மிகவும் விலை குறைவான 7 சீட்டர் காரை இனி வாங்கறது கஷ்டம்! இது தெரிஞ்சிருந்தா முன்னாடியே வாங்கியிருக்கலாம்!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி கார்களில் ஒன்று நிஸான் க்ராவைட் (Nissan Gravite). இந்த காரின் விலையை நிஸான் நிறுவனம் தற்போது அதிரடியாக உயர்த்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

நிஸான் க்ராவைட் காரின் வைசியா பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்டின் விலை 8,400 ரூபாய் உயர்ந்துள்ளது. தற்போது அதன் விலை 5,73,400 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். அதே நேரத்தில் அசெண்டா பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்டின் விலை 9,400 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

Nissan Gravite

தற்போது அதன் விலை 6,68,400 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் என்-கனெக்ட்டா பெட்ரோல் ஏஎம்டி, டெக்னா பெட்ரோல் ஏஎம்டி மற்றும் டெக்னா எல்இ பெட்ரோல் ஏஎம்டி வேரியண்ட்களின் விலை தலா 15 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அவற்றின் விலை தற்போது முறையே 7.95 லட்சம், 8.64 லட்சம் மற்றும் 9.09 லட்ச ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் டெக்னா பெட்ரோல் மேனுவல் மற்றும் டெக்னா எல்இ பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்களின் விலை தலா 17 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளன. அவற்றின் விலை தற்போது முறையே 8.08 லட்ச ரூபாய் ஆகவும், 8.53 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில் இருப்பதிலேயே அதிகபட்சமாக என்-கனெக்ட்டா பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்டின் விலை 18,400 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

Nissan Gravite MPV

அதன் விலை தற்போது 7,38,400 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துமே நிஸான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணைதளத்தில் குறிப்பிட்டுள்ள புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom Prices) ஆகும். இது சிறிய அளவிலான விலை உயர்வு மட்டுமே என்பதால், நிஸான் க்ராவைட் காரின் விற்பனையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது என எதிர்பார்க்கப்படுகிறது.

செயல்திறனை பொறுத்தவரையில், நிஸான் க்ராவைட் காரில் 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதனுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நிஸான் க்ராவைட் காரில் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை என்பது ஒரு குறையாகும்.

ஆனால் நிஸான் நிறுவனம் கூடிய விரைவில் இந்த குறையை நிவர்த்தி செய்யும் என செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூடிய விரைவில் நிஸான் நிறுவனம் க்ராவைட் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை வழங்கும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நடக்கும்பட்சத்தில் நிஸான் க்ராவைட் காரின் விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் நிஸான் தற்போது புத்துணர்ச்சியுடன் இயங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார்தான் க்ராவைட். இதற்கு அடுத்தபடியாக அடுத்த மாத இறுதியில் நிஸான் நிறுவனம் டெக்டான் (Nissan Tekton) மிட்-சைஸ் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இது 5 சீட்டர் கார் ஆகும். 5 சீட்டர் மாடலை தொடர்ந்து, நிஸான் டெக்டான் காரின் 7 சீட்டர் வெர்ஷனும் விற்பனைக்கு வரவுள்ளது. எனவே எதிர்காலத்தில் இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.

Article Published On: Monday, June 8, 2026, 13:29 [IST]
English summary
Nissan gravite mpv price hike turbo petrol launch soon
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out