அடிமாட்டு விலையில் விற்கப்படும் ஜப்பான் நிறுவன காரில் அதிரடி அப்டேட்! மாருதி, டாடாவுக்கு டஃப் குடுக்க போகுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று நிஸான் மேக்னைட் (Nissan Magnite). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி (Sub-4 Metre Compact SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனத்தின் தயாரிப்பான மேக்னைட் கார், ஏராளமான சிங்கிள் டோன் மற்றும் ட்யூயல் டோன் கலர் ஆப்ஷன்களில் (Colour Options) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நிஸான் மேக்னைட் காரில், ப்ளேடு சில்வர், ஸ்ட்ரோம் ஒயிட், பியர்ல் ஒயிட், ஓனிக்ஸ் பிளாக், ஃப்ளேர் கார்னெட் ரெட், மெட்டாலிக் க்ரே மற்றும் சன்ரைஸ் காப்பர் ஆரஞ்ச் ஆகிய சிங்கிள் டோன் கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் நிஸான் மேக்னைட் காரில் தற்போது புதியதாக ஒரு கலர் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

Nissan Magnite

அது ஆலிவ் ப்ரோன்ஸ் கலர் ஆப்ஷன் ஆகும். இதுதவிர பியர்ல் ஒயிட்/ஓனிக்ஸ் பிளாக்,ஃப்ளேர் கார்னெட் ரெட்/ஓனிக்ஸ் பிளாக், பிளேடு சில்வர்/ஓனிக்ஸ் பிளாக் மற்றும் சன்ரைஸ் காப்பர் ஆரஞ்ச்/ஓனிக்ஸ் பிளாக் ஆகிய ட்யூயல் டோன் கலர் ஆப்ஷன்களும், நிஸான் க்ராவைட் காரில் வழங்கப்பட்டு வருகின்றன.

புதிய கலர் ஆப்ஷன் வழங்கப்பட்டிருப்பதை தவிர, நிஸான் மேக்னைட் காரில் வேறு எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. நிஸான் மேக்னைட் காரில், 7 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.

Nissan Magnite

அத்துடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள், கூல்டு க்ளவ் பாக்ஸ், சுறா துடுப்பு ஆன்டெனா, க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் மற்றும் லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல் போன்ற வசதிகளும், நிஸான் மேக்னைட் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் நிஸான் மேக்னைட் காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் (Safety Features) பஞ்சம் இல்லை. நிஸான் மேக்னைட் காரின் பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹைட்ராலிக் பிரேக் அஸிஸ்ட், வெய்கில் டைனமிக் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ட்ராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமானவையாக உள்ளன.

செயல்திறனை பொறுத்தவரையில் நிஸான் மேக்னைட் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகியவை ஆகும். அதே நேரத்தில் 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு ஏஎம்டி மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் (Gear Box Options) நிஸான் மேக்னைட் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் நிஸான் மேக்னைட் காரின் ஆரம்ப விலை வெறும் 5.65 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது நிஸான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இதன் மூலம் இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக நிஸான் மேக்னைட் உள்ளது.

இந்திய சந்தையில் டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, ரெனால்ட் கைகர், ஸ்கோடா கைலக் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆகிய கார்களுக்கு எல்லாம் நிஸான் மேக்னைட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

Article Published On: Friday, May 15, 2026, 11:08 [IST]
English summary
Nissan magnite compact suv gets new colour option check all details here
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+