10 லட்ச ரூபாயில் விலை என்றாலும், கார் ரொம்ப பிரம்மாண்டமாக இருக்கும்! பொங்கல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜப்பானை சேர்ந்த நிசான் (Nissan) நிறுவனம் தனது புதிய 'கிராவைட்' (Gravite) என்கிற சப்-காம்பாக்ட் எம்பிவி (Sub-Compact MPV) காரை அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது. மார்ச் மாதத்தோடு முடியும் 2025-26ஆம் நிதியாண்டின் இறுதிக்குள் இந்த கார் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் நிசான் வழங்கும் இரண்டாவது கார் இதுவாகும்; இது இந்திய சந்தையில் ஒரு முக்கிய இடத்தைப் பெறும் என கணிக்கப்படுகிறது.

ரெனால்ட் டிரைபர் (Renault Triber) காரின் சகோதர மாடலாக உருவாகியுள்ள கிராவைட் ஆனது சில ஆண்டுகளுக்கு முன்பு நிசான் நிறுவனம் டட்சன் (Datsun) பிராண்டை கைவிட்டதால் ஏற்பட்ட சந்தை இடைவெளியை நிரப்பும் விதமாகக் கொண்டுவரப்படுகிறது. தற்போது இந்தியாவில் ரூ.10 லட்சம் விலையிலான கார் மார்க்கெட் ஆனது எண்ட்ரி-லெவல் கார்களுக்கான இயல்பான தளமாக மாறியுள்ளதோடு, பல முக்கிய கார் நிறுவனங்களின் போட்டி நிறுவனங்களும் இங்கு உள்ளன.

nissan gravite mpv expectations

இதனால், கிராவைட் காரை இந்திய ரூ.10 லட்ச ரூபாய் கார் மார்க்கெட்டில் வெற்றிகரமான மாடலாக நிலைநிறுத்த நிசான் சில முக்கியமான திட்டங்களைச் செயல்படுத்துவது அவசியம் ஆகும். சப்-காம்பாக்ட் கார்கள் பிரிவில் காரின் தோற்றம் ஆனது வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த வகையில், நிசான் தனது கிராவைட் மாடலை டிரைபரில் இருந்து தனித்துவமானதாக வடிவமைக்க வேண்டும்.

இதன்படி, புதிய முன் மற்றும் பின்பக்க தோற்றங்கள், தனித்துவமான டிசைனிலான சக்கரங்கள் மற்றும் லைட் செட்-அப்கள் புதிய நிசான் கிராவைட் காரில் இருத்தல் வேண்டும். டிரைபர் உடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த வடிவம் மற்றும் நீளம், அகலம் உள்ளிட்ட பரிமாண அளவுகளில் பெரிய மாற்றங்கள் இல்லாத போதிலும், கிராவைட்டை நிசான் தனித்து நிற்கச் செய்வது அவசியம் ஆகும்.

nissan gravite mpv expectations

ரெனால்ட் டிரைபரின் நிறங்களில் இருந்து மாறுபட்ட மற்றும் கவர்ச்சிகரமான கலர் ஆப்ஷன்களை கிராவைட் காருக்கு நிசான் வழங்குவதன் மூலம், இந்த இரண்டு கார்களும் தங்களுக்கான அடையாளங்கள் உடன் தனித்துவமாகத் தெரியும். நிசான் கிராவைட் எம்பிவி கார் ஆனது டிரைபருடன் ஒப்பிடும்போது குறைந்தது ஒரு தனித்துவமான சிறப்பம்சத்தையாவது கொண்டிருக்க வேண்டும்.

டிரைபரின் டாப்-ஸ்பெக் வேரியண்ட்டில் இரண்டு டிஜிட்டல் திரைகள், வயர்லெஸ் சார்ஜர், USB-C சார்ஜிங் போர்ட்கள் மற்றும் டச் மூலம் மடிக்கக்கூடிய இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கும் ஏசி வென்ட்கள் போன்ற வசதிகள் இருந்தால், அவை வாடிக்கையாளர்களை ஈர்க்கும். இந்த போட்டியில் நிசான் ஒரு படி மேலே சென்று, கனெக்டட் கார் தொழில்நுட்பம், அலாய் சக்கரங்கள் மற்றும் 360-டிகிரி கேமரா போன்ற அம்சங்களை கிராவைட்டில் சேர்க்கலாம்.

nissan gravite mpv expectations

இந்த அம்சங்கள் தற்போது இந்திய கார் சந்தையில் மிகவும் விரும்பப்படும் தொழில்நுட்பங்களாகும். இவை கிராவைட்டிற்கு ஒரு தனித்துவமான மதிப்பை சேர்க்கும். கிராவைட், டிரைபரை விட சற்று அதிக விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், போட்டி நிறுவனங்களின் கார்களுடன் ஒப்பிடுகையில் கவர்ச்சிகரமானதாக இருக்க, அதிகபட்சமாக ரூ.40,000 மட்டுமே விலை வித்தியாசம் இருக்க வேண்டும்.

தற்போதைக்கு, ரெனால்ட் டிரைபர் ஒரேயொரு டாப்-எண்ட் ஆட்டோமேட்டிக் (AT) வேரியண்ட்டை மட்டுமே வழங்குகிறது. நிசான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, குறைந்த விலையிலான மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களை கிராவைட்டில் அறிமுகப்படுத்துவதன் மூலம் சந்தையில் ஒரு முக்கிய அனுகூலத்தைப் பெற முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட்டும், நிசானும் இணைந்து ஒரு கூட்டணியில் தான் செயல்படுகின்றன. இதனால், டிரைபர் மற்றும் புதிய கிராவைட் ஆகிய இரு எம்பிவி கார்களின் உருவாக்கத்திலும் இந்த இரு நிறுவனங்களின் பங்களிப்பும் உள்ளது. இருப்பினும், ரெனால்ட் டிரைபரை போன்று 10 லட்ச ரூபாய் விலைக்குள் குறைந்த விலையிலான, அளவில் பெரியதான எம்பிவி ரக காராக நிசான் கிராவைட் கொண்டுவருகிறது எனும்போது, அதன் முதன்மை போட்டி மாடலாக ரெனால்ட் டிரைபர் இருக்கும். புதிய நிசான் கிராவைட் எம்பிவி கார் வருகிற பொங்கல் பண்டிகைக்கு பிறகு வெளியீடு செய்யப்பட உள்ளது. அதாவது, காரின் விலையை தவிர்த்து மற்ற விபரங்கள் அனைத்தும் வெளியிடப்பட உள்ளன.

More from DriveSpark

Article Published On: Sunday, January 4, 2026, 9:19 [IST]
English summary
Nissan gravite mpv that planned to unveil around pongal season check all expectations here
மேலும்... #nissan #Pongal 2026 #mpv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X