PUC இல்லையா? பெட்ரோல், டீசல் கிடையாது! இன்று முதல் டெல்லி-NCR-ல் புதிய கட்டுப்பாடு!

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) வாகன மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு புதிய நடவடிக்கையை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, இன்றுமுதல் (அக்டோபர் 1, 2026) செல்லத்தக்க மாசு உமிழ்வு சான்றிதழ் (PUC) இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி உள்ளிட்ட எரிபொருட்களை வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது வாகனங்களுக்கு வழங்கப்படும் PUC சான்றிதழ், அந்த வாகனம் நிர்ணயிக்கப்பட்ட மாசு உமிழ்வு வரம்புக்குள் செயல்படுகிறதா என்பதை உறுதி செய்யும் முக்கிய ஆவணமாக உள்ளது. இதுவரை PUC இல்லாத வாகனங்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது எரிபொருள் நிரப்புவதையும் கட்டுப்படுத்தும் வகையில் புதிய நடவடிக்கை கொண்டு வரப்பட்டுள்ளது.

No PUC No Fuel in Delhi-NCR

இந்த விதிமுறை டெல்லி மட்டுமின்றி தேசிய தலைநகர் பிராந்தியத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கும் பொருந்தும். டெல்லியைச் சுற்றியுள்ள ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் NCR பகுதிகளிலும் இந்த நடவடிக்கை அமல்படுத்தப்படுகிறது. இதனால் இந்தப் பகுதிகளுக்குள் அடிக்கடி பயணம் செய்யும் வாகன உரிமையாளர்களும் தங்களுடைய PUC சான்றிதழின் காலாவதி தேதியை கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.

Also Read

இந்த விதியை நடைமுறைப்படுத்துவதில் தானியங்கி நம்பர் பிளேட் அடையாளம் காணும் தொழில்நுட்பம் (ANPR) முக்கிய பங்கு வகிக்கிறது. எரிபொருள் நிலையங்களில் பொருத்தப்படும் கேமராக்கள் மூலம் வாகனத்தின் பதிவு எண்ணை அடையாளம் கண்டு, அந்த வாகனத்துக்கு செல்லுபடியாகும் PUC சான்றிதழ் உள்ளதா என்பதைச் சரிபார்க்கும் வகையில் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

No PUC No Fuel in Delhi-NCR

டெல்லியில் உள்ள பல எரிபொருள் நிலையங்களில் ஏற்கனவே ANPR கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒவ்வொரு வாகனத்தையும் எரிபொருள் நிலைய ஊழியர்கள் கைமுறையாகச் சோதனை செய்ய வேண்டிய அவசியம் குறையும். வாகனத்தின் பதிவு எண் அடையாளம் காணப்பட்டவுடன், தொடர்புடைய PUC தகவல்களை மின்னணு முறையில் சரிபார்க்கும் வகையில் இந்த அமைப்பு செயல்படும்.

PUC சான்றிதழ் காலாவதியாகிவிட்டால், வாகன உரிமையாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட மாசு உமிழ்வு பரிசோதனை மையத்துக்குச் சென்று புதிய சான்றிதழைப் பெற வேண்டும். குறிப்பாக டெல்லி-NCR பகுதியில் தினசரி கார் அல்லது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள், எரிபொருள் நிரப்புவLதற்கு செல்லும் முன்னரே தங்களுடைய PUC சான்று நிலையை சரிபார்த்துக் கொள்வது அவசியம்.

Also Read

டெல்லி-NCR பகுதியில் குளிர்காலத்தில் மாசு அதிகரிக்கும் சூழல் உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதத்தில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு மட்டுமின்றி, சாலைகளில் தூசி, கட்டுமானப் பணிகள் மற்றும் இதர காரணங்களால் ஏற்படும் மாசு பிரச்னையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில், வாகனங்களால் ஏற்படும் மாசுபாடும் பெரும் பிரச்னையாக இருப்பதால், இந்த அதிரடி நடவடிக்கை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கையின் மூலமாக, வாகன உரிமையாளர்கள் தங்களுடைய வாகனங்களின் மாசு உமிழ்வு சோதனையை முறையாக மேற்கொள்ள அரசு வழிவகை ஏற்படும் என்று கருதப்படுகிறது.

இனி டெல்லி, நொய்டா, குர்கான் உள்பட அனைத்து என்சிஆர் பிராந்திய பகுதிகளுக்கு செல்லும் வெளிமாநில வாகனங்களும் இனி இந்த மாசு உமிழ்வுச் சான்று செல்லத்தக்க வைத்திருப்பதும் அவசியமாகிறது. இல்லையெனில் அங்கு எரிபொருள் நிரப்புவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும் நிலை உள்ளதை கருத்தில்கொள்ள வேண்டியது அவசியம்.

Article Published On: Thursday, October 1, 2026, 12:35 [IST]
English summary
New rule october 1 2026 no puc no fuel delhi ncr region
மேலும்... #petrol #diesel
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out