ஓட்டிப் பார்க்காமலேயே 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற நிசான் கார்! தைரியமாக வாங்கலாம்!

நிசான் நிறுவனம் அதன் புதிய டெக்டாான் எஸ்யூவி காரை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், டெக்டாான் கார் இந்தியாவில் பாரத் NCAP கிராஷ் டெஸ்ட்டில் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் நிசான் நிறுவனத்தின் முதல் காம்பாக்ட்டான SUV காராக டெக்டாான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 75 வருடங்களாக SUV கார்களை வடிவமைப்பதில் பெற்ற நிபுணத்துவம் மற்றும் அனுபவம் மூலமாக டெக்டானை நிசான் உருவாக்கியுள்ளது. அதன் மூலமாகவே பாரத் NCAP கிராஷ் டெஸ்ட்டில் 5-ஸ்டார் ரேட்டிங் டெக்டானுக்கு கிடைத்துள்ளது.

nissan tekton suv bharat ncap crash test rating result

இந்த சோதனையில், நிசான் டெக்டான் கார் நேரடியாக உட்படுத்தவில்லை. சில மாதங்களுக்கு முன் சோதனை செய்யப்பட்ட புதிய ரெனால்ட் டஸ்டர் காரின் 'கார்ப்பிரேட் ட்வின்' மாடலாக டெக்டானை பாரத் NCAP கருதுகிறது. ஏனெனில், புதிய டஸ்டரின் அதே பிளாட்ஃபாரத்தில் தான் டெக்டானும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனாலேயே இந்த இரு SUV கார்களும் நீளம், அகலம், உயரம் உள்ளிட்ட பரிமாண அளவுகளில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன. மேலும், இதன் காரணமாகவே இந்த இரு கார்களிலும் வழங்கப்படும் பாதுகாப்பு அம்சங்களும் கூட கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன. இதனால் கடந்த மார்ச் மாதத்தில் பாரத் NCAP கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்ட ரெனால்ட் டஸ்டரின் சோதனை முடிவுகள் நிசான் டெக்டானுக்கும் பொருந்தும்.

nissan tekton suv bharat ncap crash test rating result

பெரியவர்கள் பாதுகாப்பில் புதிய டஸ்டர் கார் 32க்கு 30.49 மதிப்பெண்களை பெற்றது. குழந்தைகள் பாதுகாப்பில் இந்த காருக்கு 49க்கு 45 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. மார்ச் மாதத்தில் பாரத் NCAP கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்டது, டஸ்டர் காரின் எண்ட்ரி-லெவல் வேரியண்ட் ஆகும். எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டாக இருப்பினும், இதில் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

அவற்றுள் குறிப்பிடத்தக்கவை, 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), பாதசாரிகளுக்கான பாதுகாப்பு மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர்கள் ஆகும். இவற்றின் மூலமாக, வளையாத பேரியர் உடன் முன்பக்கமாக மோதவிட்டு சோதனை செய்து பார்த்ததில் கார் 16க்கு 14.49 புள்ளி மதிப்பெண்களையும், நகரக்கூடிய பேரியர் உடன் பக்கவாட்டாக மோதவிட்டு சோதனை செய்து பார்த்ததில் 16க்கு முழு 16 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

மொத்த உலோகங்களில், 62% வளையாத இரும்பினால் ஆன மோனோகாக் உடலமைப்பில் உருவாக்கப்பட்ட புதிய ரெனால்ட் டஸ்டர் காரில் அதற்கேற்ப உயர் தரத்திலான பாதுகாப்பு கிடைக்கிறது. டஸ்டர் காரின் இந்த பாதுகாப்பு மதிப்பீடுகள் அனைத்தும் புதிய நிசான் டெக்டான் காரின் விசியா, விசியா பிளஸ், அசெண்டா, என்-கனெக்ட்டா, டெக்னா மற்றும் டெக்னா பிளஸ் என அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

புதிய டெக்டானின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகளை பெறலாம். அத்துடன், 40க்கும் அதிகமான பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் 17 அதிநவீன பாதுகாப்பு அம்சங்களை கொண்ட லெவல்-2 ADAS உள்ளிட்டவையும் டெக்டானில் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய நிசான் டெக்டான் கார் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்படாமலேயே இந்த பாதுகாப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆதலால், புதிய ரெனால்ட் டஸ்டர் காரை வாங்குவதும், டெக்டான் காரை வாங்குவதும் ஒன்றுதான். ரூ.10.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் களமிறக்கப்பட்டுள்ள டெக்டானுக்கு விற்பனையில் டாடா சியரா, ஹூண்டாய் கிரெட்டா, ஸ்கோடா குஷாக், மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார்கள் போட்டியாக உள்ளன.

Article Corrections

URL-இல் தவறுதலாக 'Tecton' என குறிப்பிடப்பட்டது 'Tekton' என சரியாக மாற்றப்பட்டது.
Article Published On: Thursday, July 9, 2026, 23:59 [IST]
English summary
Nissan tecton crash test rating result without crash testing
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out