மஹிந்திரா ஸ்கார்பியோவுக்கு போட்டியாக ரெனால்ட்டின் 7-சீட்டர் கார்! சென்னையில் ஆலை இருப்பதால் ஈசியா போய்டுச்சு!

ரெனால்ட் (Renault) நிறுவனம் அதன் புதிய டஸ்டர் (Duster) காரை அடிப்படையாக கொண்டு மேலும் இரு புதிய எஸ்யூவி கார்களை விற்பனைக்கு கொண்டுவர உள்ளது. அதில் ஒன்று, டஸ்டரை காட்டிலும் அளவில் சிறியதாக சப்-4 மீட்டர் எஸ்யூவி காராக உருவாக்கப்பட்டு வருகிறது. 'பிரிட்ஜர்' (Bridger) என்கிற பெயரில் இந்த புதிய ரெனால்ட் சப்-4 மீட்டர் எஸ்யூவி காரின் கான்செப்ட் (Concept) சமீபத்தில்தான் வெளியீடு செய்யப்பட்டது.

அடுத்த 2027ஆம் ஆண்டில் இந்த கார் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டஸ்டரின் அடிப்படையிலான மற்றொரு காராக, அதனை காட்டிலும் அளவில் பெரியதான 'பிக்ஸ்டர்' (Bigster) அறிமுகம் செய்யப்பட உள்ளது. இன்னும் போனால், பிரிட்ஜர் காருக்கும் முன்னதாக பிக்ஸ்டர் இந்த 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

new renault bigster 7-seater suv spotted

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, ரெனால்ட் பிக்ஸ்டர் எஸ்யூவி கார் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சென்னையில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. ரெனால்ட் நிறுவனத்தின் சென்னைக்கு அருகே உள்ள உற்பத்தி தொழிற்சாலையில் இந்த கார் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், சோதனை ஓட்டம் சென்னையில் ஓட்டேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த சோதனை ஓட்டத்தில் கார் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருப்பினும், இது மார்ச் 17ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய தலைமுறை டஸ்டர் காரை அடிப்படையாக கொண்டது என்பதும், 7 இருக்கைகளை கொண்டது என்பதும் தெளிவாக தெரிகிறது. இந்த சோதனை ஓட்ட காரின் முன்பக்கத்தில் புதிய டஸ்டரில் உள்ளதை போன்று கிடைமட்டமான டிசைனில் எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட உள்ளன.

new renault bigster 7-seater suv spotted

முக்கியமான ஹெட்லைட்கள் காரின் முன்பக்கத்தில் கீழ்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. இதனால், லேயர்களால் ஆன லைட்டிங் செட்-அப் ஆக இது காட்சியளிக்கிறது. காரின் முன்பக்க கிரில் மற்றும் பம்பர் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருப்பினும், அவை கம்பீரமான மற்றும் நிமிர்ந்த வடிவத்தில் இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. பக்கவாட்டில் இருந்து பார்த்தால், புதிய பிக்ஸ்டர் கார் பெட்டகம் வடிவில் காட்சியளிக்கிறது.

இதனால், மூன்று வரிசைகளில் இருக்கைகள் உடன் உட்புறத்தில் அதிக இடவசதியை கொண்டதாக இந்த கார் இருக்கும். இந்த சோதனை பிக்ஸ்டர் காரில் 19 இன்ச்சில் பெரிய அளவில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. சக்கரங்களுக்கு மேலே வீல் ஆர்ச் கிளாடிங்குகள் காருக்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்கும் வகையில் வழங்கப்படும்.

காரின் பின்பக்கத்தில் மேற்கூரை சற்று உயரமாக வழங்கப்பட்டுள்ளதாலும், பின்பக்க ஓவர்ஹேங் கூடுதல் நீளத்தில் வழங்கப்பட்டு இருப்பதாலும், காருக்குள் 3வது வரிசையில் அமரும் பயணிகளுக்கு கூடுதல் இடவசதி கிடைக்கும் என்பது உறுதி. காரின் பின்பக்கத்தில் ரூஃப் ஸ்பாய்லர் ஸ்போர்டியான வடிவத்திலும், டெயில்லேம்ப்கள் செங்குத்தான டிசைனில் பொருத்தப்பட்டதாகவும் உள்ளன.

இந்த சோதனை ஓட்ட ஸ்பை படங்களில் பிக்ஸ்டர் காரின் உட்புறம் தெரியவில்லை என்றாலும், தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என்பது உறுதி. பிக்ஸ்டர் என்பது சர்வதேச சந்தையில் இந்த புதிய 7-சீட்டர் காரின் பெயர் ஆகும். இந்தியாவிலும் இதே பெயரில்தான் இந்த கார் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் நிறுவனம் அதன் புதிய தலைமுறை டஸ்டர் கார் மீது பலத்த எதிர்பார்ப்பு வைத்துள்ளது. அதன் வெளிப்பாடாகவே அதனை அடிப்படையாகக் கொண்ட 7-சீட்டர் காராக பிக்ஸ்டரை அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவில் 7-சீட்டர் எஸ்யூவி கார்களுக்கு மார்க்கெட் தொடர்ந்து விரிவடைந்து வருவதால், பிக்ஸ்டரின் அறிமுகம் ரெனால்ட் நிறுவனத்திற்கு இந்தியாவில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆக அமையும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, March 13, 2026, 12:59 [IST]
English summary
New renault bigster 7 seater suv car spotted in chennai check all details here
மேலும்... #renault #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+