எர்டிகா எல்லாம் ஓரம் போ! இந்த கார் தான் இனி குடும்பத்தோட போக எல்லாரும் வாங்க போறாங்க!

நிஸான் நிறுவனம் தனது கிராவேட் என்ற காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது இந்த கார் ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உள்ளது. இந்த கார் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உருவாக்கப்பட்டாலும், இரண்டு கார்களுக்கும் பல்வேறு வித விதமான வித்தியாசங்கள் இருக்கிறது. இப்படியாக இரண்டு கார்களக்கும் இடையிலான வித்தியாசங்கள் குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இதுதான் அந்நிறுவனத்தின் கிராவேட் கார் ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் காரும் கிட்டத்தட்ட பார்க்க ஒரே மாதிரியான அம்சங்கள் தான் இருக்கிறது. இந்த இரண்டு காரர்களிலும் பல்வேறு அம்சங்கள் ஒன்றாகவே உள்ளன. ஆனால் மிக முக்கியமான வித்தியாசம் என்றால் ஸ்டைலிங் விஷயத்தில் இரண்டு கார்களும் வித்தியாசப்படுகின்றன.

Nisan Gravite vs Renault Triber

ரெனால்ட் டிரைபர் காரில் இருந்து நிஸான் கிராவேட் கார் முன் பக்க வடிவமைப்பில் முற்றிலுமாக மாறுபட்டதாக இருக்கிறது. இதில் புதிய டிஆர்எல் லைட்டிங் செட் உள்ளது0 பேனட் பகுதியில் பெரிய லெட்டர் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. பம்பர் பகுதியிலும் சி வடிவ லைட்டுகள் உள்ளன. வீல் வடிவமைப்பும் வித்தியாசமான வடிவமைப்பாக வழங்கப்பட்டுள்ளது.

பின்பக்க ஸ்டைலிங் சற்று வித்தியாசமாக வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் உள்ளதை போல அதிக மாற்றங்கள் இல்லை என்றாலும் பின்பக்கம் கிட்டத்தட்ட டிரைவர் காரின் வடிவமைப்பு போல இருந்தாலும் இந்த காருக்கான தனித்துவமான அம்சங்கள் உள்ளன. அடுத்து மிக முக்கியமான மாற்றம் கலர் அம்சங்கள் தான் இந்த நிஸான் கிராவேட் கார் ஃபாரெஸ்ட் கிரீன், ஆங்சி பிளாக், பிளேடு சில்வர், மெட்டாலிக் கிரை மற்றும் ஸ்னோ வைட் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.

அடுத்ததாக உட்புறத்தை பொருத்தவரை டிரைவர் காரின் அதே உட்புற அமைப்புதான் இருக்கிறது என்று சொல்லலாம் நிஸான் லோகோ மற்றும் சிறு சிறிய மாற்றங்கள் மட்டுமே வித்தியாசமாக இருக்கிறது. சீட்டிங் அமைப்புகளும் டிரைபர் காரில் உள்ள அதே சிட்டிங் அமைப்புகள் தான் நான்கு மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட கார்களில் இந்த கிராவேட் கார் நல்ல அதிக இட வசதிகள் கொண்ட காராக இருக்கிறது. மூன்றாவது வரிசை சிறிதாக இருந்தாலும் இதன் அளவு சற்று ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கிறது. லக்கேஜ் வைப்பதற்கான இட வசதி சற்று குறைவாக தான் உள்ளது.

இன்ஜினை பொருத்தவரை டிரைபர் காரில் உள்ள அதை 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது. இது ஹை ஸ்பீடு மேனுவல் மற்றும் வருகிறது. அடுத்து மிக முக்கியமான வித்தியாசம் என்றால் விலை தான் கிராவேட் கார் டிரைபர் காரைவிட ரூபாய் 10,000 குறைவான விலையில் விற்பனைக்கு வருகிறது. சில ஸ்டைல் மாற்றங்கள் இருந்தாலும் விலை 10 ஆயிரம் வரை குறைவாக இருப்பதால் பலன் இந்த காரை விரும்பி வாங்க வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மூன்று வரிசை சீட் கொண்ட கார்களில் டிரைபர் காருக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும் இந்த செக்மெண்டில் மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் தான் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் நிசான் நிறுவனத்தின் கிராவேட் கார் டிரைபர் காரில் உள்ள பிரச்சனைகளை எல்லாம் குறைத்து புதிய அவதாரம் எடுத்துள்ளதால் கிட்டத்தட்ட எர்டிகாகாருக்கு கடும் போட்டியாக இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்

More from DriveSpark

Article Published On: Wednesday, February 18, 2026, 12:10 [IST]
English summary
Nissan gravite vs renault triber which offers better value
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+