மலிவு விலையில் வெளியான 7 சீட்டர் CNG கார்.. மைலேஜும் மிரட்டலா கொடுக்கும்!

இந்தியாவில் பெட்ரோலுக்கு அடுத்தபடியாக தற்போது இரண்டாவது இடத்தில் இருப்பது CNG தான். எனவே வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்கள் எல்லாமே CNG எரிபொருளில் இயங்கும் வகையிலான கார் மாடல்களையும் அதிகளவில் வெளியிட்டு வருகின்றன. அந்த வரிசையில் நிஸான் நிறுவனமும் இந்தியாவில் தங்களுடைய இரண்டாவது CNG கார் மாடலை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே மேக்னைட் CNG மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது சமீபத்தில் வெளியிட்ட கிராவைட் மாடலுக்கு CNG ரெட்ரோஃபிட் கிட்டை வழங்கியிருக்கிறது நிஸான். மேக்னைட்டைப் போலவே கிராவைட்டுக்கும் மூன்றாம் தரப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட CNG கிட்டை, டீலர்ஷிப்கள் மூலம் ஃபிட் செய்து கொடுக்கிறது நிஸான்.

Nissan Gravite CNG

இரண்டு 25 லிட்டர் CNG டேங்குகள் நிஸான் கிராவைட்டின் மொத்த பூட் ஸ்பேஸையும் ஆக்கிரமித்துக் கொள்வதால், இந்த CNG கிட் பொருத்தப்பட்ட கிராவைட் மாடலில் பூட் ஸ்பேஸை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்க முடியாது. எனினும் 7 சீட்டர் காராகவே தொடர்ந்து கிராவைட் இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த கிராவைட் எம்பிவியில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் NA பெட்ரோல் இன்ஜினைக் கொடுத்துள்ளது நிஸான். இந்த இன்ஜினானது 72 hp பவர் மற்றும் 96 Nm டார்க்கை (பெட்ரோல் எரிபொருளில்) உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளை நிஸான் கொடுத்திருக்கிறது.

Nissan Gravite CNG Tanks

CNG எரிபொருளில் இயங்கும் போது இந்த கிராவைட் எம்பிவி மாடலின் பவர் மற்றும் டார்க் அளவுகளை நிஸான் பகிர்ந்து கொள்ளவில்லை. எனினும் பெட்ரோலில் இயங்கும் போது இருப்பதை விட குறைவான பவர் மற்றும் டார்க்கையே CNG எரிபொருளில் இயங்கும் போது கிராவைட்டின் இன்ஜின் உற்பத்தி செய்யும் எனத் தெரிகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட கிராவைட் மாடல்களில் மட்டும் CNG கிட்டை ஃபிட் செய்து நிஸான் கொடுக்கும் எனவும் தெரிகிறது.

கிராவைட் மாடலுக்கான CNG கிட்டை மோட்டோஸென் (Motozen) என்ற மூன்றாம் தரப்பு நிறுவனமே தயாரிக்கிறது. இந்தக் கிட்டுக்கு 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ வரையிலான மூன்றாம் தரப்பு வாரண்டியை நிஸான் அளிக்கிறது. எனவே கிராவைட் CNG மாடலை வாங்கும் வாடிக்கையாளர்கள் தயங்கலாமல் வாங்கலாம். தற்போது இந்தியாவின் 16 மாநிலங்களில் 60-க்கும் மேற்பட்ட நகரங்களில் கிராவைட் CNG மாடலை வாடிக்கையாளர்கள் வாங்கலாம் என நிஸான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த CNG கிட்டை ரூ.82,999 என்ற விலையில் வழங்குகிறது நிஸான். காரின் விலைக்கு மேலாக இந்த விலையில் CNG கிட்டை வாங்கி டீலர்ஷிப்கள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் கிராவைட் கார்களில் பொருத்திக் கொள்ளலாம். நிஸான் கிராவைட் தான் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மிகவும் விலை குறைவான இரண்டு 7 சீட்டர் கார் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இதனை ரூ.5.65 லட்சம் முதல் ரூ.8.93 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது நிஸான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: CNG மாடலை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கான மிக முக்கியமான காரணம் குறைவான பயன்பாட்டுச் செலவு தான். எனவே தான் குறைவான பவர் மற்றும் குறைவான பூட் ஸ்பேஸ் ஆகிய சில வசதிக் குறைபாடுகளையும் பொறுத்துக் கொள்கிறார்கள். இந்த கிராவைட் மாடலில் அது கொஞ்சம் அதிகமாகப் போய், பூட் ஸ்பேஸே இல்லாமல் இருக்கிறது. எனினும் அதற்கு ஈடுகட்டும் வகையில் மூன்று வரிசையாக 7 சீட்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த CNG மாடலானது கிராவைட் எம்பிவியின் விற்பனையை மேலும் உயர்த்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Monday, May 4, 2026, 19:29 [IST]
English summary
Nissan gravite 7 seater mpv cng retrofit kit launched check all details here
மேலும்... #nissan #cng #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+