வெறும் 15 நிமிஷம் சார்ஜ் பண்ணா 275 கிமீ பயணம் செய்யலாம்.. அசத்தலான அதிவேக சார்ஜரை அமைத்திருக்கிறது டெஸ்லா

இந்தியாவில் தங்களது ஐந்தாவது சூப்பர்சார்ஜிங் நிலையத்தை திறந்திருக்கிறது டெஸ்லா. நவி மும்பையில், நவி மும்பை சர்வதேச விமான நிலையலத்தில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவில் இந்தப் புதிய சூப்பர் சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய நிலையத்துடன் தற்போது சுமார் 20 டெஸ்லா சூப்பர் சார்ஜர்கள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன.

இந்த சூப்பர் சார்ஜர்கள் மூலம் டெஸ்லாவின் எலெக்ட்ரிக் கார்களை 250 kW திறனுடன் அதிவேகமாக சார்ஜ் செய்ய முடியும். இந்த DC சூப்பர் சார்ஜர்களைத் தவிர்த்து, டெஸ்லாவின் 14 டெஸ்டினேஷன் சார்ஜர்களும் செயல்பாட்டில் இருக்கின்றன. இந்த டெஸ்டினேஷன் சார்ஜர்கள் எனப்படுபவை 11 kW AC ஸ்லோ சார்ஜர்களைக் குறிக்கிறது. இதன் மூலம் டெஸ்லாவின் எலெக்ட்ரிக் கார்களை மெதுவாகவே சார்ஜ் செய்ய முடியும்.

Tesla Superchargers

தற்போதைய நிலையில், மும்பை, டெல்லி மற்றும் குருகிராம் ஆகிய நகரங்களில் மட்டுமே டெஸ்லா சார்ஜர்கள் மற்றும் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டெஸ்லா வாடிக்கையாளர்களை மையப்படுத்தியே இந்த சார்ஜர்கள் அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது அந்நிறுவனம். தற்போது அமைக்கப்பட்டிக்கும் சார்ஜர்களைத் தவிர்த்து, மேலும் புதிய சூப்பர் சார்ஜர்களை முக்கியமான இடங்களில் அமைக்கத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக அதிக போக்குவரத்து இருக்கும் மெட்ரோ நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலைகளில் புதிய சூப்பர் சார்ஜர்களை அமைக்க அந்நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. பெங்களூரு, சென்னை மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் மற்றும் நகரங்களுக்கிடையில் புதிய சூப்பர் சார்ஜர்களை அந்நிறுவனம் அமைக்கலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.

Tesla Electric car charging

சூப்பர் சார்ஜர்கள் மூலம் டெஸ்லா கார்களை சார்ஜ் செய்ய 1 kWh மின்சாரத்திற்கு ரூ.24-ம், டெஸ்டினேஷன் சார்ஜர்கள் மூலம் சார்ஜ் செய்ய ரூ.14-ம் வசூலிக்கிறது டெஸ்லா. இந்த சார்ஜிங் நிலையங்கள் அனைத்தும் முழுமையாக டெஸ்லாவிற்கு சொந்தமானவை, மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்பட்டவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புதிய டெஸ்லா கார் வாடிக்கையாளர்களுக்கென இலவச சார்ஜிங் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. மற்ற எலெக்ட்ரிக் கார் நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு அது போன்ற சலுகைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் பல நாடுகளில் டெஸ்லா சார்ஜர்களை அமைத்திருக்கிறது. அங்கெல்லாம் டெஸ்லா கார்களைத் தவிர்த்து மற்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்களையும் சார்ஜ் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இருக்கும் டெஸ்லா சார்ஜர்களில் டெஸ்லா கார்களை மட்டுமே சார்ஜ் செய்ய அனுமதிக்கப்படுகிறது. மிகவும் குறைவான அளவே டெஸ்லாவின் சூப்பர் சார்ஜர்கள் இருப்பதும், எலெக்ட்ரிக் சார்ஜிங் கட்டமைப்பு வலுவான அளவில் இல்லாமல் இருப்பதும் இதற்கான காரணமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்தியாவில் தற்போது 'மாடல் Y' எலெக்ட்ரிக் காரை மட்டுமே விற்பனை செய்து வருகிறது டெஸ்லா. ஸ்டாண்டர்டு மற்றும் லாங் ரேஞ்சு என இரண்டு வேரியன்ட்களாக இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல் கிடைக்கிறது. ஸ்டாண்டர்டு மாடலை ரூ.59.89 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், லாங் ரேஞ்சு மாடலை ரூ.67.89 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். டெஸ்லாவின் சிறப்பம்சமான முழுமையான செல்ஃப்-டிரைவிங் வசதி வேண்டும் என்பவர்கள் கூடுதலாக ரூ.6 லட்சம் செலுத்தி அதனைப் பெற்றுக் கொள்ளும் தேர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லாவின் சூப்பர் சார்ஜர்களைப் பயன்படுத்தும் போது வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே சுமார் 275 கிமீ வரையிலான ரேஞ்சை டெஸ்லா வாடிக்கையாளர்கள் பெற முடியும். ஆனால் அதற்கு அவர்கள் செலுத்த வேண்டிய விலையும் கொஞ்சம் அதிகம் தான், மற்ற எலெக்ட்ரிக் கார்களுடன் ஒப்பிடும் போது. ஸ்டாண்டர்டு மாடல் Y காரை டெஸ்லா சூப்பர் சார்ஜர் மூலம் முழுவதுமாக சார்ஜ் செய்ய ரூ.1,800 செலவாகும். லாங் ரேஞ்சு மாடலுக்கு இது ரூ.2,000 ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 7, 2026, 11:10 [IST]
English summary
New tesla supercharging outlet setup in navi mumbai inaugurated
மேலும்... #tesla #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+