அவ்ளோதான் முடிஞ்சுதுனு எல்லாரும் நெனச்ச ஜப்பான் கம்பெனி! சென்னைக்கு நன்றி சொல்லியே ஆகணும்!

ஜப்பானை சேர்ந்த நிஸான் (Nissan) நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மொத்தம் 3 கார்களை விற்பனை செய்து வருகிறது. அவை நிஸான் க்ராவைட் (Nissan Gravite), நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-Trail) ஆகியவை ஆகும்.

இதில், நிஸான் க்ராவைட் இந்திய சந்தைக்கு புது வரவு ஆகும். கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதிதான் நிஸான் க்ராவைட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அறிமுகம் இந்திய சந்தையில் துவண்டு போயிருந்த நிஸான் நிறுவனத்திற்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

Nissan Magnite Side Design

நடப்பு 2026ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டை நிஸான் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் நிஸான் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 2,948 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 118 சதவீத வளர்ச்சி ஆகும்.

இது மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் நிஸான் மேக்னைட் மற்றும் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் என 2 கார்களை மட்டுமே நிஸான் நிறுவனம் விற்பனை செய்து கொண்டிருந்தது. தற்போது நிஸான் க்ராவைட் காரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளதால் நிஸான் நிறுவனம் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

Nissan Gravite

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் நிஸான் க்ராவைட் கார் நிஸான் நிறுவனத்திற்கு இந்தியாவில் புது தெம்பை கொடுத்துள்ளது. ஏனெனில் இந்தியாவின் உள்நாட்டு விற்பனையில் வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் தொடர்ந்து 3வது மாதமாக நிஸான் நிறுவனம் தற்போது வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

இன்னும் புரியும்படி சொல்வதென்றால், கடந்த 2025ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டின் மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் நிஸான் நிறுவனம் இந்தியாவின் உள்நாட்டு விற்பனையில் தொடர்ந்து வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது. நிஸான் க்ராவைட் காரின் அறிமுகமே இதற்கு காரணம்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப விலை வெறும் 5.65 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான 7 சீட்டர் கார் (Most Affordable 7 Seater Car In India) என்ற பெருமையை நிஸான் க்ராவைட் தன்வசம் வைத்துள்ளது.

இதன் நேரடி போட்டி மாடலான ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை கூட இதை விட சற்று அதிகம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 5.81 லட்ச ரூபாயாக உள்ளது. அதாவது ரெனால்ட் ட்ரைபரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையை விடவே நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 16 ஆயிரம் ரூபாய் குறைவு.

இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்திற்கு மறுவாழ்வு அளித்துள்ள நிஸான் க்ராவைட் கார் சென்னையில் (Chennai) உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வரும் மாதங்களில் நிஸான் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் நிஸான் டெக்டான் (Nissan Tekton) கார் புதிதாக விற்பனைக்கு வரவுள்ளது. இது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) போன்ற கார்களுக்கு போட்டியாக நிஸான் டெக்டான் வரவுள்ளது.

Article Published On: Tuesday, June 2, 2026, 16:37 [IST]
English summary
Nissan india registers third consecutive month of sales growth in may 2026 thanks to gravite mpv
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out