இந்த கார் வாங்குனா சர்வீஸ்க்கு ஒரு பைசா கூட செலவு கிடையாது! ஏன் தெரியுமா?

நிஸான் நிறுவனம் சமீபத்தில் தான் தனது கிராவேட் என்ற காரை வெளியிட்டுள்ள நிலையில் இந்த காருக்கான சர்வீஸ் செலவு பூஜ்ஜியமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இப்படியாக ஒரு வாகனத்திற்கு எப்படி பூஜ்ஜியம் சர்வீஸ் செலவு வரும் என நீங்கள் கேட்கலாம். இது எப்படி சாத்தியம்? யாருக்கெல்லாம் சாத்தியம் என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.

நிஸான் நிறுவனம் தனது கிராவேட் காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கான புதிய புரோமோஷனல் திட்டத்தை வெளிடய்டுள்ளது. அதன்படி இந்த காரை முதலில் புக் செய்யும் 5000 பேருக்கு 5 ஆண்டுகளுக்கான பராமரிப்பு கட்டணம் முற்றிலும் இலவசம் என தெரிவித்துள்ளது.

Nissan Gravite Maintenance Cost

இது முதலில் அதிகாரப்பூர்வமாக புக் செய்யும் 5000 பேருக்கு மட்டுமே வழங்கப்படும் அதன் பிறகு இந்த காரை வாங்குபவர்களுக்கு, முன்கூட்டியே பணம் செலுத்தி பராமரிப்பு பேக்கேஜ்களை வாங்கிக்கொள்ளலாம். இந்த கவரேஜ் 5 ஆண்டுகள் வரை அல்லது 50,000 கி.மீ வரை கிடைக்கும் எது முதலில் வருகிறதோ அது அவரை கிடைக்கும். அடுத்தாக வாரண்டியும் முக்கியமான ஹைலைட், ஃபேக்டரியிலிருந்து வரும் ஒவ்வொரு காருக்கும் 3 ஆண்டுகள் அல்லது 1 கி.மீ வரை வாரண்டி கிடைக்கிறது. இதை வாண்டிக்கையாளர்கள் 10 ஆண்டுகள் அல்லது 2 லட்சம் கி.மீ வரை வாரண்டியை நீட்டித்துக்கொள்ள முடியும்.

நிஸான் நிறுவனம் இந்த கிராவேட் காரை சென்னையில் உள்ள ஆலையில் வைத்து தான் தயாரிக்கிறது. சிஎம்எஃப்-ஏ பிளாட்ஃபார்மில் தயாரிக்கிறது. இந்த பிளாட்ஃபார்மில்தான் டிரைபர் கார் இரகு்கிறது. இதில் சி வடிவ லைட்டிங் அம்சங்கள், கிளாஸியான பிளாக் கிரில் அம்சங்கள், அகலமாக திறக்கும் கதவுகள் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளது.

இந்த கார் மொத்தம் 5 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். அதன்படி இந்த கார் ஃபாரஸ்ட் கிரீன், ஆக்ஸி பிளாக், பிளேட் சில்வர், ஸ்டிரோம் ஒயிட், மெட்டாலிக் கிரே, ஆகிய கலர் ஆப்ஷன்கள் உள்ளன. சீன்டின் ஆப்ஷன்கள் பல்வேறு விதமான வழங்கப்பட்டுள்ளது. 2 சீட் முதல் 7 சீட்டிங் வரை வைத்துக்கொள்ள முடியும். 3வது வரிசை சீட்டை நீக்கினால் அதிக லக்கேஜ்களை எடுத்து செல்ல முடியும். 625 லிட்டர் பூட் வசதியை ஏற்படுத்த முடியும். 3 வரிசை சீட்டிற்கு ஏசி, பல்வேறு ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் உள்ளன.

இந்த காரில் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட் போன், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்,வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோமெட்டிக் ஹெட்லைட், பார்க்கிங் சென்சார், 30 விதமான பாதுகாப்பு அம்சங்கள், 6 ஏர்பேக்குகள், ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டிராக்ஷன் மேனேஜ்மென்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், பிரேக்கிங் சப்போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

இந்த காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி எஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 72 பிஎஸ் பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 19.3 கி.மீ மைலேஜை வழங்குகிறது. ஆட்டோமெட்டிக் வெர்ஷனில் 19.6கி.மீ மைலேஜை வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையாக தங்கள் வாகனங்களை களம் இறக்கி வரும் நிலையில் இந்த கிராவேட் கார் குறைந்த விலையில் குடும்பத்துடன் பயணிக்க ஏற்றகாராக இருப்பது மட்டுமல்லாமல் இதற்கான பராமரிப்பு செலவும் குறைவு என்பதால் மக்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 19, 2026, 11:30 [IST]
English summary
Nissan gravite mpv extended 10 year warranty zero maintenance cost
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+