10.49 லட்சத்தில் புதிய டஸ்டர் இதுக்குமேல் வேற எப்படி இருக்கும்! ரெனால்ட் பல வருஷமா கவனத்துடன் உருவாக்கிய கார்!

ரெனால்ட் (Renault) நிறுவனம் அதன் டஸ்டர் (Duster) காரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. ரெனால்ட்டின் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக காராக விற்பனை செய்யப்பட்டு வந்த டஸ்டரின் விற்பனை கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் நிறுத்தப்பட்டது. கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக விற்பனையில் இல்லாமல் இருந்த டஸ்டர் தற்போது புத்துணர்ச்சியான தோற்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4.34 மீட்டர் நீளம் கொண்ட மிட்-சைஸ் எஸ்யூவி காராக இருப்பினும் ரூ.10.49 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price)-இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டஸ்டர் அதெண்டிக், எவால்யூஷன், டெக்னோ, டெக்னோ+ மற்றும் ஐகானிக் என ஐந்து விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. ரூ.10.49 லட்சத்தில் எண்ட்ரி-லெவல் அதெண்டிக் (Authentic) வேரியண்ட்டில் புதிய டஸ்டர் கிடைக்கும்.

new renault duster authentic variant specifications

அதுவே, ரூ.21,000 செலுத்தி ஆர் பாஸ் (R Pass)-ஐ பெறுபவர்களுக்கு விலை ரூ.10.29 லட்சம் மட்டுமே என்பது மட்டுமின்றி, காரும் விரைவாக டெலிவிரி செய்யப்படும். ஆர் பாஸ்-க்கான ரூ.21,000 தொகை வாடிக்கையாளர்களுக்கு முழுவதுமாக திரும்ப வழங்கப்பட்டுவிடும் என ரெனால்ட் அறிவித்துள்ளது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ரெனால்ட் டஸ்டர் கார், குறைந்த விலையில் அதெண்டிக் வேரியண்ட்டில் வாங்கினால் எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

புதிய டஸ்டர் பல்வேறு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டாலும், ரூ.10.49 லட்சத்தில் கிடைக்கும் டஸ்டர் அதெண்டிக் வேரியண்ட் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும். அதாவது, இந்த என்ஜினை தவிர்த்து வேறெந்த என்ஜின் உடன் ஆவது காரை வாங்கலாம் என நினைத்தால் அது முடியாது. அதேபோல், இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் எதுவும் கிடைக்காது.

new renault duster authentic variant specifications

ஆனால், மூன்லைட் சில்வர், பேர்ல் வெள்ளை மற்றும் ஸ்டீல்த் கருப்பு என்கிற நான்கு விதமான நிறங்களுள் ஒன்றில் டஸ்டரின் இந்த எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டை வாங்கும் ஆப்ஷன் கிடைக்கிறது. இந்த நான்கில் எந்த நிறத்தில் வாங்கினாலும், கருப்பு நிற கிளாடிங்குகள் தான் காரை சுற்றிலும் கிடைக்கும். வெளிப்புற தோற்றத்தை பொறுத்தவரையில், விலை குறைவான எண்ட்ரி-லெவல் வேரியண்ட் என்பதற்காக எந்த வித்தியாசமும் இல்லை.

காரை சுற்றிலும் எல்இடி விளக்குகள் கிடைக்கும். ஆனால், புதிய டஸ்டரின் விலைமிக்க வேரியண்ட்களில் கிடைக்கக்கூடிய ரூஃப் ரெயில்கள் மற்றும் அலாய் சக்கரங்கள் எதுவும் அதெண்டிக் வேரியண்ட்டில் கிடைக்காது. மேலும், விலைமிக்க வேரியண்ட்களில் காரை சுற்றிலும் வழங்கப்படும் சில்வர் நிற ஹைலைட்களும் அதெண்டிக் வேரியண்ட்களில் இல்லை. இந்த ஹைலைட்கள், காரை பிரீமியம் தரத்தில் காட்டக்கூடியவை.

காருக்கு உள்ளே முழுவதும் கருப்பு நிற கேபினையும், துணியால் ஆன அப்ஹோல்ஸ்டரி (Upholstery)-ஐயும் கொண்டுள்ளது. எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டாக இருப்பினும், சில பிரீமியம் தரத்திலான அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, டிரைவருக்கான தகவல்களை வழங்கக்கூடிய திரை, தேவைக்கேற்ப அட்ஜெஸ் செய்யக்கூடிய ஸ்டீயரிங் சக்கரம் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி காற்றுத்துளைகளை டஸ்டர் அதெண்டிக் வேரியண்ட்டில் பெறலாம்.

ஆனால், ஏசியை மேனுவலாக மட்டுமே இந்த வேரியண்ட்டில் அட்ஜெஸ் செய்ய முடிகிறது. அதேபோல், டஸ்டரின் டாப் வேரியண்ட்களில் வழங்கப்பட்டுள்ள சில வசதிகள் இந்த வேரியண்ட்டில் கிடைக்காது. அதன்படி, பொழுதுபோக்கிற்கான இன்ஃபோடெயின்மென்ட் திரை, சன்ரூஃப், பவர்டு & வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், தன்னிச்சையாக டிம் ஆகக்கூடிய IRVM, அடாஸ் (ADAS) மற்றும் 360-டிகிரி கேமரா உள்ளிட்டவற்றை அதெண்டிக் வேரியண்ட்டில் பெற முடியாது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட்டின் புதுமையான தோற்றத்தில் இருக்கும் புதிய தலைமுறை டஸ்டர் காரை குறைந்த விலையிலாவது சொந்தமாக்கிவிட விரும்புபவர்களுக்கு இந்த எண்ட்ரி-லெவல் அதெண்டிக் வேரியண்ட் ஏற்றதாக இருக்கும். ஆரம்ப நிலை வேரியண்ட்டாக இருப்பினும், இதில் ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் விலையாக இந்த தொகுப்பில் நாங்கள் குறிப்பிட்டிருப்பது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே; ஆன்-ரோடு விலை இன்னும் சில லட்ச ரூபாய் அதிகமாக வரும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 17, 2026, 15:54 [IST]
English summary
New renault duster suv entry level authentic variant specifications check all details here
மேலும்... #renault #renault duster #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+