மிட்சுபிஷி வெளியிட்ட தரவுகளின்படி, இதுவரை மொத்தமாக 170க்கும் மேற்பட்ட நாடுகளில் 32.5 லட்சத்துக்கும் அதிகமான பஜேரோ எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சில ஆண்டுகளாக சந்தையில் இருந்து விலக்கப்பட்ட நிலையில், மீண்டும் புதிய தலைமுறை மாடலாக அவதாரம் எடுக்க உள்ளது.

Mitsubishi Pajero

புதிய பஜேரோவின் மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று அதன் கட்டமைப்புதான். தற்போது பெரும்பாலான எஸ்யூவிகளில் பயன்படுத்தப்படும் மோனோகாக் சேஸி கட்டமைப்புக்கு பதிலாகலாக, புதிய மாடல் ட்ரைடான் பிக்கப் டிரக் உருவாக்கப்பட்ட லேடர் ஃப்ரேம் சேஸியை அடிப்படையாக கொண்டு வருகிறது. ஆனால், பஜேரோவின் கேபின், முன்புறம் மற்றும் பின்புற சஸ்பென்ஷன் ஆகியவை தனியாக உருவாக்கப்பட்டுள்ளதாக மிட்சுபிஷி தெரிவித்துள்ளது. இதனால் கடினமான ஆஃப்-ரோடு பாதைகளில் செம்மையாக செயல்படுவதுடன், சாலையில் பயணிக்கும் போதும் அதிக வசதியை வழங்கும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

இதில் மிட்சுபிஷியின் S-AWC (Super-All Wheel Control) என்ற தொழில்நுட்பமும் கவனம் பெறுகிறது. வெவ்வேறு வகையான சாலை மற்றும் நிலப்பரப்பு சூழல்களுக்கு ஏற்ப வாகனத்தின் இயக்கம், தரைப் பிடிப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் வகையில் இந்த தொழில்நுட்பம் செயல்படும். மண், கற்கள், ஏற்றம் போன்ற கடினமான பகுதிகளில் பஜேரோவின் உண்மையான திறனை காட்டுவதாக இருக்கும் என கருதலாம்.

எஞ்சின் விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. ஆனால் டீசல்-ஹைப்ரிட் எஞ்சின் தேர்வில் வரும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், வரும் செப்டம்பர் 2ந் தேதி அதிகாரப்பூர்வமாக எஞ்சின் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஜேரோவின் பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் புதிய டிஜிட்டல் மல்டி மீட்டர் வசதியும் இடம்பெறுகிறது. வாகனம் எந்த உயரத்தில் உள்ளது , காம்பஸ் திசை, வெளிப்புற வெப்பநிலை, வாகனத்தின் pitch மற்றும் roll உள்ளிட்ட தகவல்களை இது காட்டும். பழைய பஜேரோவின் பிரபலமான டிரிப்பிள் மீட்டர்r அமைப்புக்கு இது நவீன வடிவிலான மாதிரியாக கூறலாம்.

இந்தியாவுக்கு புதிய பஜேரோ வருமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் செப்டம்பர் 2 உலக அறிமுகத்துக்குப் பிறகு அதன் முழுமையான தொழில்நுட்ப விவரங்கள், பவர்டிரெயின் மற்றும் சந்தை வாரியான திட்டங்கள் வெளியாகும். பஜேரோவின் புகழ்பெற்ற ஆஃப்-ரோடு பாரம்பரியத்துடன் புதிய தலைமுறை எந்த அளவுக்கு தக்க வைத்திருக்கிறது என்பதுதான் இப்போது ஆட்டோமொபைல் துறையினர் மற்றும் ஆஃப்ரோடு பிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Article Published On: Thursday, August 27, 2026, 15:41 [IST]
English summary
New mitsubishi pajero september 2 unveil ladder frame off road suv
மேலும்... #mitsubishi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out