மிடில்-கிளாஸ் மக்கள் தான் முக்கியமான டார்க்கெட்! முழுசா மறைக்கப்பட்டு இருந்தாலும் மார்க்கெட்டில் ஹிட் உறுதி!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் பிரபலமான எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் (Electric Hatchback Car) மாடலான டியாகோ.இவி (Tiago.ev)-இன் புதிய ஃபேஸ்லிஃப்ட் (Facelift) பதிப்பு பொது சாலையில் ஓட்டிப்பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுதொடர்பான புதிய ஸ்பை படங்கள் (Spy Images) ஆன்லைனில் கசிந்துள்ளன. புதிய டியாகோ.இவி ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை ஓட்டத்தில் காணப்படுவது இது ஒன்றும் முதல்முறையல்ல.

இன்னும் சொல்லப்போனால், மிக சில தினங்களுக்கு முன்புதான் டியாகோ இவி எலெக்ட்ரிக் கார் ஒன்று சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டு இருந்தது. இந்த முறை சற்று மாறுபட்ட அம்சங்களுடன் டியாகோ இவி தென்படுகிறது. வாகனத்தின் முன் பகுதி முழுவதும் மறைக்கப்பட்டிருந்தாலும், புதிய வடிவமைப்பு மாற்றங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன.

new tata tiago ev facelift spotted

மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்பக்க பம்பர், புதிய டிசைனில் மூடப்பட்ட கிரில் (blanked-off grille) மற்றும் கூர்மையான வடிவமைப்புடன் கூடிய புதிய எல்இடி ஹெட்லைட்கள் ஆகியவை இதில் அடங்கும். மேலும், எல்இடி பகல்நேர விளக்குகள் (DRLs) ஹெட்லைட்டின் மேல் பகுதியில் இடம்பெற்றுள்ளன. தற்போது கிரில் அருகே இடம்பெற்றுள்ள டர்ன் இண்டிகேட்டர்கள் இந்த புதிய டியாகோ இவி காரில் சிறிது தள்ளி அமைக்கப்பட்டுள்ளன.

காரின் பின் பகுதியிலும் சில ஒப்பனை மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த சோதனை ஓட்டத்தின்போது காரின் சக்கரங்களும் மறைக்கப்பட்டிருந்ததால், புதிய வடிவமைப்புடன் கூடிய அலாய் சக்கரங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. கூரையில் ஒரு சன்ரூஃப் இடம்பெறுவதற்கான அறிகுறியும் தெரிகிறது. ஒருவேளை, டியாகோ.இவி-யில் சன்ரூஃப் சேர்க்கப்பட்டால், இது அதன் பிரிவிலேயே முதல் அம்சமாக இருக்கும்.

new tata tiago ev facelift spotted

முன்பக்க கூர்மையான டிசைனிலான விளக்குகளுக்கு ஏற்ப, புதுப்பிக்கப்பட்ட டெயில் லேம்ப்களும், மூடப்பட்ட கிரில் பகுதிக்கு கீழே கிடைமட்ட ஸ்லாட்டுகளும் எதிர்பார்க்கப்படுகிறது. முன் மற்றும் பின்பக்க பம்பர்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, புதிய ஃபாக் லைட் அமைப்புகள் மற்றும் 360-டிகிரி கேமராவுக்கான (360-degree camera) அறிகுறியுடன் கூடிய மறுசீரமைக்கப்பட்ட ORVM-களையும் இந்த சோதனை காரில் காணலாம்.

உட்புறத்தைப் பொறுத்தவரை, புதிய டியாகோ.இவி காரில் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒளிரும் டாடா லோகோவுடன் கூடிய இரண்டு ஸ்போக் ஸ்டீயரிங் சக்கரம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் திரை ஆகியவை இடம்பெறலாம். மேலும், HD திறன் கொண்ட ரியர் வியூ கேமராவும் (HD rear view camera) வழிகாட்டி உடன் சேர்க்கப்படலாம்.

பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, புதிய அம்சங்களுடன் கூடிய காரின் பாதுகாப்பு உபகரணங்களும் மேம்படுத்தப்படவுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடைசியாக கடந்த 2025 ஜனவரியில் டியாகோ மற்றும் டியாகோ.இவி கார்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தப்பட்ட வெர்சன்களை அறிமுகம் செய்திருந்தது. இவற்றில் மேம்படுத்தப்பட்ட எல்இடி ஹெட்லைட்கள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கிரில், கதவுகளில் இவி பேட்ஜ்கள், 10.25 இன்ச்சில் மிதக்கும் எஃபெக்ட் உடன் டச் ஸ்கிரீன், ஒளிரும் லோகோவுடன் கூடிய புதிய ஸ்டீயரிங் சக்கரம் மற்றும் எச்டி ரியர் வியூ கேமரா ஆகியவை வழங்கப்பட்டு இருந்தன.

கடந்த ஆண்டு புதுப்பித்தலுக்குப் பிறகு, டியாகோ.இவி-க்கு இந்த ஆண்டில் மேலும் என்னென்ன புதிய அம்சங்களை டாடா நிறுவனம் வழங்கத் திட்டமிட்டுள்ளது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். செயல்திறன் மற்றும் பேட்டரி ஆப்ஷன்களைப் பொறுத்தவரை, புதிய டியாகோ.இவி ஃபேஸ்லிஃப்ட் தற்போதைய காரில் உள்ள அதே பேட்டரி ஆப்ஷன்களுடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய டியாகோ.இவி 2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியிலோ அல்லது 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறவுள்ள பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ (Bharat Mobility Expo) கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கிறோம். டாடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றான டியாகோ, டாடா மோட்டார்ஸின் மாத விற்பனையில் சுமார் 12% பங்களிக்கிறது. இதனால், புதிய டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் கார் ஆனது டாடாவுக்கு மிக முக்கியமான அறிமுகமாகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 28, 2026, 19:39 [IST]
English summary
New tata tiago ev facelift spotted again while road test check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+