தாராளமான இடவசதி! வெறும் அன்ஜே முக்கா லட்சத்துக்கு 7 சீட்டர் கார்! வர்ற 17ம் தேதி இந்தியாவையே அதிர விட போகுது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று நிஸான் க்ராவைட் (Nissan Gravite). 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) ரகத்தை சேர்ந்த நிஸான் க்ராவைட் கார், வரும் பிப்ரவரி 17ம் தேதி (February 17) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நிஸான் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் (Instagram), க்ராவைட் காரின் புதிய வீடியோ (Video) ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ள அந்த வீடியோவில், நிஸான் நிறுவனம் க்ராவைட் காரை, 6 உறுப்பினர்களை கொண்ட ஒரு பெரிய குடும்பத்திடம் டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு ஒப்படைப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

இன்னும் விற்பனைக்கே வராத கார் ஒன்றை டெஸ்ட் டிரைவ் செய்ய போவதை எண்ணி, அந்த குடும்பத்தினர் மகிழ்ச்சியடைகின்றனர். பின்னர் அதே மகிழ்ச்சியுடன் அந்த குடும்பத்தினர், நிஸான் க்ராவைட் காரை எடுத்து கொண்டு, டெஸ்ட் டிரைவ் செய்ய புறப்பட்டு விட்டனர். லக்கேஜ்களை வைத்த பிறகும் கூட, அத்தனை பேருக்கும் இடவசதி தாராளமாக இருப்பதை பார்த்து அந்த குடும்பத்தினர் ஆச்சரியம் அடைகின்றனர்.
அத்துடன் நிஸான் க்ராவைட் காரின் செயல்திறனும் அவர்களை ஆச்சரியப்படுத்துகிறது. எனவே நிஸான் க்ராவைட் காரில் தொலை தூர பயணங்களை மிகவும் சுலபமாக மேற்கொள்ளலாம் எனவும் அவர்கள் பேசி கொள்கின்றனர். இறுதியில் நிஸான் க்ராவைட் காரை நம்முடனே வைத்து கொள்ளலாமா? என அந்த குடும்பத்தை சேர்ந்த சிறுவன் கேட்பதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.

இது நிஸான் இந்தியா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள விளம்பர வீடியோவாக இருப்பினும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிஸான் க்ராவைட் காரின் இடவசதி, சௌகரியம் மற்றும் செயல்திறன் போன்ற அம்சங்கள் எல்லாம், வாடிக்கையாளர்களை எளிதாக சென்றடையும் வகையில், மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ள ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காரின் அடிப்படையில்தான், நிஸான் க்ராவைட் கார் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே ரெனால்ட் ட்ரைபர் காரின் இன்ஜின், வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அப்படியே நிஸான் க்ராவைட் காரிலும் நம்மால் எதிர்பார்க்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 5.75-6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
எனவே மிகவும் குறைவான விலையில் 7 சீட்டர் காரை எதிர்பார்க்க கூடிய இந்திய வாடிக்கையாளர்களுக்கு நிஸான் க்ராவைட் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. அத்துடன் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காருக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாகவும் நிஸான் க்ராவைட் இருக்கும்.


Click it and Unblock the Notifications








