மாருதி ஆல்டோ விலையில் 7 சீட்டர் கார் அறிமுகம்! இந்தியர்களுக்காக தரமட்டத்திற்கு இறங்கி அடித்த ஜப்பான் நிறுவனம்!

இந்தியாவில் மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி ரக கார்களுக்கு (7 Seater MPV Cars) நல்ல வரவேற்பு உள்ளது. இதை புரிந்து கொண்ட நிஸான் (Nissan) நிறுவனம், இந்த செக்மெண்ட்டில் புதிதாக ஒரு காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய போவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

அதை தொடர்ந்து புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி காரின் பெயர், நிஸான் க்ராவைட் (Nissan Gravite) என்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 21ம் தேதியே நிஸான் க்ராவைட் கார் விற்பனைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அன்று நடைபெறுவதாக இருந்த க்ராவைட் காரின் அறிமுக நிகழ்ச்சியை நிஸான் நிறுவனம் திடீரென தள்ளி வைத்தது.

Nissan Gravite

இருப்பினும் அடுத்த ஒரு சில நாட்களிலேயே நிஸான் க்ராவைட் காரின் புதிய அறிமுக தேதி அறிவிக்கப்பட்டது. இதன்படி பிப்ரவரி 17ம் தேதி (இன்று), நிஸான் க்ராவைட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என நிஸான் நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்காக இந்திய வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டிருந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு நடைபெற்ற மிகவும் பிரம்மாண்டமான நிகழ்ச்சியில், ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனத்தின் தயாரிப்பான க்ராவைட் 7 சீட்டர் எம்பிவி கார், இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

Nissan Gravite MPV

நிஸான் க்ராவைட் காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லைட்கள் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

அத்துடன் மிகவும் விலை குறைவான காராக இருந்தாலும் கூட, ரியர் ஏசி வெண்ட்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் கூல்டு க்ளவ் பாக்ஸ் போன்ற வசதிகளும், நிஸான் க்ராவைட் 7 சீட்டர் எம்பிவி காரில் வழங்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிராக்ஸன் கண்ட்ரோல், பிரேக் அஸிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரிவர்ஸ் கேமரா போன்ற பாதுகாப்பு வசதிகளும் நிஸான் க்ராவைட் காரில் வழங்கப்பட்டுள்ளன.

நிஸான் க்ராவைட் காரின் செயல்திறனை பொறுத்தவரையில், 1.0 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 71 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) கொடுக்கப்பட்டுள்ளன.

இதில், மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 19.3 கிலோ மீட்டர் மைலேஜையும், ஏஎம்டி கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 19.6 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்கும் என நிஸான் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் அமைப்பு சான்று வழங்கிய மைலேஜ் (ARAI Mileage) என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.65 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். அத்துடன் இது அறிமுக சலுகை விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் டாப் வேரியண்ட்டின் விலை 5.45 லட்ச ரூபாயாக உள்ளது. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். கிட்டத்தட்ட இதே விலையில் நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை உங்களால் வாங்கி விட முடியும்.

ஆனால் முதலில் முன்பதிவு (Bookings) செய்யும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே நிஸான் க்ராவைட் கார் வெறும் 5.65 லட்ச ரூபாய் என்ற விலையில் கிடைக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப விலை வெறும் 5.65 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு அடுத்த வேரியண்ட்டின் விலை, அதாவது செகண்ட் பேஸ் வேரியண்ட்டின் விலை 6.59 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் நிஸான் க்ராவைட் காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 8.93 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால், இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை உயர்த்த க்ராவைட் கார் உதவி செய்யும் என கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero) போன்ற 7 சீட்டர் ரக கார்களுக்கு எல்லாம் மிகவும் விலை குறைவான மாற்று ஆப்ஷனாக நிஸான் க்ராவைட் இருக்கும். இதில், மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை 8.80 லட்ச ரூபாயாக உள்ளது.

கிட்டத்தட்ட மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையில், நிஸான் க்ராவைட் காரின் டாப் வேரியண்ட்டையே வாங்கி விட முடியும் என்பது இங்கே கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது. அதே நேரத்தில் மஹிந்திரா பொலிரோ காரின் ஆரம்ப விலை 7.99 லட்ச ரூபாயாக இருக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நாங்கள் இந்த செய்தியில் கூறியுள்ள விலைகள் எல்லாம் அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 17, 2026, 20:22 [IST]
English summary
Nissan gravite launched in india price safety features engine options and more
மேலும்... #nissan #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+