அஞ்சரை லட்சத்துக்கு 7 சீட்டர் காரை அறிமுகம் செய்தும் ஷோரூம் காத்து வாங்குது! ஜப்பான் நிறுவனத்திற்கு சோகம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று நிஸான் (Nissan). ஜப்பானை சேர்ந்த இந்த நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மொத்தம் 3 கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. அவை நிஸான் க்ராவைட் (Nissan Gravite), நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-trail) ஆகியவை ஆகும்.

இதில், நிஸான் க்ராவைட் இந்திய சந்தைக்கு புது வரவு ஆகும். கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் நிஸான் க்ராவைட் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்திய சந்தையில் கிடைக்க கூடிய மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி ரக கார்களில் ஒன்றாகும்.

Nissan Gravite Seats

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.65 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது போன்ற கார்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் கூட, இந்திய சந்தையில் தற்போது நிஸான் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

நிஸான் நிறுவனத்தின் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3,203 கார்களை மட்டுமே நிஸான் நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்துள்ளது.

Nissan Gravite

ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் நிஸான் நிறுவனம் 4,408 கார்களை விற்பனை செய்திருந்தது. அதாவது நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, அதன் பின் வந்த ஏப்ரல் மாதத்தில் 1,205 கார்களை நிஸான் நிறுவனம் குறைவாக விற்பனை செய்துள்ளது. இதன் காரணமாக நிஸான் கார்களின் விற்பனை 27.3 சதவீதம் குறைந்துள்ளது.

நிஸான் நிறுவனத்தின் இந்த திடீர் சரிவிற்கான காரணம் என்ன? என்பது சரியாக தெரியவில்லை. இருப்பினும் கூடிய விரைவில் நிஸான் நிறுவனம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நிஸான் க்ராவைட் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது.

அத்துடன் வரும் மாதங்களில் இன்னும் ஏராளமான கார்களையும் நிஸான் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில், நிஸான் டெக்டான் (Nissan Tekton) குறிப்பிடத்தக்கது ஆகும். இது சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை ரெனால்ட் ட்ரைபர் காரின் நிஸான் வெர்ஷன் ஆகும். நிஸான் மற்றும் ரெனால்ட் நிறுவனங்களுக்கு இடையே கூட்டணி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிஸான் டெக்டான் காரானது 5 சீட்டர் கார் ஆகும். இதன் 7 சீட்டர் வெர்ஷனையும் நிஸான் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. எனவே நிஸான் நிறுவனம் எதிர்காலத்தில் விற்பனையில் நல்ல வளர்ச்சியை பதிவு செய்யும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

Article Published On: Tuesday, May 5, 2026, 23:33 [IST]
English summary
Nissan sales report april 2026 27 per cent growth
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+