இன்னும் 2 நாளில் அறிமுகமாக போகும் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்! ஸ்கோடாவை விட குறைவான விலையில் கிடைக்குமா?

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் இந்தியாவில் புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் (Taigun Facelift) கார்களை உற்பத்தி செய்யும் பணிகளை துவங்கியுள்ளது. வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக தற்போது தொழிற்சாலையில் காரை உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் இரண்டும் ஒன்றாக இணைந்து ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா என்கிற பெயரில் செயல்பட்டு வருவது உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். உற்பத்தி செலவை மிச்சப்படுத்தும் விதமாக இந்த இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து தங்களது கார்களை ஒரே தொழிற்சாலையில் உற்பத்தி செய்கின்றன.

volkswagen taigun facelift cars production

இந்த கூட்டணி நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை ஆனது மஹாராஷ்டிராவின் புனேவில் செயல்படுகிறது. இங்கு தான் தற்போது புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரை உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதனை படங்கள் உடன் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது.

ஜெர்மன் என்ஜினீயரிங் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் கார்கள் முழுவதுமாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. அதாவது, முழுக்க முழுக்க இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டே புதிய டைகுன் கார்களை ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்ய துவங்கியுள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதி அறிமுகத்திற்கு பிறகு, நாடு முழுவதும் புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இங்கு உற்பத்தி செய்யப்படும் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் கார்கள் தான் டெலிவிரி (Delivery) செய்யப்பட உள்ளன.

volkswagen taigun facelift cars production

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் (Skoda Kushaq Facelift) காரை ஒத்துக் காணப்படும். பழைய டைகுன் காருடன் ஒப்பிடுகையில், புதிய டைகுன் மாடலின் வெளிப்புறம் முழுவதுமாக புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

புதிய டைகுன் காரின் முன்பக்கத்தில் இணைக்கப்பட்ட டிஆர்எல்-கள் உடன் கண் போன்றதான டிசைனில் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் ஒளிரக்கூடிய ஃபோக்ஸ்வேகனின் 'VW' லோகோவை பார்க்க முடிகிறது. இதனால், புதிய டைகுனின் முன்பக்கம் முன்பை விட பிரீமியம் தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இவற்றுடன், முன்பக்க கிரில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்பக்க பம்பர் உடன் பெரிய T-வடிவ ஏர் டேம் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இந்த T-வடிவ ஏர் டேமில் செங்குத்தான டிசைனில் வழங்கப்பட்டுள்ள காற்றுத்துளைகள் என்ஜினுக்கு தேவையான காற்றை வழங்கும். புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரில் ஜிடி (GT) என்கிற ஸ்போர்டியரான வேரியண்ட்டையும் ஃபோக்ஸ்வேகன் வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.

புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு உள்ளேயும் கவனிக்கத்தக்க அப்கிரேட்களாக புதிய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழுவதும் டிஜிட்டல் தரத்தில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரை, மசாஜ் வசதி உடன் பின் இருக்கைகள், பனோராமிக் சன்ரூஃப், பெடில் ஷிஃப்டர்கள் மற்றும் புதிய 8-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன. மற்றப்படி என்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டைகுன் போன்ற அளவில் சிறியதான கார்களில் அவற்றின் விலைகள் தான் மிக முக்கியமாகும். அதாவது, காரின் விலையை எந்த அளவிற்கு குறைவாக நிர்ணயிக்கிறோமோ அந்த அளவிற்கு அவற்றின் விற்பனையையும் அதிகரிக்க முடியும். இதனை புரிந்துக்கொண்டே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழக்கம்போல் புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய துவங்கியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 7, 2026, 15:51 [IST]
English summary
New volkswagen taigun facelift cars production starts at pune plant check all details here
மேலும்... #volkswagen #taigun #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+