ரூ.9.99 லட்சத்தில் புதிய டாடா கர்வ் சீரிஸ் X கார் அறிமுகம்... முக்கிய அம்சங்கள் முழுவிபரம்!!
இந்திய சந்தையில் எஸ்யூவி கூபே மாடல்களுக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்திய டாடா கர்வ் கார், தற்போது Curvv Series X என்ற புதிய பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் அம்சங்கள், பிரீமியம் வசதிகள் மற்றும் பல்வேறு தேர்வுகளை வழங்கும் வகையில் இந்த புதிய சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய டாடா கர்வ் சீரிஸ் X மாடலானது Smart X, Pure X, Pure X+, Creative X+, Accomplished X மற்றும் Accomplished X+ உள்ளிட்ட பல்வேறு வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 8 வேரியண்ட்டுகளில் கிடைத்த நிலையில், தற்போது 6 வேரியண்ட்டுகளில் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், விலை குறைவான வேரிண்ட்டுகளிலும் அதிக சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய கர்வ் சீரிஸ் எக்ஸ் காரின் ஆரம்ப நிலையிலான Smart X வேரியண்ட் ரூ.9,99,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1.2 லிட்டர் Revotron பெட்ரோல் எஞ்சின் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இதில் சொகுசான இருக்கைகள், 17 அங்குல சக்கரங்கள், பின்புற இருக்கைக்கும் ஆர்ம் ரெஸ்ட் வசதி, ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் டிரைவிங் மோடுகள் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பைப் பொறுத்தவரை 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்வேளை விளக்குகள் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.
அடுத்ததாக வரும் Pure X மற்றும் Pure X+ வேரியண்ட்டுகளில் கூடுதல் வசதிகள் கொடுக்கப்படுகிறது. Pure X வேரியண்ட்டானது ரூ.10.99 லட்சம் முதல் கிடைக்கிறது. இதில் 10.25 அங்குல Ultra View திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, 6 ஸ்பீக்கர்களுடன் ஆடியோ சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
Pure X+ வேரியண்ட்டில் கூடுதல் பிரீமியம் அம்சங்களுடன் 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இதன் விலை ரூ.11.79 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், Pure X+ வேரியண்ட்டை அடிப்படையாகக் கொண்டு டார்க் எடிசன் வேரியண்ட்டிலும் கிடைக்கும். இதில் கருப்பு நிற இன்டீரியர் மற்றும் வெளிப்புற அம்சங்கள் இடம்பெறுகின்றன. இதன் ஆரம்ப விலை ரூ.11.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
அதிக பிரீமியம் அம்சங்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக Creative X+ வேரியண்ட்டானது ரூ.12.90 லட்சம் விலையில் கிடைக்கும். இதில் குரல் மூலமாக கட்டுப்படுத்தும் வசதி கொண்ட சன்ரூஃப், 18 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், 360 டிகிரி கேமரா, 3டி சர்ரவுண்ட் மியூசிக் சிஸ்டம் மற்றும் 10.25 அங்குல திரையுடன் டிஜிட்டல் காக்பிட் ஆகியவை இடம்பெறுகின்றன.
கர்வ் சீரிஸ் X காரின் விலை உயர்ந்த வேரியண்ட்டுகளான Accomplished X மற்றும் Accomplished X+ அதிக தொழில்நுட்ப வசதிகளைப் பெறுகின்றன. இதில் லெவல் 2 அடாஸ் வசதி, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ஜேபிஎல் மியூசிக் சிஸ்டம், வென்ட்டிலேட்டட் இருக்கைகள், ஏர் பியூரிஃபயர் மற்றும் iRA கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
Accomplished X+ வேரியண்ட்டில் அசைவு மூலமாக திறந்து மூடும் வசதியும் உள்ளது. டாடா கர்வ் சீரிஸ் X வேரியண்ட் வாரியான விலை கீழே உள்ள விலைகள் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில், நிறுவனத்தின் வெளியிட்டுள்ள பிரஸ் ரிலீஸில் குறிப்பிடப்பட்டுள்ளன.
| வேரியண்ட் | 1.2 Revotron MT | 1.2 Revotron DCT | 1.2 Hyperion GDI DCT | 1.5 Kryojet MT | 1.5 Kryojet DCT |
|---|---|---|---|---|---|
| Smart X | ₹9.99 லட்சம் | – | – | – | – |
| Pure X | ₹10.99 லட்சம் | ₹12.29 லட்சம் | – | ₹12.29 லட்சம் | – |
| Pure X+ | ₹11.79 லட்சம் | ₹13.09 லட்சம் | – | ₹13.09 லட்சம் | – |
| Pure X+ DARK | ₹11.99 லட்சம் | ₹13.29 லட்சம் | – | ₹13.29 லட்சம் | – |
| Creative X+ | ₹12.90 லட்சம் | ₹14.20 லட்சம் | – | ₹14.20 லட்சம் | – |
| Creative X+ DARK | ₹13.15 லட்சம் | ₹14.45 லட்சம் | – | ₹14.45 லட்சம் | – |
| Accomplished X | ₹13.99 லட்சம் | ₹15.29 லட்சம் | – | ₹15.29 லட்சம் | – |
| Accomplished X DARK | ₹14.24 லட்சம் | ₹15.54 லட்சம் | – | ₹15.54 லட்சம் | – |
| Accomplished X+ | – | – | ₹18.49 லட்சம் | – | ₹18.74 லட்சம் |
| Accomplished X+ DARK | – | – | ₹18.74 லட்சம் | – | ₹18.99 லட்சம் |
டாடா கர்வ் சீரிஸ் X காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க்கையும் வழங்கும். மேனுவல் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் கிடைக்கிறது. இதுதவிர, 1.2 லிட்டர் ஜிடிஐ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 125 பிஎஸ் பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் டிசிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படுகிறது.
இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎஸ் பவரையும், 260 என்எம் டார்க்கையும் வழங்கும். இது மேனுவல் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கிடைக்கிறது.
புதிய டாடா கர்வ் சீரிஸ் X மாடலானது ரூ.9.99 லட்சம் முதல் ரூ.18.99 லட்சம் வரையிலான விலையில் பல்வேறு தேர்வுகளில் வந்துள்ளது. குறைந்த விலையில் கூபே எஸ்யூவி வடிவமைப்பை விரும்புபவர்களுக்கும், ADAS, பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, பிரீமியம் ஆடியோ மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற வசதிகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கும் சரியான வேரியண்ட் தேர்வுகளுடன் கிடைக்கிறது.
The article has been updated with updated details in table.


Click it and Unblock the Notifications

