மாருதியால் கூட இவ்ளோ கம்மியான விலையில் 7 சீட்டர் காரை தயாரிக்க முடியாது! இந்தியாவை மிரள விட்ட ஜப்பான் நிறுவனம்
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று நிஸான் க்ராவைட் (Nissan Gravite). கடந்த பிப்ரவரி 17ம் தேதிதான் நிஸான் க்ராவைட் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது. இது மிகவும் விலை குறைவான 7 சீட்டர் கார் (Most Affordable 7 Seater Car) என்பதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதன் காரணமாக தனது முதல் முழு மாதத்திலேயே மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை நிஸான் க்ராவைட் கார் பதிவு செய்து அசத்தியுள்ளது. நிஸான் க்ராவைட் காரின் கடந்த மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால் கடந்த மார்ச் மாதம் 2,375 நிஸான் க்ராவைட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த மார்ச் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட நிஸான் நிறுவனத்தின் கார் என்ற பெருமையை புதிய க்ராவைட் பெற்றுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக நிஸான் மேக்னைட் (Nissan Magnite) கார் 2,033 என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. தற்போதைய நிலையில் இந்த 2 கார்கள் மூலமாக மட்டுமே நிஸான் நிறுவனத்திற்கு ஓரளவிற்கு விற்பனை எண்ணிக்கை கிடைத்து கொண்டுள்ளது. இவை தவிர நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-Trail) என்ற காரையும் நிஸான் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

ஆனால் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரின் விற்பனை எண்ணிக்கை அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்த சூழலில் புதுவரவாக வந்துள்ள நிஸான் க்ராவைட் கார், இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்தை தாங்கி பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதன் மிகவும் குறைவான விலைதான் இதற்கு மிக முக்கியமான காரணம் ஆகும்.
நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப விலை வெறும் 5.65 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இதற்கு அடுத்தபடியாக இன்னும் ஏராளமான கார்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய நிஸான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், நிஸான் டெக்டான் (Nissan Tekton) மிகவும் முக்கியமானது ஆகும்.
புதிய தலைமுறை ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காரின் அடிப்படையில் நிஸான் டெக்டான் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் மற்றும் ஜப்பானை சேர்ந்த நிஸான் ஆகிய 2 நிறுவனங்களும் நீண்ட காலமாகவே கூட்டணியில் இருந்து வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். நிஸான் டெக்டான் கார் இன்னும் ஒரு சில வாரங்களில் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது 5 சீட்டர் எஸ்யூவி ரக கார் ஆகும். இதற்கு அடுத்தபடியாக நிஸான் டெக்டான் காரின் 7 சீட்டர் வெர்ஷனையும் நிஸான் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிஸான் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயர உதவியுள்ள நிஸான் க்ராவைட் கார், மிகவும் குறைவான விலையில் ஒரு 7 சீட்டர் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு நல்ல ஆப்ஷன் ஆகும். மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் ரெனால்ட் ட்ரைபர் போன்ற கார்களுக்கு மாற்றாக நிஸான் க்ராவைட் காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications








