வெறும் அஞ்சரை லட்சத்துக்கு 7 பேர் போற கார்! விவரம் தெரியாமல் வந்து மாட்டி கொண்ட ஜப்பான் நிறுவனம்!

இந்தியாவின் 7 சீட்டர் எம்பிவி கார் (7 Seater MPV Car) செக்மெண்ட்டில், மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போதைய நிலையில் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8.80 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இதற்கு போட்டியாக சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் நிஸான் க்ராவைட் (Nissan Gravite). கடந்த பிப்ரவரி மாதம்தான் நிஸான் க்ராவைட் கார் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.65 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

Nissan Gravite Seats

அதாவது மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் உடன் ஒப்பிடும்போது, நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 3.15 லட்ச ரூபாய் குறைவு ஆகும். இருப்பினும் ஆரம்பத்திலேயே நிஸான் க்ராவைட் காரின் விற்பனை 'டல்' அடிக்க தொடங்கியுள்ளது.

நிஸான் நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய சந்தையில் 2,375 க்ராவைட் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன் பின் வந்த ஏப்ரல் மாதம் வெறும் 1,428 நிஸான் க்ராவைட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது ஏப்ரல் மாதத்தில் 947 நிஸான் க்ராவைட் கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது 40 சதவீத வீழ்ச்சி ஆகும்.

Nissan Gravite MPV

ஆட்டோ பண்டிட்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது. நிஸான் க்ராவைட் காரில், 6 ஏர்பேக்குகள், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் டிராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகள் (Safety Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.

அத்துடன் 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 17.78 செமீ முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள் போன்ற வசதிகளையும் நிஸான் க்ராவைட் கார் கொண்டுள்ளது.

செயல்திறனை பொறுத்தவரையில் 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்படுகின்றன. நிஸான் க்ராவைட் காரில் தற்போது அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிஎன்ஜி கிட் வழங்கப்படுகிறது. இது ட்வின் சிலிண்டர் கிட் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளதால், அதற்கு பதிலாக ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனத்தின் தயாரிப்பான க்ராவைட்டை இந்திய மக்கள் தேர்ந்தெடுப்பது என்பது சற்று சிரமமான ஒரு காரியம்தான். இருப்பினும் மிகவும் குறைவான விலையில் ஒரு 7 சீட்டர் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு நிஸான் க்ராவைட் நல்ல ஆப்ஷனாகவே இருக்கும்.

Article Published On: Sunday, May 24, 2026, 15:50 [IST]
English summary
Nissan gravite mpv registers 40 per cent down in april sales price safety features engine gear box
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+