டாடா ஷோரூமுக்கு வரும் எல்லாரது பார்வையும் இந்த கார் மீதுதான்! அறிமுகத்துக்கு இன்னும் 2 நாள் மட்டுமே இருக்கு!

டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் (Tata Punch Facelift) கார் வருகிற 2026 ஜனவரி 13 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, நாட்டின் பல்வேறு டீலர்ஷிப் ஷோரூம்களை (Dealership Showrooms) வந்தடையத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், ஷோரூமை வந்தடைந்த புதிய பன்ச் சிஎன்ஜி (CNG) காரின் படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை பெற்றுள்ளன.

புதுப்பிக்கப்பட்ட பன்ச் காம்பாக்ட் எஸ்யூவி கார் வெளி மற்றும் உட்புறத்தில் பல புதிய அம்சங்களுடனும், புதிய என்ஜின் ஆப்ஷன்கள் உடனும் வருகிறது. மேலும், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பன்ச் சிஎன்ஜி காரும் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெறுகிறது. 2026 பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஆறு வேரியண்ட்களும், 'கூர்க் க்ளவுட்ஸ்' (Coorg Clouds) என்ற புதிய நிறம் உட்பட ஆறு வண்ணங்களில் கிடைக்க உள்ளது.

new tata punch cng facelift cars at dealership showrooms

விலையை தவிர்த்து, புதிய பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரின் மற்ற விவரங்கள் அனைத்தும் டாடா மோட்டார்ஸ் இணையதளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி பார்க்கும்போது, வாங்குபவர்களுக்குப் பல தரப்பட்ட தேர்வுகளை இந்த காரின் மாறுபட்ட வேரியண்ட்கள் வழங்குகின்றன. இந்த காரின் வெளிப்புற வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லைட்கள், கருப்பு நிற அலாய் சக்கரங்கள், டிசைன் மாற்றியமைக்கப்பட்ட முன் மற்றும் பின்பக்க பம்பர்கள், புதிய LED DRL-கள், மேம்படுத்தப்பட்ட டிசைனில் கிரில் மற்றும் பின்புறத்தில் டெயில்லைட்களை இணைக்கும் LED லைட் பார் ஆகியவை பன்ச் காரின் வெளிப்புறத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஆகும். இந்த மாற்றங்கள் பன்ச் மாடலுக்கு நவீன தோற்றத்தை அளிக்கின்றன.

new tata punch cng facelift cars at dealership showrooms

உட்புறத்தில், இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் மிதக்கும் எஃபெக்ட்டில் 10.25 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வருகிறது. ஒளிரும் டாடா லோகோவுடன் கூடிய புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் சக்கரம், கர்வ் காரில் இருந்து பெறப்பட்ட டச் மூலம் கண்ட்ரோல் செய்யக்கூடிய AC கண்ட்ரோல் பேனல், A-பில்லர்களில் ட்வீட்டர்கள், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட சென்டர் கன்சோல் பகுதி ஆகியவற்றை கொண்டுள்ளது.

பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரின் கேபினை சாம்பல், கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களுள் ஒன்றில் வாங்கலாம். என்ஜின் ஆப்ஷன்களில், 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழக்கம் போல வழங்கப்படும். கூடுதலாக, ஒரு 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனும் பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த டர்போ என்ஜின் கூடுதல் இயக்க ஆற்றலை வழங்கக்கூடியது ஆகும்.

new tata punch cng facelift cars at dealership showrooms

புதிய என்ஜின் ஆப்ஷன் சேர்க்கப்பட்டு இருந்தாலும், வழக்கமான 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி (AMT) கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் தான் மாற்றமின்றி தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. புதிய டர்போ-பெட்ரோல் என்ஜினை பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் பெறலாம். புதிய பன்ச் சிஎன்ஜி ஃபேஸ்லிஃப்ட் காரின் வேரியண்ட் குறித்த தகவல்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் இருந்தே டாடா சிஎன்ஜி கார்களில் வழங்கப்படும் இரட்டை சிலிண்டர் அமைப்புதான் புதிய பன்ச் சிஎன்ஜி ஃபேஸ்லிஃப்ட் காரிலும் தொடரப்படவுள்ளது. ஏனெனில், இந்த அமைப்பு பூட் ஸ்பேஸை அதிகரிக்கிறது. மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங், கூடுதல் அம்சங்கள், சிஎன்ஜி நடைமுறைத்தன்மை மற்றும் மேம்பட்ட செயல்திறன் ஆகியவற்றுடன், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் ஒரு முழுமையான புதுப்பிப்பாக அமைகிறது.

new tata punch cng facelift cars at dealership showrooms

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் டாடா பன்ச் மாடலும் ஒன்றாகும். இதன் சிறப்பான விற்பனைக்கு அதன் சிஎன்ஜி வெர்சனும் ஒரு முக்கிய காரணம் ஆகும். இதனாலேயே, பன்ச் காரை அப்கிரேட் செய்யும்போது அதன் சிஎன்ஜி வெர்சனையும் அப்கிரேட் செய்வது அவசியமாகிறது. புதிய பன்ச் சிஎன்ஜி ஃபேஸ்லிஃப்ட் கார்கள் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளதால், புக் செய்தவர்களுக்கு டெலிவிரி (Delivery) கொடுக்கும் பணிகள் விரைவாகவே துவங்கப்படும்.

More from DriveSpark

Article Published On: Sunday, January 11, 2026, 21:51 [IST]
English summary
New tata punch cng facelift cars starts to arrive dealership showrooms ahead of launch
மேலும்... #tata motors #cng car #car showroom #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X