மாருதியை மார்க்கெட்டில் இருந்தே அடித்து விரட்ட போகும் 7 சீட்டர் கார்! தரமட்ட ரேட்டில் களமிறக்க போறாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று நிஸான் க்ராவைட் (Nissan Gravite). இது இந்தியாவில் ஏற்கனவே மிகவும் பிரபலமாக இருந்து வரும் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வரும் 7 சீட்டர் எம்பிவி (7-seater MPV) ரக கார் ஆகும்.

எனவே ரெனால்ட் ட்ரைபர் காரை போலவே, நிஸான் க்ராவைட் காரும், மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் காரணமாக இந்திய வாடிக்கையாளர்கள் பலரும், நிஸான் க்ராவைட் காரின் அறிமுகத்தை, ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளனர். இதில், நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி.

Renault Triber Side Design

நிஸான் க்ராவைட் கார், வரும் ஜனவரி 21ம் தேதி (January 21) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது குறித்து கார்தேக்கோ தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ரெனால்ட் ட்ரைபர் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால், அந்த காரின் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) மற்றும் வசதிகளை (Features), நிஸான் க்ராவைட் காரும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி பார்த்தால், ரெனால்ட் ட்ரைபர் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 1.0 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன், நிஸான் க்ராவைட் காரிலும் வழங்கப்படலாம். ரெனால்ட் ட்ரைபர் காரில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 72 பிஎஸ் பவர், 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

Nissan Gravite

ரெனால்ட் ட்ரைபர் காரில் இந்த இன்ஜின் ஆப்ஷன் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்படுகின்றன. இதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள், நிஸான் க்ராவைட் காரிலும் கொடுக்கப்படலாம். கூடுதலாக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனையும், நிஸான் க்ராவைட் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் ரெனால்ட் ட்ரைபர் காரில் வழங்கப்பட்டுள்ள 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா, 6 ஏர்பேக்குகள், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் மற்றும் மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள் போன்ற வசதிகளை எல்லாம், நிஸான் க்ராவைட் காரும் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Price) வெறும் 5.75-6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் வந்தால், நிஸான் க்ராவைட் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என நாங்கள் கருதுகிறோம்.

அத்துடன் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) போன்ற எம்பிவி கார்களுக்கும், நிஸான் க்ராவைட் விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மாருதி சுஸுகி எர்டிகா மட்டுமல்லாது, ரெனால்ட் ட்ரைபர் காருக்கும் கூட, நிஸான் க்ராவைட் வடிவில் விற்பனையில் நெருக்கடிகள் ஏற்படலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 6, 2026, 17:15 [IST]
English summary
Nissan gravite 7 seater mpv launch date january 21 check all details here
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+