மாருதி கதை முடிஞ்சுது! அடிமாட்டு விலையில் 7 சீட்டர் காரை களமிறக்கும் ஜப்பான் நிறுவனம்! இந்தியாவே அதிர போகுது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று நிஸான் க்ராவைட் (Nissan Gravite). இது ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனத்துடன் கூட்டணியில் உள்ள ரெனால்ட் நிறுவனத்தின் தயாரிப்பான ட்ரைபர் (Renault Triber) காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) கார் ஆகும்.

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி கார்களில் ரெனால்ட் ட்ரைபர் மிக முக்கியமானது. அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால், நிஸான் க்ராவைட் காரும் மிகவும் குறைவான விலையில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் காரணமாகவே நிஸான் க்ராவைட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Renault Triber MPV Side View

நிஸான் க்ராவைட் கார் கடந்த ஜனவரி 21ம் தேதியே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக நிஸான் க்ராவைட் காரின் அறிமுகம் தள்ளி போயுள்ளது. ஆனால் இது சிறிய தாமதம் மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஏனெனில் நிஸான் நிறுவனம் அடுத்த மாதமே (பிப்ரவரி), க்ராவைட் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே உள்ள நிலையில், நிஸான் க்ராவைட் காரை பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.

Nissan Gravite

இந்த வரிசையில் நிஸான் க்ராவைட் காரின் கலர் ஆப்ஷன்கள் (Colour Options) குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வமான தகவல் ஆகும். நிஸான் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான யூடியூப் (YouTube) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு புதிய வீடியோ (Video) மூலமாக, நிஸான் க்ராவைட் காரின் கலர் ஆப்ஷன்கள் நமக்கு தெரிய வந்துள்ளன.

இதன்படி நிஸான் க்ராவைட் கார் ஒட்டுமொத்தமாக 5 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதில், தனித்ததுவமான டீல் நிறம் ஒன்றாகும். இதுதவிர வெள்ளை, சில்வர், கருப்பு மற்றும் க்ரே ஆகிய கலர் ஆப்ஷன்களிலும் நிஸான் க்ராவைட் கிடைக்கும். இந்த தகவல், நிஸான் க்ராவைட் காருக்காக காத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செயல்திறனை பொறுத்தவரையில், ரெனால்ட் ட்ரைபர் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்தான் (Engine Option), நிஸான் க்ராவைட் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை (Gearbox Options) நாம் எதிர்பார்க்க முடியும்.

வசதிகளை (Features) பொறுத்தவரையில், ரெனால்ட் ட்ரைபர் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 17.78 செமீ டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற அம்சங்களை எல்லாம், நிஸான் க்ராவைட் காரிலும் நாம் எதிர்பார்க்கலாம்.

அதேபோல் ரெனால்ட் ட்ரைபர் காரில் வழங்கப்பட்டுள்ள 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ஹில் ஸ்டார்ஸ்ட் அஸிஸ்ட், ட்ராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு வசதிகளும் (Safety Features), அப்படியே நிஸான் க்ராவைட் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப விலை வெறும் 5.75 லட்ச ரூபாய் அல்லது 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விலையில் வந்தால், மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு (Maruti Suzuki Ertiga), நிஸான் க்ராவைட் விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.

நிஸான் நிறுவனம் க்ராவைட் மட்டுமல்லாது, மேலும் 2 புதிய கார்களையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில், நிஸான் டெக்டான் (Nissan Tekton) ஒன்றாகும். இது நேற்று (ஜனவரி 26) அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster) காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. நிஸான் டெக்டான் கார் வரும் பிப்ரவரி 4ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதை தொடர்ந்து நிஸான் டெக்டான் காரின் அடிப்படையில் புதிய 7 சீட்டர் எஸ்யூவி ரக கார் ஒன்றையும் நிஸான் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த கார் அடுத்த ஆண்டு (2027) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 27, 2026, 12:49 [IST]
English summary
Nissan gravite 7 seater mpv 5 colour options check all details here
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+