ஹூண்டாய் கிரெட்டாவை விட குறைந்த விலையில் ரெனால்ட் கார்! 5-சீட்டர் எஸ்யூவி காரில் எதை வாங்குவது?

ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) கார் இந்திய சந்தையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2022 பிப்ரவரி மாதத்தில் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டஸ்டர் எஸ்யூவி புதிய தோற்றத்தில் களமிறக்கப்பட்டுள்ளது. டீசல் என்ஜின் ஆப்ஷன் இல்லாமல், பெட்ரோல் மற்றும் ஹைப்ரீட் (Hybrid) ஆப்ஷன்களில் மட்டுமே மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரப்படும் புதிய டஸ்டருக்கு ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் கிரெட்டா (Creta) முக்கிய போட்டியாக இருக்கும்.

டஸ்டருக்கு விற்பனையில் கிரெட்டா போட்டியாக இருப்பது இது ஒன்றும் முதல்முறை அல்ல. 2022ஆம் ஆண்டில் விற்பனை நிறுத்தப்பட்ட சமயத்திலும் இந்த ரெனால்ட் எஸ்யூவி காருக்கு கிரெட்டா முக்கிய போட்டியாக இருந்தது. அதன்பின் கிரெட்டாவும் சிலமுறை அப்கிரேட் செய்யப்பட்டுள்ளதால், டஸ்டர் மற்றும் கிரெட்டாவுக்கு இடையேயான போட்டி வழக்கம்போல் சவாலானதாக இருக்கும் என்பது உறுதி.

renault duster vs hyundai creta

தோற்றம் மற்றும் ஸ்டைல்: புதிய டஸ்டர் கார் ரெனால்ட்டின் உலகளாவிய சி.எம்.எஃப்-பி பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ரெனால்ட்டின் வழக்கமான பிளாட்ஃபார்ம்களை காட்டிலும் அளவில் பெரியது என்பதால், அதற்கேற்ப அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய டஸ்டரும் அளவில் பெரியதாக உள்ளது. அதேபோல், பழைய டஸ்டர் உடன் ஒப்பிடுகையில் புதிய டஸ்டரின் முன் மற்றும் பின்பக்கங்கள் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

முன்பக்கத்தில், 'DUSTER' என்கிற எழுத்துகள் உடன் எல்இடி ஹெட்லேம்ப்களும், பின்பக்கத்தில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்களும் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக புதிய டஸ்டர் முன்பை விட முரட்டுத்தனமான தோற்றத்திலும், எஸ்யூவி கார்களுக்கே உண்டான நிமிர்ந்த உடலமைப்பிலும் உள்ளது. மறுப்பக்கம், ஹூண்டாய் கிரெட்டாவின் மாடர்ன் டிசைனை பற்றி விவரிக்கவே தேவை இருக்காது என நினைக்கிறேன்.

renault duster vs hyundai creta

ஏனெனில் அந்த அளவிற்கு கிரெட்டாவின் மாடர்ன் லுக்கை பற்றி நம் அனைவருக்குமே தெரியும். முன்பக்கத்தில் ஃபுல்-எல்இடி லைட்டிங் செட்-அப் கிடெட்டாவின் வெளிப்புற தோற்றத்தில் முக்கிய அங்கமாகும். ஒட்டுமொத்தத்தில், கிரெட்டா ஆனது நகர்புறங்களுக்கு ஏற்ற தோற்றத்தையும், புதிய டஸ்டர் முரட்டுத்தனமான எஸ்யூவி தோற்றத்தையும் கொண்டுள்ளன.

என்ஜின்: ஏற்கனவே கூறியதுபோல், புதிய டஸ்டரில் டீசல் என்ஜின் ஆப்ஷன் எதுவும் வழங்கப்படவில்லை. அதேபோல், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படவில்லை. புதிய டஸ்டரில் வழங்கப்பட்டிருக்கும் இரண்டுமே டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். இதில் 1 லிட்டர் டர்போ என்ஜின் 3 சிலிண்டர்களை மட்டுமே கொண்டிருக்கும் நிலையில், ரெனால்ட்டின் புதிய 1.3 டர்போ என்ஜின் 4 சிலிண்டர்களை கொண்டுள்ளது.

Feature Renault Duster (2026) Hyundai Creta
Engine Options 1.0L TCe Turbo, 1.3L Turbo 1.5L MPi, 1.5L Turbo GDI, 1.5L CRDi Diesel
Power 100 PS, 163 PS 115 PS, 160 PS, 116 PS
Torque 166 Nm, 280 Nm 143.8 Nm, 253 Nm, 250 Nm
Transmission 6-Speed Manual, 6-Speed DCT with E-shifter 6-Speed Manual, iVT, 6-Speed AT, 7-Speed DCT
No. of Cylinders 3 Cylinders, 4 Cylinders 4 Cylinders

கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை பொறுத்தவரையில், புதிய டஸ்டரில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் இ-ஷிஃப்டர் உடன் 6-ஸ்பீடு டிசிடி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. அதுவே, ஹூண்டாய் கிரெட்டா ஆனது 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இது இல்லாமல், ஹூண்டாய் கிரெட்டா இவி எலெக்ட்ரிக் காரும் விற்பனை செய்யப்படுகிறது. ரெனால்ட் டஸ்டரிலும் விரைவில் ஹைப்ரீட் (Hybrid) என்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட உள்ளது. கிரெட்டாவில் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களாக 6-ஸ்பீடு மேனுவல், ஐவிடி, 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி என ஏகப்பட்டவை வழங்கப்படுகின்றன.

பரிமாண அளவுகள்: ஏற்கனவே கூறியதுபோல், புதிய பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டதினால் புதிய டஸ்டர் அளவில் பெரியதாக உள்ளது. அந்த வகையில், கிரெட்டா உடன் ஒப்பிடுகையில் புதிய டஸ்டர் நீளம், அகலம், உயரம் மற்றும் வீல்பேஸ் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) என அனைத்திலும் பெரியதாக உள்ளது. அதேபோல், டஸ்டரின் கிரவுண்ட் கிளியரென்ஸ் (தரையில் இருந்து காரின் அடிப்பகுதியின் உயரம்) அளவும் அதிகமாக உள்ளது.

Dimension Renault Duster Hyundai Creta
Length 4346 mm 4330 mm
Width 1815 mm 1790 mm
Height 1701 mm 1635 mm
Wheelbase 2657 mm 2610 mm
Fuel Tank Capacity 50 L 50 L
Ground Clearance 212 mm 190 mm

தொழிற்நுட்ப அம்சங்கள்: புதிய டஸ்டர் மற்றும் கிரெட்டா என இரண்டும் தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த மற்றும் அட்வான்ஸான தோற்றம் கொண்ட கேபினை கொண்டுள்ளன. லேட்டஸ்ட் கார் என்பதால் புதிய டஸ்டரின் கேபின் மிகவும் ஸ்போர்டியான தோற்றத்தில் இருக்கும் நிலையில், கிரெட்டாவின் கேபின் நேர்த்தியான டிசைனில் வடிவமைக்கப்படுகிறது. டஸ்டரை போன்று ரக்டு டிசைனில் உட்புற கேபினை எதிர்பார்ப்பவர்களுக்காகவே கிரெட்டாவில் நைட் எடிஷன் (Knight Edition) விற்பனை செய்யப்படுகிறது.

Feature Category Renault Duster (2026) Hyundai Creta
Infotainment & Display 10.1-inch OpenR Link with Google Built-in; 10.25-inch Digital Cluster Seamless Integrated 10.25-inch Infotainment & Digital Cluster
Seating & Comfort 6-way Powered & Ventilated Seats; Leatherette Upholstery 8-way Power & Ventilated Seats with Memory Function; Rear Window Sunshade
Climate & Convenience Dual-Zone AC; Air Purifier; MY Renault App Connectivity Dual-Zone Climate Control; Passenger Seat Walk-in Device; Bose 8-Speaker System
Safety & ADAS 6 Airbags; Level 2 ADAS (17 Features); 360-degree Camera 6 Airbags; Level 2 ADAS; Traction Control (Snow, Mud, Sand)
Interior & Lighting 48-Color Ambient Lighting; Elevated Centre Console with E-Shifter Soothing Amber Ambient Lighting; Sporty Pedals (Knight Edition)
Exterior & Wheels All LED Setup; Connected Tail Lamps; 18-inch Alloy Wheels All LED Setup; Connected Tail Lamps; 18-inch Diamond Cut Alloys
Charging & Connectivity Wireless Smartphone Charger; Wireless Android Auto/Apple CarPlay Wireless Charging; USB Type-C Ports; BlueLink Connected Car Tech

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரு எஸ்யூவி கார்களில் எது சிறந்தது என்பதை தீர்மானிப்பது சற்று சிரமம்தான். இருப்பினும், இதுவரையில் இந்திய மக்கள் அளித்த ஆதரவின்படி பார்த்தோமேயானால், கிரெட்டா சிறந்ததாக விளங்குகிறது. ஆனால், புதிய டஸ்டர் இப்போதுதான் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதால், அது எந்த அளவிற்கு மார்க்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். புதிய மாடர்ன் எஸ்யூவி காராக அறிமுகம் செய்யப்பட்டாலும், புதிய டஸ்டரின் விலைகள் கிரெட்டாவை விட ரூ.30 ஆயிரம் குறைவாக துவங்குகின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 24, 2026, 13:38 [IST]
English summary
New renault duster vs hyundai creta suv cars comparison design features engine
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+