மாருதி வேகன் ஆரை விட குறைவான விலையில் 7 சீட்டர் கார்! இந்திய மார்க்கெட்டை புரட்டி போட்ட ஜப்பான் நிறுவனம்!

ஜப்பானை சேர்ந்த நிஸான் (Nissan) நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் வரை இந்திய சந்தையில் தள்ளாடி கொண்டிருந்தது. இந்திய சந்தையில் நிஸான் நிறுவனம் விற்பனை செய்து கொண்டிருந்தது வெறும் 2 கார்கள் மட்டுமே. அவை நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் நிஸான் எக்ஸ் ட்ரெயில் (Nissan X Trail) ஆகும்.

இதில், நிஸான் எக்ஸ் ட்ரெயில் காரின் விற்பனை படுமோசம். நிஸான் மேக்னைட் கார் மட்டுமே, இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்தை தாங்கி பிடித்து கொண்டிருந்த தூணாக இருந்தது. ஆனால் அதற்கு பக்க பலமாக தற்போது 7 சீட்டர் காரான நிஸான் க்ராவைட் (Nissan Gravite), விற்பனைக்கு வந்துள்ளது.

Nissan Gravite Seats

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிஸான் க்ராவைட் கார், கடந்த பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அதன் டெலிவரி பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டன. இதனால் கடந்த மார்ச் மாதத்தில் நிஸான் நிறுவனம் விற்பனையில் மிகப்பெரிய வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

நிஸான் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் ஒட்டுமொத்தமாக (இந்தியாவின் உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) 10,388 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில், 4,408 கார்கள் இந்தியாவின் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். எஞ்சிய 5,980 கார்கள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும்.

Nissan Gravite MPV

இதில், இந்தியாவின் உள்நாட்டு விற்பனையில் மட்டும் நிஸான் நிறுவனம் 98 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, மார்ச் மாதத்தில் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 5 ஆண்டுகளில் நிஸான் நிறுவனம் இந்தியாவின் உள்நாட்டில் பதிவு செய்த அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கையும் இதுதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது. நிஸான் நிறுவனத்தின் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு க்ராவைட் காரின் வருகைதான் மிகவும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.65 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் இது 5 சீட்டர் காரான மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் ஆன்-ரோடு விலையை (On-road Price) விட குறைவு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் சென்னை (Chennai) ஆன்-ரோடு விலை சுமார் 6 லட்ச ரூபாயாக இருந்து வருகிறது.

நிஸான் க்ராவைட் கார் மிகவும் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, 6 ஏர்பேக்குகள், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் போன்ற பாதுகாப்பு வசதிகள் (Safety Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.

அத்துடன் வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள், க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளையும் நிஸான் க்ராவைட் கார் கொண்டுள்ளது.

செயல்திறனை பொறுத்தவரையில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் (Engine Option), நிஸான் க்ராவைட் காரில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மேனுவல் கியர் பாக்ஸ் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 19.3 கிலோ மீட்டர் மைலேஜையும் (Mileage), ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 19.6 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்கும் என நிஸான் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில் 7 சீட்டர் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு நிஸான் க்ராவைட் மிகச்சிறந்த ஆப்ஷன் ஆகும். ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) போன்ற 7 சீட்டர் கார்களுக்கு பதிலாக நிஸான் க்ராவைட் காரை பரிசீலனை செய்யலாம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Thursday, April 2, 2026, 16:22 [IST]
English summary
Nissan registers 98 per cent growth in march 2026 thanks to gravite
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+