மஹிந்திரா பொலிரோவை விட ரூ.2 லட்சம் குறைவான விலையில் 7 சீட்டர் கார்! நாளைக்கு இந்திய மார்க்கெட் அதிர போகுது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று நிஸான் க்ராவைட் (Nissan Gravite). கடந்த ஜனவரி மாதமே நிஸான் க்ராவைட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. எதிர்பாராதவிதமாக நிஸான் க்ராவைட் காரின் அறிமுகம் தள்ளி போனது.

இதற்கான காரணத்தை நிஸான் நிறுவனம் அறிவிக்கவில்லை. இருப்பினும் வரும் பிப்ரவரி 17ம் தேதி (நாளை) நிஸான் க்ராவைட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என நிஸான் நிறுவனம் அறிவித்தது. இதன்படி நிஸான் க்ராவைட் கார் இந்திய சந்தையில் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Renault Triber Seats

நிஸான் க்ராவைட் காரில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் (Gear Box Options), நிஸான் க்ராவைட் காரில் வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபக்கம் இபிடி உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகளை (Safety Features) எல்லாம் நிஸான் க்ராவைட் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nissan Gravite MPV

அத்துடன் கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், அனைத்து வரிசை இருக்கைகளிலும் ஏசி வெண்ட்கள் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்ற வசதிகளையும் நிஸான் க்ராவைட் காரில் நாம் எதிர்பார்க்கலாம்.

மேலும் 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 17.78 செமீ டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகளும், நிஸான் க்ராவைட் காரில் வழங்கப்படலாம். நிஸான் நிறுவனத்துடன் கூட்டணியில் இருந்து வரும் ரெனால்ட் நிறுவனத்தின் தயாரிப்பான ட்ரைபர் காரின் அடிப்படையில் க்ராவைட் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காரை போலவே, நிஸான் க்ராவைட் காரும் மிகவும் குறைவான விலையில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.75 லட்ச ரூபாய் முதல் 6 லட்ச ரூபாய் வரையில்தான் இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

அதே நேரத்தில் நிஸான் க்ராவைட் காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 8.50 லட்ச ரூபாய் முதல் 9 லட்ச ரூபாய் வரையில்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான், நிஸான் க்ராவைட் காரின் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில் ஒரு 7 சீட்டர் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு நிஸான் க்ராவைட் மிகவும் ஏற்றதாக இருக்கும். இந்த காரின் பின் பக்க இருக்கைகள் மடக்கி வைத்து கொள்ள கூடிய வகையில் வழங்கப்பட்டிருக்கும். எனவே அவசியம் ஏற்பட்டால், இருக்கைகளை மடக்கி வைத்து கொண்டு, அதிக லக்கேஜ்களையும் கொண்டு செல்ல முடியும்.

நிஸான் க்ராவைட் காரின் வருகை, மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு (Maruti Suzuki Ertiga) போட்டியாக இருக்கும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலையே 8.80 லட்ச ரூபாயாக உள்ளது. எனவே மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு மாற்றாக, மிகவும் குறைவான விலையில், ஒரு 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) காரை தேடி கொண்டிருப்பவர்களுக்கு நிஸான் க்ராவைட் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

அதேபோல் 7.99 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனையாகி வரும் மஹிந்திரா பொலிரோ 7 சீட்டர் காருக்கும் கூட, நிஸான் க்ராவைட் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். நிஸான் க்ராவைட் காரின் வருகை, இந்தியாவின் விலை குறைவான 7 சீட்டர் கார் செக்மெண்ட்டில், போட்டியை மிகவும் கடுமையானதாக மாற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, February 16, 2026, 12:17 [IST]
English summary
Nissan gravite mpv india launch tomorrow expected price safety features
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+