பெட்ரோல் எஞ்சினுக்கு குட்பை... புதிய தலைமுறை ஹோண்டா சிஆர்-வி காரில் இனி ஹைபிரிட் மட்டும்தான்!

உலக அளவில் ஹைபிரிட் கார்களுக்கான வரவேற்பு மெல்ல வளர்ந்து வரும் நிலையில், முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா தனது முக்கியமான எஸ்யூவி மாடலில் அதிரடியான மாற்றத்தைச் செய்ய முடிவு செய்துள்ளது. அடுத்த தலைமுறை சிஆர்-வி காரில் வழக்கமான பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனை நீக்கிவிட்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்தை மட்டுமே வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஹோண்டாவின் இந்த முடிவு சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவிகளில் ஒன்றாக இருக்கும் சிஆர்-வி, ஏழாவது தலைமுறை மாற்றத்துடன் புதிய தோற்றம், மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய ஹைபிரிட் பவர்டிரெயின் தொழில்நுட்பத்தைப் பெறவுள்ளது.

Honda CRV

பெட்ரோல் மாடல் கிடையாது

ஹோண்டா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அடுத்த தலைமுறை சிஆர்-வி கார் 2028 மாடலாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் வழக்கமான பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் இருக்காது. இதற்கு பதிலாக இரண்டு மின்மோட்டார்கள் மற்றும் பெட்ரோல் எஞ்சின் கொண்ட புதிய ஹைபிரிட் தொழில்நுட்பம் மட்டுமே வழங்கப்பட உள்ளது.

தற்போதைய சிஆர்-வி காரில் பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் என இரண்டு விதமான பவர் ட்ரெயின் ஆப்ஷன்கள் உள்ளன. இதில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 190 எச்பி பவரையும், 243 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. புதிய தலைமுறையில் இந்த இன்ஜின் ஆப்ஷன் நீக்கப்படுகிறது.

Also Read

புதிய ஹைப்ரிட் தொழில்நுட்பம்

புதிய தலைமுறை சிஆர்-வி காரில் ஹோண்டாவின் ஐந்தாம் தலைமுறை அம்சங்களுடன் கூடிய இரண்டு மோட்டார்களுடன் கூடிய ஹைபிரிட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இதில் பெட்ரோல் எஞ்சின், மின்சார மோட்டார்கள் மற்றும் பேட்டரி இணைந்து செயல்படும். இதன் மூலம் எரிபொருள் சிக்கனத்தையும், வாகனத்தின் செயல்திறனையும் ஒரே நேரத்தில் மேம்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தற்போதைய ஹைபிரிட் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின்மோட்டார்கள் இணைந்து 204 எச்பி பவரை வழங்குகின்றன. புதிய தலைமுறைக்கான துல்லியமான பவர் மற்றும் டார்க் விபரங்களை ஹோண்டா இன்னும் வெளியிடவில்லை. எனவே புதிய காரின் செயல்திறன் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Also Read

அதிக மைலேஜ்

புதிய ஹைபிரிட் அமைப்பின் மூலமாக எரிபொருள் சிக்கனத்தை 10 சதவீதத்திற்கும் அதிகமாக மேம்படுத்த ஹோண்டா இலக்கு நிர்ணயித்துள்ளது. எஞ்சின் மற்றும் மின்மோட்டார்களின் செயல்திறனையும் மேம்படுத்தியுள்ளது. இதனால் நகர்ப்புறம் மற்றும் நெடுஞ்சாலைப் பயணங்களில் கூடுதல் எரிபொருள் சிக்கனம் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும், புதிய மாடலில் மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் ஆல் வீல் டிரைவ் தொழில்நுட்பமும் இடம்பெறவுள்ளது. இதன் மூலம் நான்கு சக்கரங்களுக்கும் தேவையான சக்தியைச் சிறப்பாக வழங்குவதுடன் தேவைக்கேற்ப கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக வளைவுகள் மற்றும் வழுக்கும் தன்மையுடைய சாலைகளில் வாகனத்தின் நிலைத்தன்மை, கையாளும் திறன் மேம்படும் என ஹோண்டா தெரிவிக்கிறது.

புதிய பிளாட்ஃபார்ம்

இந்த புதிய தலைமுறை சிஆர்-வி காருக்காக ஹோண்டா முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மை உருவாக்கியுள்ளது. அதிக உறுதித்தன்மை கொண்ட அதேசமயம் எடை குறைந்த கட்டமைப்பை உருவாக்குவது இதன் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், எதிர்கால ஹோண்டா கார்களிலும் பயன்படுத்தக்கூடிய மாடுலர் தொழில்நுட்பமும் இந்த பிளாட்ஃபார்ம் பெற்றுள்ளது.

அமெரிக்க சந்தைக்கு முக்கியத்துவம்

அமெரிக்காவில் சிஆர்-வி கார் ஹோண்டா நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கியமான மாடலாக உள்ளது. ஆண்டுக்கு நான்கு லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்யும் இலக்குடன் தனது விற்பனைக் கொள்கைகளை அந்நிறுவனம் வகுத்துள்ளது. குறிப்பாக 2020ம் ஆண்டு அறிமுகமான ஹைபிரிட் மாடலின் வருடாந்திர விற்பனை கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவிற்கு வருமா?

இந்தியாவிலும் புதிய தலைமுறை சிஆர்-வி அறிமுகமாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே ஹோண்டா தனது எதிர்கால இந்திய தயாரிப்பு திட்டங்களில் புதிய எஸ்யூவி மாடல்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்தியாவிலும் ஹைப்ரிட் மாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. எனவே, இந்த கார் நிச்சயமாக 2028ம் ஆண்டில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

Article Published On: Friday, November 13, 2026, 16:58 [IST]
English summary
Next gen honda cr v hybrid only petrol engine dropped
மேலும்... #honda cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out