விலையை அதிகமா உயர்த்தாமல் டாடா கம்பெனியால் மேம்படுத்தப்பட்ட கார்! ரூ.4.69 லட்சத்தில் இருந்து வாங்கலாம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து புதியதாக டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் மிக சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.4.69 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டியாகோவில் ரீ-டிசைன் செய்யப்பட்ட வெளிப்புறம், முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்ட கேபின், புதிய தொழிற்நுட்ப வசதிகள் உள்ளிட்டவை புதிய அப்கிரேட்களாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும், டியாகோ காரின் வேரியண்ட்களின் பெயர்கள் கூட மாற்றப்பட்டுள்ளன. இந்த வகையில், புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் ஆனது முந்தைய டியாகோ காரை காட்டிலும் எந்த அளவிற்கு அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

new tata tiago facelift vs old model version

வெளிப்புற தோற்றம்: தோற்றத்தில் சில மாறுபாடுகள் இருப்பினும், காரின் நீளம், அகலம் உள்ளிட்ட பரிமாண அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை. காரின் முன்பகுதியின் டிசைன் பெரிய அளவிற்கு மாற்றப்பட்டுள்ளது. மெல்லியதான வடிவத்திற்கு மாற்றப்பட்ட முன்பக்க க்ரில்லுக்கு இரு பக்கங்களிலும் LED ஹெட்லைட்கள் மற்றும் அதன் உடன் ஒருங்கிணைக்கப்பட்ட DRL-கள் உள்ளன.

காரின் பின்பக்கத்தில் டெயில்லைட்கள் இரண்டும் இன்றைய கால மாடர்ன் கார்களில் வருவதை போன்று ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அவற்றை இணைக்கும் பேனல்கள் ஒளிரக் கூடியவைகளாக வழங்கப்படவில்லை. புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் மேற்கூரையிலும், ORVM-களிலும் கருப்பு நிற எலிமெண்ட்கள் சேர்க்கப்பட்டு இருப்பது, காருக்கு இளமையான தோற்றத்தை வழங்கியுள்ளது.

new tata tiago facelift vs old model version

உட்புற தோற்றம் மற்றும் வசதிகள்: டியாகோவில் கேபினில் தான் முக்கியமான அப்கிரேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. டாஷ்போர்டின் டிசைன் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பதற்கு கடினமாகவும், பளபளப்பான டிசைனிலும் இருந்த டாஷ்போர்டு தற்போது மேட் ஃபினிஷிங்கில் வழங்கப்பட்டுள்ளது. டாஷ்போர்டுக்கு ஏற்ப டோர் பேட்கள் மற்றும் இருக்கைகள் இரட்டை நிறங்களில் துணியால் ஆன ட்ரீட்மெண்ட்டை பெற்றுள்ளன.

டிரைவருக்கான விபரங்களை வழங்கும் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை ஆனது தற்போது முழுவதும் டிஜிட்டல் தரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 2-ஸ்போக் ஸ்டீயரிங் சக்கரத்தில் மாற்றமில்லை என்றாலும், அதில் வழங்கப்படும் பொத்தான்களின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், 10.24-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரையிலும் மாற்றமில்லை என்றாலும், அதன் இண்டர்ஃபேஸ் மேம்படுத்தப்பட்டுள்ளது.

என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்: டியாகோ காரின் என்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கமான 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினே தொடரப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 85 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை இந்த என்ஜின் வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. ஆனால், CNG ஆப்ஷனில் சற்று குறைவாக 74 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலே கிடைக்கும்.

பெட்ரோல் மற்றும் CNG என எந்த ஆப்ஷனில் வாங்கினாலும் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெறலாம். டியாகோ CNG காரில் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடின் மூலம் டியாகோ AMT காரில் பழைய கியர் ஸ்டால்க்கிற்கு பதிலாக புதிய சுழற்றக்கூடிய டயல் செலெக்டர் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தோற்றத்தில் மட்டுமின்றி, தொழிற்நுட்ப அம்சங்களிலும் டியாகோ காரை டாடா நிறுவனம் மேம்படுத்தி உள்ளது. அதேநேரம் காரின் விலையை பெரியதாக அதிகப்படுத்தாது சிறப்பான விஷயமாகும். விற்பனையில் இந்த விலை குறைவான டாடா ஹேட்ச்பேக் காருக்கு மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், வேகன்ஆர் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் உள்ளிட்ட கார்கள் போட்டியாக விளங்குகின்றன.

Article Published On: Sunday, May 31, 2026, 13:29 [IST]
English summary
New tata tiago facelift vs old model version engine features price all details here
மேலும்... #tata motors #tiago #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out