டெக்டான் 7 சீட்டர் எஸ்யூவியை விரைவில் களமிறக்குகிறது நிஸான்... ஹூண்டாய் அல்கஸாருக்கு போட்டி

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது வர்த்தகத்தை வலுப்படுத்த நிஸான் நிறுவனம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நடப்பு ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட நிஸான் டெக்டான் 5 சீட்டர் மிட்சைஸ் எஸ்யூவிக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இதன் 7 சீட்டர் மாடலையும் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனை நிசான் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சவுரப் வத்ஸா (Saurabh Vatsa) சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியதன் மூலமாக உறுதியாகி இருக்கிறது.

நிஸான்- ரெனோ நிறுவனங்களின் கூட்டணியில் இந்த புதிய தலைமுறை 7 சீட்டர் எஸ்யூவி உருவாக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது வரும் பிப்ரவரி மாதத்திற்குள் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

Nissan Tekton 7 Seater Rendering

(Representational Image | AI-generated render)

தற்போது விற்பனையில் உள்ள டெக்டான் 5 சீட்டர் எஸ்யூவியை அப்படியே இருக்கைகளை மட்டுமே அட்ஜெஸ்ட் செய்து 7 சீட்டர் மாடலாக மாற்றாமல், முற்றிலும் புதிய கட்டமைப்புத் திட்டத்தில் உருவாக்கப்படும். இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவியில் மூன்று வரிசை இருக்கை அமைப்பிற்காக கூடுதல் வீல்பேஸ் நீளம் கொண்டதாக இருக்கும்.

நிஸான் நிறுவனத்தின் பிரபலமான பேட்ரோல் (Patrol) எஸ்யூவியின் கம்பீரமான தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு 5-சீட்டர் டெக்டான் உருவாக்கப்பட்டது போலவே, இந்த 7 சீட்டர் மாடலும் அதே கட்டுமஸ்தான தோற்றத்தை பெறுவதற்கான வலிமையான பாடி லைன்கள் மற்றும் பிரீமியம் கிரில் அமைப்பை கொண்டிருக்கும். கூடுதல் நீளம் காரணமாக இதன் கூரை அமைப்பு மற்றும் பின்புறக் கண்ணாடிப் பகுதிகள் சற்று மாற்றியமைக்கப்படும்.

Also Read

இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவியில் 100 எச்பி பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 163 எச்பி பவரை வழங்க வல்ல 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது. மேனுவல் மற்றும் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் கொடுக்கப்படலாம்.

மோசமான சாலைகளிலும் பள்ளம் மேடுகளை எளிதாகக் கையாள உதவும் 212 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 360-டிகிரி கேமரா, 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், லெவல்-2 அடாஸ் (ADAS) பாதுகாப்பு அம்சங்கள், பானரோமிக் சன்ரூஃப் மற்றும் பல்வேறு இன்டர்நெட் இணைப்பு வசதி களுடன் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இந்த 7 சீட்டர் மாடலில் எதிர்பார்க்கப்படுகின்றன.

Also Read

இந்தியாவில் 3 வரிசை இருக்கை வசதி கொண்ட 7 சீட்டர் எஸ்யூவி மாடல்களுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில், இந்த புதிய 7 சீட்டர் டெக்டான் மாடலானது மஹிந்திரா எக்ஸ்யூவி700, டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்காசார் மற்றும் எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஆகிய பிரபல எஸ்யூவிகளுக்கு சவாலாக அமையும்.

ரூ.12 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது. பெரிய குடும்பத்துடன் சொகுசான மற்றும் பாதுகாப்பான பயணத்தை விரும்பும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இதுவொரு சிறந்த தேர்வாக இருக்கும்.

Article Published On: Monday, September 14, 2026, 12:16 [IST]
English summary
Nissan 7 seater suv launch timeline price engine features india
மேலும்... #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out