மாருதி கார்களின் விலையில் பிரம்மாண்டமான இரு எம்பிவி கார்கள்! உள்ளே குடும்பமே நடத்தலாம்!

நிசான் (Nissan) நிறுவனத்தின் டிரைபர் (Triber) கார் சமீபத்தில் 2026ஆம் ஆண்டை முன்னிட்டு அப்கிரேட் (Upgrade) செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெனால்ட்டின் எம்பிவி (MPV) வகையை சேர்ந்த காரான இதற்கு விற்பனையில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) போன்ற இந்தியாவின் பிரபலமான எம்பிவி கார்கள் போட்டியாக உள்ளன.

அதேநேரம், நிசான் (Nissan) நிறுவனத்தின் கிராவைட் (Gravite) எம்பிவி காரும் போட்டியாக உள்ளது. இத்தனைக்கும் நிசானும், ரெனால்ட்டும் கூட்டணியில் உள்ளன. நிசான் கிராவைட் எம்பிவி கார் இந்த 2026ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரெனால்ட் டிரைபர் மற்றும் நிசான் கிராவைட் கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2026 renault triber vs nissan gravite

தொழிற்நுட்ப வசதிகள்: 2026 டிரைபரில் ஆடியோ & மொபைல் கால் கண்ட்ரோல்களை கொண்ட ஸ்டீயரிங் சக்கரம், டிரைவர் சீட் ஆர்ம்ரெஸ்ட், உயரத்தை அட்ஜெஸ் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை, பின்பக்க விண்ட்ஷீல்டில் பனி படர்வதை தடுக்கும் வசதி, எலெக்ட்ரிக் மூலமாக மடக்கக்கூடிய பின்புறத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகள் மற்றும் 8-இன்ச் டச் ஸ்க்ரீன் டிஜிட்டல் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் என ஏகப்பட்ட புதிய வசதிகளை ரெனால்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இவற்றுடன், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள், க்ரூஸ் கண்ட்ரோல், கூல்டு க்ளோவ்பாக்ஸ், தன்னிச்சையாக செயல்படும் ஹெட்லைட்கள், காரை ஸ்டார்ட்/ ஸ்டாப் செய்ய புஷ் பொத்தான் உள்ளிட்ட வசதிகளும் புதிய டிரைபரில் வழங்கப்பட்டுள்ளன. மறுப்பக்கம், நிசான் கிராவைட்டில் டிரைபரை காட்டிலும் அசரடிக்கும் தொழிற்நுட்ப வசதிகள் எதுவும் இல்லை.

2026 renault triber vs nissan gravite

புதிய டிரைபரை போன்று 8-இன்ச் டச் ஸ்க்ரீன் டிஜிட்டல் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆடியோ & மொபைல் கால் கண்ட்ரோல்கள் உடன் ஸ்டீயரிங் சக்கரம், உயரத்தை அட்ஜெஸ் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை, மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள், எலெக்ட்ரிக் மூலமாக மடக்கக்கூடிய பின்புறத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகள் மற்றும் கூல்டு க்ளோவ்பாக்ஸ் போன்றவைதான் வழங்கப்படுகின்றன.

இவற்றுடன், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், முன் இருக்கைகளுக்கு மத்தியில் ஆர்ம்ரெஸ்ட் போன்றவையும் கிராவைட்டில் கிடைக்கின்றன. மேலும், சாவி வைத்திருப்பவர் காரை விட்டு தூரமாக சென்றால் தானாக கதவுகள் லாக்/ அன்லாக் ஆகும் வசதியும் கிராவைட்டில் கிடைக்கிறது. இருப்பினும், பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பூட் ஸ்பேஸ் (Boot Space)-இல் கிராவைட்டை காட்டிலும் புதிய டிரைபர் வாடிக்கையாளர்களை கவரக்கூடியதாக உள்ளது.

2026 renault triber vs nissan gravite

ஏனெனில், கிராவைட்டின் பூட் ஸ்பேஸை அதிகப்பட்சமாக 625 லிட்டர்கள் வரையில் அதிகரித்துக் கொள்ள முடியும் நிலையில், புதிய டிரைபரில் பூட் ஸ்பேஸை சுமார் 1,065 லிட்டர்கள் வரையில் அதிகரித்துக் கொள்ளும் வசதியை 2026ஆம் ஆண்டிற்கான அப்கிரேடாக ரெனால்ட் வழங்கியுள்ளது. 1,065 லிட்டர் கொள்ளளவில் பூட் ஸ்பேஸை பெறுவதற்கு டிரைபரில் 3வது வரிசையை மடக்குவது மட்டுமின்றி, 2வது இருக்கை வரிசையையும் மடக்க வேண்டும்.

என்ஜின்: டிரைபரில் 1 லிட்டர் 3-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உடன் வழங்கப்படுகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 71 பிஎச்பி மற்றும் 96 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. ரெனால்ட்டும், நிசானும் கூட்டணியில் உள்ளதால் இதே பெட்ரோல் என்ஜின் தான் அதே கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உடன் கிராவைட்டில் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழிற்நுட்ப அம்சங்கள் மற்றும் என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை போன்று விலைகளிலும் இந்த இரு கார்களுக்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. இரண்டும், ரூ.5.60 லட்சத்தில் இருந்து ரூ.8.70 லட்சத்திற்குள் விலையை கொண்டுள்ளன. தோற்றத்திலும் இரு கார்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே உள்ளன. ஆகவே, இந்த இரு எம்பிவி கார்களில் ஒன்றை வாங்குவது என்பது ரெனால்ட் பிராண்டில் காரை வாங்க போகிறீர்களா அல்லது நிசான் பிராண்டில் காரை வாங்க போகிறீர்களா என்பதை பொறுத்தே அமையும்.

Article Published On: Friday, May 1, 2026, 22:33 [IST]
English summary
New renault triber mpv vs nissan gravite mpv car comparison check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X