இன்னும் 4 நாள் தான்! நாடே எதிர்பார்க்கும் காரில் நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம்?

நிஸான் நிறுவனம் கிராவைட் என்ற எம்பிவி காரை இந்திய மார்க்கெட்டில் வரும் 21-ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது. இந்த அறிமுகமாக இன்னும் நான்கு நாட்கள் தான் உள்ள நிலையில், இந்த கார் குறித்து தற்போது வரை நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் மற்றும் இது குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

நிஸான் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் கிராவைட் காரை வரும் 21ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது. இது 2026ம் ஆண்டின் அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக விற்பனைக்கு வருகிறது. இந்த காரின் அறிமுகம் மட்டுமல்லாமல் இந்நிறுவனத்தின் டெக்டான் என்ற காரின் காட்சிப்படுத்துதலும் இந்த நிகழ்வின் போது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஒரு 5 சிட்டர் எஸ்யூவி காராக ஒரு பிப்ரவரி 4-ஆம் தேதி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மற்றொரு புதிய கார் இந்நிறுவனத்தை தயாரிக்கப்படுகிறது. அது 2027ம் ஆண்டு விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Nissan Gravite MPV

இந்த மூன்று காரும் பிரத்தியேகமாக இந்தியாவில் வைத்து தயாரிக்கப்படுகிறது. இது இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 13,470 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ஏற்றுமதியே கடந்த டிசம்பர் மாதம் தான் இந்நிறுவனம் பெற்றுள்ளது.

இதன் மூலம் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் ஒட்டுமொத்தமாக இந்நிறுவனம் 12 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த கார் சிஎம்எப்-ஏ கட்டுமானத்தில் உருவாக்கப்பட்ட கார் ஆகும் .ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்பார்மில் தான் இந்த கார் உருவாக்கப்படுகிறது. நிஸான் நிறுவனம் இந்த காரில் சில ஸ்டைலான அம்சங்கள் வித்தியாசமான மாற்றங்களை முன் பக்கத்தில் கருப்பு நிறத்தில் கிரில் செக்ஷன் வழங்கப்பட்டுள்ளது. ஸ்லிமான எல்இடி ஸ்ட்ரிப் வழங்கப்பட்டுள்ளது.

Nissan Gravite MPV

மற்ற முக்கிய அம்சங்களாக இன்டகிரேட் செய்யப்பட்ட ஹெட் லைட்டுகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பேனட் முன்பகுதியில் கிராவைட் என்ற ஆங்கில எழுத்துக்கள் ஆகிய வழங்கப்பட்டுள்ளன. பின்பகுதியில் கனெக்டெட் எல்இடி லைட் உயரமான டெயில் கேட் வடிவமைப்பு, இன்டர்கேட் செய்யப்பட்ட ரூஃப் ஸ்பாயிலர்கள் பம்பர் பகுதியில் ஸ்கிட் பிளேட் மற்றும் போட்டியான லுக் வடிவமைப்பில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கிராவைட் காரின் உட்பகுதியில் மூன்று வரிசை கொண்ட கேபின்லேஅவுட் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் உட்பகுதி முழுவதும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிராக்டிகல் மற்றும் போட்டி சிறப்பு தன்மை வாய்ந்த அம்சங்கள் பல இந்த காரில் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்பட்டுள்ளது. இது நேச்சுரல் மற்றும் டர்போ சார்ஜர் என இரண்டு ஆப்ஷன்களிலும் கிடைக்கும் வகையில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன்களிடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த காரின் டெலிவரி மற்றும் ஷோரூம் வருகை எல்லாம் வரும் மார்ச் மாதத்திற்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அறிமுகம் தான் நடக்கிறது. அதன் பிறகு புக்கிங் மற்றும் டெலிவரிகள் சற்று தாமதமாக வாய்ப்புகள் உள்ளன. நிஸான் நிறுவனம் தனது டீலர் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்நிறுவனம் 2027ம் ஆண்டு முடிவுக்குள் 250 இடங்களில் தனது டீலர்ஷிப் விலை விரிவாக்க திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 17, 2026, 12:45 [IST]
English summary
Nissan gravite mpv india debut what to expect
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+