இன்னைக்கு காலைலதான் ஒரு கார் லான்ச் பண்ணாங்க! அதுக்குள்ள இதுவா! இந்தியாவை கலக்கும் ஜப்பான் கம்பெனி!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிஸான் டெக்டான் (Nissan Tekton) கார், இன்று (ஜூலை 9) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது 5 சீட்டர் கார் ஆகும். இதை தொடர்ந்து இதன் 7 சீட்டர் வெர்ஷனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
நிஸான் டெக்டான் காரின் 7 சீட்டர் வெர்ஷன் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்ற கேள்விக்கு, இன்று நடைபெற்ற 5 சீட்டர் வெர்ஷனின் அறிமுக நிகழ்ச்சியில் நமக்கு பதில் கிடைத்துள்ளது. இதன்படி பார்த்தால் நிஸான் டெக்டான் காரின் 7 சீட்டர் வெர்ஷன் 2027ம் ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதாவது வரும் 2027ம் ஆண்டின் ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் நிஸான் டெக்டான் காரின் 7 சீட்டர் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். நிஸான் டெக்டான் காரின் 5 சீட்டர் வெர்ஷன் 2 வரிசை இருக்கை அமைப்பை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் அதன் 7 சீட்டர் வெர்ஷன் 3 வரிசை இருக்கை அமைப்பை கொண்டிருக்கும்.
இதற்காக நிஸான் டெக்டான் காரின் நீளம் மற்றும் வீல்பேஸ் நீளம் அதிகரிக்கப்படவுள்ளது. நிஸான் டெக்டான் காரின் 5 சீட்டர் வெர்ஷனின் நீளம் மற்றும் வீல்பேஸ் நீளம் முறையே 4.3 மீட்டர்கள் மற்றும் 2.6 மீட்டர்களாக உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் நிஸான் டெக்டான் 5 சீட்டர் வெர்ஷனின் அதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான், அதன் 7 சீட்டர் வெர்ஷனிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி பார்த்தால் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல்/6 ஸ்பீடு மேனுவல், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல்/6 ஸ்பீடு மேனுவல், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல்/6 ஸ்பீடு டிசிடி பவர்ட்ரெயின் ஆப்ஷன்களை நிஸான் டெக்டான் காரின் 7 சீட்டர் வெர்ஷன் கொண்டிருக்கும். அதேபோல் நிஸான் டெக்டான் காரின் 5 சீட்டர் வெர்ஷனின் அதே வசதிகள்தான், அதன் 7 சீட்டர் வெர்ஷனிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி பார்த்தால் 17க்கும் மேற்பட்ட வசதிகளுடன் கூடிய லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, 10.10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய முன் பக்க இருக்கைகள் போன்ற வசதிகளை எல்லாம் நிஸான் டெக்டான் காரின் 7 சீட்டர் வெர்ஷன் கொண்டிருக்கும்.
அத்துடன் க்ரூஸ் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளையும் நிஸான் டெக்டான் காரின் 7 சீட்டர் வெர்ஷன் பெற்றிருக்கும். ஆனால் நிஸான் டெக்டான் காரின் 5 சீட்டர் வெர்ஷனிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் 7 சீட்டர் வெர்ஷனின் டிசைனில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO), டாடா சஃபாரி (Tata Safari), ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus) போன்ற கார்களுடன் நிஸான் டெக்டான் காரின் 7 சீட்டர் வெர்ஷன் போட்டியிடும். அனேகமாக இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13-14 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications