மைலேஜை அள்ளிக் கொடுக்கும் புதிய நிஸான் டெக்டான் எஸ்யூவி

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் எதிர்பார்க்கப்பட்டு வந்த புதிய டெக்டான் எஸ்யூவியை இன்று (ஜூன் 9) இந்தியாவில் வெளியிட்டுள்ளது நிஸான். ரெனோ டஸ்டரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தக் கார் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் விற்பனை செய்யப்படவுள்ளது. வெளியாகும் போதே 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கைக் கொண்டுள்ளது டெக்டான். இந்நிலையில், இந்தக் காரின் மைலேஜ் குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

ரெனோ டஸ்டரில் இருக்கும் அதே டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் தான் இந்த டெக்டான் எஸ்யூவியிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் தான். இதில் 1.0 லிட்டர் இன்ஜினானது 100 hp பவர் மற்றும் 166 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இதனை T160 எனக் குறிப்பிடுகிறது நிஸான்.

Nissan Tekton

இந்த 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. T280 என நிஸான் குறிப்பிடும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினானது 163 hp பவர் மற்றும் 280 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் தேர்வுகளைக் கொடுத்துள்ளது நிஸான்.

தற்போது இந்த இரண்டு இன்ஜின்களின் மைலேஜ் குறித்த விவரங்களைப் பார்க்கலாம். மேற்கண்ட இரண்டு இன்ஜின் தேர்வுகளில், 1.0 லிட்டர் டர்போ இன்ஜினே அதிகமாக, லிட்டருக்கு 19.4 கிமீ மைலேஜ் கொடுக்கும் ஒன்றாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது ரெனோ. 1.3 லிட்டர் இன்ஜின் மேனுவல் கியர்பாக்ஸுடன் இருக்கும் போது 17.8 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் பயன்படுத்தும் போது லிட்டருக்கு 18.5 கிமீ மைலேஜையும் கொடுக்கும் திறனைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது நிஸான்.

Nissan Tekton

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து மைலேஜ் அளவுகளுமே ARAI அமைப்பால் சோதனை செய்யப்பட்ட போது கிடைத்த அளவுகள் என்பது குறிப்பிடத்தக்கது. தினசரிப் பயன்பாட்டின் போது இதனை விடக் குறைவான அளவு மைலேஜே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெனோ டஸ்டரிலும் இதே இன்ஜின்களே பயன்படுத்தப்பட்டிருப்பதால், அதில் கிடைக்கும் உண்மையான மைலேஜ் அளவை இந்த டெக்டானிலும் நாம் எதிர்பார்க்கலாம்.

டஸ்டர் எஸ்யூவியில் மேற்கண்ட இரண்டு இன்ஜின் தேர்வுகளுமே சராசரியாக லிட்டருக்கு 10 கிமீ முதல் 11 கிமீ வரையிலான மைலேஜையே கொடுப்பதாக தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக நகரங்களில் பயன்படுத்தும் போது லிட்டருக்கு 7 முதல் 8 கிமீ வரையிலும், நெடுஞ்சாலைகளில் 13 கிமீ வரையிலான மைலேஜையும் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட அதே அளவு மைலேஜையே இந்த டெக்டான் எஸ்யூவியிலும் நாம் எதிர்பார்க்கலாம்.

இந்த எஸ்யூவியை தற்போது ஆறு வேரியன்ட்களாக 10.49 லட்சம் ரூபாய் முதல் 18.59 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது நிஸான். 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட வேரியன்டானது 14.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து தொடங்குகிறது.

டஸ்டரில் எஸ்யூவியில் அடுத்த சில மாதங்களில் 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் பவர்ட்ரெயினும் கொடுக்கப்படவிருக்கிறது. இது நிஸானின் இந்த டெக்டானுக்கும் கொடுக்கப்படும் என முன்னர் கூறப்பட்டது. ஆனால் சமீபத்திய தகவல்களின்படி இந்தப் புதிய ஹைபிரிட் பவர்ட்ரெயினானது டெக்டானில் வழங்கப்படமாட்டாது எனத் தெரியவந்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டர்போ பெட்ரோல் இன்ஜின் என்னும் போது அனைத்து இடங்களிலும் பவர் போதுமான அளவில் இருக்கும். ஆனால் அதற்கேற்ற வகையில் மைலேஜும் மிகவும் குறைவாக இருக்கும் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் டெக்டான் எஸ்யூவியின் குறைவான மைலேஜ் அளவில் ஆச்சரியம் ஏதுமில்லை. மேலும், இது ஏற்கனவே டஸ்டரில் நாம் பார்த்தது தான், டெக்டானில் எதிர்பார்ப்பது தான்.

Article Published On: Thursday, July 9, 2026, 17:59 [IST]
English summary
New nissan tekton midsize suv mileage figures revealed for both engines
மேலும்... #nissan #suv #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out