இன்ஸ்யூரன்ஸ் இல்லாமல் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் செக்... ரூ.10,000 வரை அபராதம்?

வாகனக் காப்பீட்டைப் புதுப்பிக்காமல் சாலையில் பயணிக்கும் வாகனங்களை கண்டறிய புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது. இனி சுங்கச்சாவடியைக் கடக்கும் வாகனங்களுக்கு முறையான காப்பீடு இருக்கிறதா என்பதைத் தானாகவே கண்டறியும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கான புதிய திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளது.

காப்பீடு இல்லாத வாகனம் சுங்கச்சாவடியைக் கடந்தால், அதன் உரிமையாளருக்கு உடனடியாக எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படும். காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதமும் விதிக்கப்படலாம். இந்தப் புதிய நடைமுறை எப்படி செயல்படும்? வாகன உரிமையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விவரங்களைப் பார்க்கலாம்.

Tollgate

இந்தத் திட்டத்தின்படி, சுங்கச்சாவடிகளில் பதிவாகும் வாகனங்களின் பதிவு எண்கள், மத்திய அரசின் வாகன் (VAHAN) தரவுத்தளத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்படும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு மூன்றாம் நபர் காப்பீடு இருக்கிறதா, அதன் காலாவதி தேதி என்ன என்பது உள்ளிட்ட விவரங்களைத் தானியங்கி முறையில் கண்டறிய முடியும்.

காப்பீடு காலாவதியானது கண்டறியப்பட்டால், வாகன உரிமையாளரின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு எச்சரிக்கை அனுப்பப்படும். அதில் வாகனத்தின் பதிவு எண், சுங்கச்சாவடியைக் கடந்த நேரம், காப்பீடு தொடர்பான விவரங்கள் இடம்பெறும். மேலும், காப்பீட்டை உடனடியாகப் புதுப்பிக்குமாறும் அறிவுறுத்தப்படும்.

Also Read

முதற்கட்டமாக டெல்லியில் உள்ள முண்ட்கா சுங்கச்சாவடியில் இந்த வசதி சோதனை செய்யப்பட்டு வருகிறது. அர்பன் எக்ஸ்டென்ஷன் ரோடு-2 (UER-II) பகுதியில் அமைந்துள்ள இந்தச் சுங்கச்சாவடியில் தொழில்நுட்பத்தின் செயல்திறன் ஆய்வு செய்யப்படுகிறது. சோதனை வெற்றியடைந்தால் மற்ற தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் பிரிவு 146-ன்படி, பொதுச் சாலைகளில் இயக்கப்படும் வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயமாகும். காப்பீடு இல்லாமல் வாகனத்தை இயக்குவது சட்டப்படி குற்றமாகும். விபத்தின்போது மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கான இழப்பீட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த விதியின் முக்கிய நோக்கமாகும்.

Also Read

தற்போதைய சட்டத்தின் பிரிவு 196-ன்படி, காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் முதல் முறை ரூ.2,000 அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டால் ரூ.4,000 அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இதற்கிடையில், காப்பீடு இல்லாத வாகனங்களுக்கான அபராதத்தை அதிகரிக்கும் சட்டத் திருத்தமும் முன்மொழியப்பட்டுள்ளது. அதன்படி, முதல் முறை குற்றத்திற்கு குறைந்தபட்சம் ரூ.5,000, அடுத்தடுத்த குற்றங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாகன உரிமையாளர்கள் தங்களது காப்பீட்டின் காலாவதி தேதியை முன்கூட்டியே சரிபார்த்துப் புதுப்பிப்பது அவசியம். குறிப்பாக, நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்பவர்கள் காப்பீட்டு ஆவணங்கள் செல்லுபடியாகிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். வாகன் இணையதளம் அல்லது எம்-பரிவாகன் செயலி மூலமாகவும் காப்பீடு தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

Via- TOI

Article Published On: Tuesday, November 17, 2026, 11:40 [IST]
English summary
Nhai toll plaza vehicle insurance check rs 10000 fine india
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out