ஒரு கிமீ-க்கு 40 பைசா மட்டுமே செலவு! மாருதிக்கு எமனாக மாறும் 7 சீட்டர் கார்! அடிமாட்டு விலையில் வந்திருக்கு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிஸான் க்ராவைட் (Nissan Gravite) கார், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. நிஸான் க்ராவைட் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, நிஸான் க்ராவைட் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதை தொடர்ந்து முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு, க்ராவைட் கார்களை டெலிவரி (Delivery) செய்யும் பணிகள், அடுத்த மாதம் (மார்ச்) முதல் தொடங்கப்படவுள்ளன. எனவே கூடிய விரைவிலேயே நிஸான் க்ராவைட் கார்களை, நாம் இந்திய சாலைகளில் பார்க்க போகிறோம்.

Nissan Gravite Seats

செயல்திறனை பொறுத்தவரையில் நிஸான் க்ராவைட் காரில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்பட்டுள்ளன.

நிஸான் க்ராவைட் காரின் இன்ஜின் அதிகபட்சமாக 6,250 ஆர்பிஎம்மில் 72 பிஎஸ் பவரையும், 3,400-3,600 ஆர்பிஎம்மில் 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் நிஸான் க்ராவைட் காரில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது.

Nissan Gravite MPV

ஆனால் கூடிய விரைவில் நிஸான் க்ராவைட் காரில், சிஎன்ஜி இன்ஜின் உடன் கூடிய புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் நிஸான் க்ராவைட் காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 19.30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன.

மறுபக்கம் பெட்ரோல்/ஏஎம்டி வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 19.60 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. இவை நிஸான் இந்தியா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும். ஆனால் சிஎன்ஜி வேரியண்ட் வழங்கப்பட்டால், இன்னும் அதிகமான மைலேஜை நம்மால் உறுதியாக எதிர்பார்க்க முடியும். இது குறித்து ரஸ்லேன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும் பின் பகுதியில் லக்கேஜ்களை (Luggage Space) வைத்து கொள்வதில் சிரமம் ஏற்படுமே? என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நிஸான் நிறுவனம் க்ராவைட் காரில், ட்யூயல் சிலிண்டர் சிஎன்ஜி தொழில்நுட்பத்தை வழங்கவுள்ளது. இதன் காரணமாக லக்கேஜ்களை வைத்து கொள்வதற்கான இடவசதியில் நீங்கள் பெரிதாக சமரசம் செய்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்படாது.

நிஸான் க்ராவைட் காரில், பிளேடு சில்வர், ஸ்ட்ரோம் ஒயிட், ஓனிக்ஸ் பிளாக், மெட்டாலிக் க்ரே மற்றும் ஃபாரஸ்ட் க்ரீன் என மொத்தம் 5 கலர் ஆப்ஷன்கள் (Colour Options) வழங்கப்படுகின்றன. 3,987 மிமீ நீளம் கொண்ட நிஸான் க்ராவைட் கார், 7 சீட்டர் ஆப்ஷனில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV Cars) ரக கார்களில் ஒன்றாகும்.

தற்போதைய நிலையில் நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப விலை வெறும் 5.65 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 8.94 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை நிஸான் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பதுடன், இவை அறிமுக சலுகை விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மிகவும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை உயர்த்துவதில், க்ராவைட் மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை குறைவான காராக இருந்தாலும் கூட, நிஸான் க்ராவைட் கார், ஏராளமான வசதிகளை (Features) கொண்டுள்ளது.

இதில், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 6 ஏர்பேக்குகள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிஸான் க்ராவைட் கார் விலை குறைவானது என்பதுடன், பராமரிப்பதற்கும் எளிமையானது. இந்த காரை பராமரிக்க ஒரு கிலோ மீட்டருக்கு 40 பைசா மட்டுமே செலவு ஆகும் என நிஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் வருகை, மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) போன்ற கார்களுக்கு எல்லாம், விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, February 20, 2026, 17:50 [IST]
English summary
Nissan gravite delivery from next month cng variant launch soon full details
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+