அடி மாட்டு விலையில் 7 சீட்டர் காரை களமிறக்க வந்த ஜப்பான் நிறுவனம்! கடைசியில் இப்படி ஆகும்னு யாருமே நெனைக்கல!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று நிஸான் க்ராவைட் (Nissan Gravite). இது 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போது ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) 7 சீட்டர் எம்பிவி கார் விற்பனையில் இருந்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.
பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் மற்றும் ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனங்கள் இடையே கூட்டணி இருப்பதால், ரெனால்ட் ட்ரைபர் காரின் அடிப்படையில்தான், நிஸான் நிறுவனம் க்ராவைட் காரை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் தற்போதைய நிலையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை வெறும் 5.76 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

கிட்டத்தட்ட இதே விலையில்தான் நிஸான் க்ராவைட் காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலைக்கு 7 பேர் பயணம் செய்ய கூடிய கார் என்பதால்தான், நிஸான் க்ராவைட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி கொண்டுள்ளது. இப்படி வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டியுள்ள நிஸான் க்ராவைட் கார் இன்று (ஜனவரி 21) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அது நடக்கவில்லை. நிஸான் நிறுவனம் க்ராவைட் காரின் அறிமுகத்தை தள்ளி வைத்திருப்பதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து காடிகீ தளம் செய்தி வெளியிட்டுள்ளது. நிஸான் க்ராவைட் காரின் புதிய அறிமுக தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிஸான் நிறுவனம் க்ராவைட் தவிர, புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள நிஸான் டெக்டான் (Nissan Tekton) என்ற காரையும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. நிஸான் டெக்டான் கார் வரும் பிப்ரவரி 4ம் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் நிஸான் டெக்டான் காரின் அறிமுக தேதியில் எந்தவொரு மாற்றமும் இல்லை. நிஸான் க்ராவைட் காரின் அறிமுகம் தள்ளி போயிருந்தாலும் கூட, நிஸான் டெக்டான் கார் திட்டமிட்டபடி வரும் பிப்ரவரி 4ம் தேதி, பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரி, நிஸான் க்ராவைட் காருக்கு வருவோம். இது இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காருக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக இருக்கும். நிஸான் க்ராவைட் காரில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் ரெனால்ட் ட்ரைபர் காரின் பல்வேறு வசதிகளையும் நிஸான் க்ராவைட் காரில் நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிஸான் க்ராவைட் காரின் அறிமுகம் தள்ளி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்படவில்லை. எனவே நிஸான் க்ராவைட் காருக்காக காத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. கூடிய விரைவில் நிஸான் க்ராவைட் காரின் புதிய அறிமுக தேதியை நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








