பட்ஜெட் விலையில் சென்னையில் உருவாகும் ரெனால்ட் காரை எந்த குறையும் சொல்ல முடியல! இதுக்கு மேல என்ன வேணும்?

புதிய ரெனால்ட் டஸ்டர் (Renault Duster), வருகிற 2026 ஜனவரி 26 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த காரில் உலகளவில் 10 இலட்சம் கி.மீ-க்கும் மேலான சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக ரெனால்ட் முடித்துள்ளது. லடாக் போன்ற சவாலான மற்றும் கடும் குளிரான இந்திய நிலப்பரப்புகளிலும், அதேநேரம் ஐரோப்பிய நாடுகளின் சூழல்களிலும் மேற்கொள்ளப்பட்ட டஸ்டரின் இந்த நீண்ட தூர சோதனை ஓட்டம் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கார் நிறுவனங்கள் தங்களது காரின் தரத்தை வெளிக்காட்டுவதற்காக அறிமுகத்திற்கு முன்னதாகவே நீண்ட தொலைவு சோதனை ஓட்டங்களில் காரை உட்படுத்துவது அரிதாக அவ்வப்போது நடக்கக்கூடிய ஒன்றே. அந்த வகையில், உலகின் மூன்று கண்டங்களில் 10 இலட்சம் கி.மீ-க்கும் மேலாக நடத்தப்பட்ட சோதனை ஓட்டங்களில் புதிய டஸ்டரை கடுமையான சூழ்நிலைகளுக்கு ரெனால்ட் உட்படுத்தியது. -23°C முதல் 55°C வரையிலான வெப்பநிலையில் கார் சோதிக்கப்பட்டது.

new renault duster suv car test

மூடிய வளாக பகுதிகளில் இருந்து பொது சாலைகள், சிறப்பு சோதனைத் தடங்கள், கடுமையான ஆஃப்-ரோடு நிலப்பரப்புகள் என அனைத்திலும் காரின் நிஜ உலக செயல்திறன் உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக, இந்தியாவின் லே-லடாக் பகுதியில் முக்கிய சோதனை நடந்தது. 18,379 அடி உயர கார்துங் லா உச்சி உள்பட லே-லடாக் பகுதியில் பல உயரமான மலைப்பகுதிகளுக்கு புதிய டஸ்டர் கார் கொண்டு செல்லப்பட்டு சோதிக்கப்பட்டது.

ஆக்ஸிஜன் குறைவான பகுதிகள், செங்குத்தான ஏற்றங்கள், கணிக்க முடியாத சாலைகள் உள்ளிட்டவை டஸ்டரின் என்ஜின் மற்றும் இயந்திர பாகங்களின் நிலைத்தன்மையைச் சோதித்தன. மேலும், தூசி மிகுந்த சுரங்கப்பாதைகள், நீர் நிறைந்த பகுதிகள், கடும் குளிர், அதிக வெப்பமான சூழல்களிலும் இந்த ரெனால்ட் எஸ்யூவி கார் ஓட்டி பார்த்து சோதிக்கப்பட்டது.

new renault duster suv car test

இந்தியாவின் குண்டு, குழியுமான சாலைகள், வேகத்தடைகள், போக்குவரத்து நெரிசல்கள் போன்ற அன்றாட சவால்களை எதிர்கொள்ளும் விதமாக நேரடியாக மாநகர சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட புதிய டஸ்டர் கார், நாட்ராக்ஸ் (NATRAX), ARAI போன்ற அரசு சோதனை மையங்களிலும் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும், இந்தியாவை தாண்டி சீனா, பிரேசில், ருமேனியா, பிரான்ஸ், செக் குடியரசு போன்ற நாடுகளிலும் இந்த காரின் சரிபார்ப்பு ஓட்டங்களை ரெனால்ட் நடத்தியது.

வெவ்வேறு சாலை மற்றும் டிரைவிங் ஸ்டைல்களிலும் புதிய டஸ்டரின் நிலையான, கணிக்கக்கூடிய செயல்திறனை உறுதிசெய்வதே இதன் நோக்கம் ஆகும். சமீபத்திய டீசரின் படி, புதிய ரெனால்ட் டஸ்டர் முந்தைய டஸ்டர் மாடலின் உறுதியான தோற்றத்தைத் தக்கவைக்கும். மெல்லியதான வடிவிலான ஹெட்லேம்ப் யூனிட்டுடன், புருவம் போன்ற வடிவத்தில் LED DRL-கள் வழங்கப்பட உள்ளன.

புதிய டஸ்டரின் முன்பக்கத்தில் கிரில் வெளிநாட்டு மாடலில் இருந்து மாறுபடும். முன்பக்க பம்பருடன் இணைந்த குறுகிய காற்று பிளவுகள் மற்றும் ஃபாக் விளக்குகளைக் கொண்டதாக இந்திய டஸ்டர் விற்பனை செய்யப்பட உள்ளது. பக்கவாட்டில், இந்த ரெனால்ட் எஸ்யூவி கார் வழக்கம்போல் சதுர வடிவத்தை கொண்டுள்ளது. பின்பக்க கதவு கைப்பிடிகள் காரின் C-பில்லரில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.

new renault duster suv car test

வீல் ஆர்ச்சுகளைச் சுற்றியுள்ள கிளாடிங் ஆனது வெளிநாட்டு டஸ்டரில் இருந்து அப்படியே பெற்று வழங்கப்பட உள்ளது. புதிய டஸ்டரின் டாப் வேரியண்ட்களில் 18-இன்ச் அலாய் சக்கரங்கள், பின் பகுதியில் வ்ராப்-அரவுண்ட் டெயில் லேம்ப் வடிவமைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய டஸ்டர் இந்தியாவில் டீசல் என்ஜின் உடன் மட்டுமே கிடைத்தது.

ஆனால், வரவிருக்கும் இந்தியாவிற்கான புதிய டஸ்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களுடன் மட்டுமே வரும். வெளிநாட்டு டஸ்டரில் வழங்கப்படவுள்ள, அதிகப்பட்சமாக 156 எச்பி இயக்க ஆற்றலை வழங்கக்கூடிய 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் இந்திய மாடலிலும் இடம்பெறலாம். ஆல்-வீல்-டிரைவ் (AWD) ஆப்ஷன் வழங்கப்படுமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான செயல்திறனை புதிய ரெனால்ட் டஸ்டர் காரில் உறுதிப்படுத்த இந்த நீண்ட தூர சோதனை ஓட்டம் உதவியது. இந்தியா போன்ற சவாலான சந்தைகளில், நிஜ உலக பயன்பாட்டிற்குத் தயாரான காரை வழங்கும் ரெனால்ட்டின் உறுதிப்பாட்டைக் இது காட்டுகிறது. புதிய டஸ்டர் தன் பலமான தன்மையைத் தக்கவைத்து, நவீன சாலை தரங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் வருகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 7, 2026, 22:42 [IST]
English summary
New renault duster tested for more than 1 million kilometres across 3 continents
மேலும்... #renault #renault duster #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X