புதிய டொயோட்டா ஹைலக்ஸ் இந்தியாவில் அறிமுகம்.. விலை ரூ.31.99 லட்சம் – என்னென்ன அப்டேட்டுகள்?

புதிய பொலிவுடன் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய டொயோட்டா ஹைலக்ஸ் சொகுசு ரக பிக்கப் டிரக் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலுக்கு ரூ. 31.99 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆஃப்-ரோடு சாகசங்களை விரும்புபவர்களுக்கு பிரீமியமான இந்த பிக்கப் டிரக் சிறந்த தேர்வாக வந்துள்ளது.

புதிய ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் வெளிப்புற தோற்றம் மற்றும் வசதிகள் என பல புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக புதிய முன்புற கிரில், LED ஹெட்லேம்ப்கள் மற்றும் கம்பீரமான வடிவமைப்பு இதற்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகின்றன.

2026 Toyota HiLux Launch

புதிய ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கின் முன்புறத்தில் பிரம்மாண்டமான பெரிய கிரில், புதிதாக வடிவமைக்கப்பட்ட பம்பர் மற்றும் LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 18-இன்ச் அலாய் வீல்கள், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் ஆஜானுபாகுவான உடல் வடிவமைப்பு இதனை பார்த்தவுடன் மிரள வைக்கிறது இந்த புதிய மாடலில் உள்ள Golden Bronze உள்ளிட்ட வண்ணத் தேர்வுகளும் இந்த மாடலின் கவர்ச்சியை அதிகரிக்கின்றன.

நவீன வசதிகள்

உட்புறத்தில் கருப்பு வண்ணம் ஆக்கிரமிப்புடன் இன்டீரியர், லெதர் இருக்கைகள், டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் ஏசி சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், 8-இன்ச் டச் ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், Android Auto மற்றும் Apple CarPlay செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த புதிய மாடலில் 8-வே பவர் அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட், க்ரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. நீண்ட தூர பயணங்களிலும் சிறந்த வசதியை வழங்கும் வகையில் கேபின் சொகுசாகவும், பிரிமீயமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2026 Toyota HiLux Launch

ஆஃப்-ரோடுக்கு ஏற்ற சக்திவாய்ந்த எஞ்சின்

புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் 4 சிலிண்டர்களுடன் கூடிய 2.8 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் தக்க வைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 204 பிஎஸ் பவரையும் 500 எம்எம் வரை டார்க்கையும் (ஆட்டோமேட்டிக் மாடல்) வழங்குகிறது. 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

2026 Toyota HiLux Engine

ஆஃப்ரோடு தொழில்நுட்பங்கள்

புதிய ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏதுவான பல நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. நான்கு சக்கரங்களுக்கும் எஞ்சின் சக்தியை பெற உதவும் 4 வீல் டிரைவ் சிஸ்டம், மிகவும் கடினமான ஏற்றங்கள் அல்லது பாறைகள் நிறைந்த சாலைகளில் அதிக முடுக்கு விசையை கொடுத்து (Torque) மெதுவாகவும் பாதுகாப்பாகவும் இயக்க உதவும் Low Range Transfer Case தொழில்நுட்பம் உள்ளன.

அதேபோன்று, ஒரு சக்கரம் வழுக்கினாலும் மற்ற சக்கரங்களுக்கு சக்தியை அனுப்பி வாகனம் சிக்கிக்கொள்ளாமல் முன்னேற உதவும் Electronic Differential Lock, வழுக்கும் சாலைகளில் சக்கரங்கள் வெறுமனே சுழலாமல் பிடிப்பை மேம்படுத்தி பாதுகாப்பாக முன்னேற உதவும் Active Traction Control (A-TRC), Hill Assist Control (HAC) - மேடு அல்லது மலைச்சாலையில் நிறுத்திய பிறகு மீண்டும் கிளம்பும்போது வாகனம் பின்னோக்கி உருளாமல் சில விநாடிகள் பிரேக்கைப் பிடித்துக் உதவும் Hill Assist Control வசதிகளும் உள்ளன.

மலைச்சாலைகளில் செங்குத்தான இறக்கங்களில் ஓட்டுநர் தொடர்ந்து பிரேக் அழுத்த வேண்டிய அவசியமின்றி, வாகனத்தின் வேகத்தையும் நிலைத்தன்மையையும் தானாகக் கட்டுப்படுத்தி பாதுகாப்பாக கீழிறங்க உதவும் Downhill Assist Control (DAC) உள்ளிட்டவை மிக முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக இருக்கின்றன.

நீர் நிலைகளில் 700 மிமீ ஆழம் வரை தடுமாறாமல் கடக்கும் திறன், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் வலுவான லேடர்-ஃப்ரேம் சேஸி ஆகியவை ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கை ஒரு முழுமையான ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற ஆல் ரவுண்டராக மாற்றுகின்றன.

அம்சம் பழைய Toyota Hilux புதிய Toyota Hilux
ஆரம்ப விலை (எக்ஸ்-ஷோரூம்) ரூ.30.40 லட்சம் ரூ.31.99 லட்சம்
முன்புற வடிவமைப்பு குரோம் கிரில், வழக்கமான பம்பர் புதிய டிராபிசாய்டல் கிரில், மறுவடிவமைக்கப்பட்ட பம்பர்
ஹெட்லேம்ப் LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப் புதிய DRL வடிவமைப்புடன் LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்
ஸ்கிட் பிளேட் ஸ்டாண்டர்டு புதிய சில்வர் ஃபினிஷ் ஸ்கிட் பிளேட்
அலாய் வீல்கள் 18 இன்ச் அலாய் வீல்கள் புதிய 18 இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள்
வெளிப்புற நிறங்கள் வெள்ளை, வெள்ளி, சாம்பல், சிவப்பு முந்தைய நிறங்களுடன் புதிய Golden Bronze
கேபின் பிரீமியம் கருப்பு இன்டீரியர் புதுப்பிக்கப்பட்ட கருப்பு இன்டீரியர் மற்றும் புதிய டிரிம்
இன்ஃபோடெயின்மென்ட் 8 இன்ச் டச் ஸ்கிரீன், Android Auto & Apple CarPlay அதே 8 இன்ச் டச் ஸ்கிரீன், மேம்பட்ட கனெக்டிவிட்டி
வயர்லெஸ் சார்ஜர் கிடைக்கும் ஹை வேரியண்டில் ஸ்டாண்டர்டு
டிரைவர் சீட் பவர் அட்ஜஸ்ட்மெண்ட் 8-வே பவர் அட்ஜஸ்டபிள் சீட்
கிளைமேட் கண்ட்ரோல் டூயல்-ஜோன் ஆட்டோமேட்டிக் டூயல்-ஜோன் ஆட்டோமேட்டிக்
எஞ்சின் 2.8 லிட்டர் டர்போ டீசல் 2.8 லிட்டர் டர்போ டீசல்
பவர் 204 PS 204 PS
டார்க் 420 Nm (MT) / 500 Nm (AT) 420 Nm (MT) / 500 Nm (AT)
கியர்பாக்ஸ் 6-ஸ்பீடு மேனுவல் / 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் 6-ஸ்பீடு மேனுவல் / 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக்
டிரைவ் சிஸ்டம் 4WD, Low Range Transfer Case 4WD, Electronic Differential Lock உடன்
ஆஃப்-ரோடு அம்சங்கள் Hill Assist, Downhill Assist, Active Traction Control அதே அம்சங்கள் தொடர்கின்றன
கிரவுண்ட் கிளியரன்ஸ் 216 மிமீ 216 மிமீ
நீரில் செல்லும் திறன் 700 மிமீ 700 மிமீ
பாதுகாப்பு அம்சங்கள் 7 ஏர்பேக், VSC, ABS, EBD, ரிவர்ஸ் கேமரா அதே பாதுகாப்பு அம்சங்கள் தொடர்கின்றன
இலக்கு வாடிக்கையாளர்கள் லைஃப்ஸ்டைல் & கமர்ஷியல் பயன்பாடு சாகச பயணம் மற்றும் பிரீமியம் லைஃப்ஸ்டைல் வாடிக்கையாளர்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்களிலும் Toyota எந்த சமரசமும் செய்யவில்லை. 7 ஏர்பேக்குகள், Vehicle Stability Control (VSC), Traction Control, ABS உடன் EBD, Brake Assist, Front & Rear Parking Sensors, Reverse Camera உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

2026 Toyota HiLux Launch

விலை, போட்டியாளர்கள்

இந்தியாவில் Isuzu V-Cross போன்ற மாடல்களுக்கு போட்டியாக வந்துள்ள புதிய 2026 Toyota Hilux, சாதாரண பிக்கப் டிரக்காக மட்டுமல்லாமல், சாகச பயணங்கள், ஆஃப்-ரோடு டிரைவிங் மற்றும் பிரீமியம் லைஃப்ஸ்டைல் வாகனத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.31.99 லட்சம் என்ற ஆரம்ப விலையுடன் அறிமுகமாகியுள்ள இந்த புதிய மாடல் டொயோட்டாவின் நம்பகத்தன்மை, சக்திவாய்ந்த டீசல் எஞ்சின், நவீன வசதிகள் மற்றும் உலகளவில் நிரூபிக்கப்பட்ட ஆஃப்-ரோடு திறன் ஆகியவற்றுடன் இந்தியர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

Article Published On: Tuesday, July 28, 2026, 21:13 [IST]
English summary
New toyota hilux launched in india price rs 31 99 lakh features specifications
மேலும்... #toyota #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X