எதோ சாப்பாடு ஆர்டர் பண்ற மாதிரி புது டாடா காரை வாங்கி குவிக்கும் மக்கள்! வயித்தெரிச்சலில் போட்டி நிறுவனங்கள்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த புதிய டாடா சியரா (Tata Sierra), கடந்த நவம்பர் 25ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த டிசம்பர் 16ம் தேதியில் இருந்து புதிய டாடா சியரா காருக்கு முன்பதிவுகள் (Bookings) ஏற்கப்பட்டு வருகின்றன.

புக்கிங் தொடங்கப்பட்ட முதல் நாளே, அதாவது கடந்த டிசம்பர் 16ம் தேதியில் மட்டும், டாடா சியரா காருக்கு 70 ஆயிரம் முன்பதிவுகள் குவிந்தன. இந்த சூழலில் புதிய டாடா சியரா காருக்கு கிடைத்துள்ள முன்பதிவுகளின் எண்ணிக்கை தற்போது 1 லட்சத்தை கடந்துள்ளது. இது குறித்து ஆட்டோகார் ப்ரொஃபஷனல் செய்தி வெளியிட்டுள்ளது.

Tata Sierra Side Design

புதிய டாடா சியரா காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதை முன்பதிவு எண்ணிக்கை நமக்கு மிகவும் தெளிவாக எடுத்து காட்டுகிறது. தற்போது புதிய சியரா காரின் உற்பத்தியை அதிகரிப்பதிலும், முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு முடிந்த வரை புதிய சியரா காரை விரைவாக டெலிவரி செய்வதிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

வரும் மார்ச் மாதத்திற்கு உள்ளாக, அதாவது அடுத்த மாதத்திற்கு உள்ளாக, ஒரு மாதத்திற்கு 15 ஆயிரம் புதிய சியரா கார்களை உற்பத்தி செய்ய வேண்டும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது நடக்கும்பட்சத்தில் ஒரு ஆண்டுக்கு சுமார் 1.80 லட்சம் டாடா சியரா கார்களை உற்பத்தி செய்ய முடியும்.

Tata Sierra Interior

இதன் மூலம் புதிய டாடா சியரா காரை முன்பதிவு செய்து விட்டு காத்து கொண்டிருப்பவர்களுக்கு விரைவாக டெலிவரி கிடைக்கும். தற்போதைய நிலையில் புதிய டாடா சியரா காருக்கான காத்திருப்பு காலம் (Waiting Period) 3-4 மாதங்களாக உள்ளது. அதாவது புதிய டாடா சியரா காரை நீங்கள் இன்று முன்பதிவு செய்தால், 3-4 மாதங்கள் கழித்துதான் டெலிவரி கிடைக்கும்.

ஆனால் வேரியண்ட்கள், கலர் ஆப்ஷன்கள் மற்றும் டீலர்ஷிப்களை பொறுத்து, இந்த காத்திருப்பு காலம் மாறுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே காத்திருப்பு காலம் குறித்த உறுதியான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், உங்களுக்கு அருகில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பை அணுகுவது நல்லது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் புதிய டாடா சியரா காரின் ஆரம்ப விலை வெறும் 11.49 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால்தான், புதிய டாடா சியரா காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பை வாரி வழங்கியுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா சியரா காரில் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு, பனரோமிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என 3 இன்ஜின் ஆப்ஷன்களையும் (Engine Options) புதிய டாடா சியரா கொண்டுள்ளது. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, புதிய டாடா சியராவை, மிகவும் வெற்றிகரமான தயாரிப்பாக மாற்றியுள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, February 6, 2026, 13:07 [IST]
English summary
New tata sierra receives over 1 lakh bookings check all details here
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+