மாருதி மார்க்கெட்டை காலி பண்ண போகும் விலை குறைவான 7 சீட்டர் கார்! தரமட்டத்துக்கு இறங்கிய ஜப்பான் கம்பெனி!

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் (Renault) மற்றும் ஜப்பானை சேர்ந்த நிஸான் (Nissan) ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணியில் இருந்து வருகின்றன. எனவே இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காரின் அடிப்படையில் புத்தம் புதிய 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) கார் ஒன்றை நிஸான் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

நிஸான் க்ராவைட் (Nissan Gravite) என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த புதிய கார், கடந்த ஜனவரி 21ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக நிஸான் க்ராவைட் காரின் அறிமுகம் தள்ளி போனது. இந்த சூழலில், நிஸான் க்ராவைட் காரின் புதிய அறிமுக தேதி (Launch Date) தற்போது வெளியாகயுள்ளது.

Nissan Gravite MPV

இதன்படி பார்த்தால் நிஸான் க்ராவைட் கார் வரும் பிப்ரவரி 17ம் தேதி (February 17) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது நிஸான் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் ஆகும். எனவே வரும் பிப்ரவரி 17ம் தேதி நிஸான் க்ராவைட் அறிமுகமாக போவது உறுதி.

நிஸான் க்ராவைட் காரில், 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.0 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை (Gear Box Options) நாம் எதிர்பார்க்கலாம்.

Nissan Gravite

அதே நேரத்தில் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகள் (Features) எல்லாம் நிஸான் க்ராவைட் காரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் ஆகிய வசதிகளையும் நாம் எதிர்பார்க்கலாம்.

அத்துடன் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், 3 பாயிண்ட் சீட்பெல்ட்கள், சீட்பெல்ட் ரிமைண்டர்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்ற ஏராளமான பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features), நிஸான் க்ராவைட் காரில் எதிர்பார்க்க முடியும்.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காருடன், நிஸான் க்ராவைட் போட்டியிடும். நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப விலை வெறும் 5.75-6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தின்படி பார்த்தால், எர்டிகா காரின் ஆரம்ப விலை 8.80 லட்ச ரூபாயாக உள்ளது. எனவே மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு மிகவும் விலை குறைந்த மாற்று ஆப்ஷனாக நிஸான் க்ராவைட் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் 7 சீட்டர் எம்பிவி ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு நிஸான் க்ராவைட் நல்ல ஆப்ஷனாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 4, 2026, 13:02 [IST]
English summary
Nissan gravite launch date february 17 check all details here
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+