புதிய நிசான் காரை குறைந்த விலையில் வாங்க இது செம்ம ஐடியா! பணத்தை மிச்சப்படுத்துங்க!
நிசான் நிறுவனத்தில் இருந்து புதியதாக விலைமிக்க SUV வகை காராக டெக்டான் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் பெரிய அளவிலான தொடுதிரை, ADAS உள்ளிட்ட அதிநவீன அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அப்படியென்றால், இந்த காரின் விலை குறைவான எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டில் என்னென்ன அம்சங்கள் கிடைக்கும் என்கிற கேள்வி இந்நேரம் உங்களுக்கு எழுந்திருக்கும்.
நிசானின் விலையுயர்ந்த SUV கார் என்பதால், எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டிலும் ஏகப்பட்ட சிறப்பம்சங்களை டெக்டான் வழங்குகிறது. அவை என்னென்ன என்பதை காரின் வெளிப்புறம், உட்புறம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் என பிரிவு வாரியாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க. எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டில் வழங்கப்படுவதால், இவை டெக்டான் காரில் நிலையான ஸ்டாண்டர்டான அம்சங்களாக அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்படுபவையாக உள்ளன.

வெளிப்புற அம்சங்கள்
டெக்டான் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டில் கூட மேட்ரிக்ஸ் விஷன் LED ஹெட்லைட்கள், C-வடிவில் சிக்னெச்சரான ஸ்டைலில் LED DRL-கள் & LED டெயில்லைட்கள், ORVM-கள் உடன் LED டர்ன் இண்டிகேட்டர்கள், உயரத்தில் பொருத்தப்பட்ட LED ஸ்டாப் விளக்கு, முன் & பின்பக்கத்தில் ஸ்கிட் பிளேட்கள், பின்பக்க மேற்கூரையில் ஸ்பாய்லர் மற்றும் காரின் உடல் நிறத்தில் ORVM-கள் & கதவு கைப்பிடிகள் உள்ளிட்டவை கிடைக்கும். ஆனால், அலாய் சக்கரங்கள் இல்லாமல் இரும்பு சக்கரங்களே கிடைக்கும்.
உட்புற அம்சங்கள்
விலை குறைவான வேரியண்ட்டாக இருப்பினும், அனைத்து பிரீமியம் அம்சங்களையும் நிசான் நிராகரிக்கவில்லை. மேம்பட்ட லுக்கிற்காகவும், பயன்பாட்டிற்காகவும் 7-இன்ச்சில் அதிநவீன டிரைவர்-உதவி சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள் உடன் அர்கமைஸ் சவுண்ட் சிஸ்டம், நிசான் இன்சைனியா உடன் டாஷ்போர்டு தீம், மிகவும் சவுகரியமான அனுபவத்தை தரக்கூடிய பை-டென்சிட்டி இருக்கைகள் டெக்டானின் பேஸ் வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளன.

மென்மையான தொடுதலை வழங்கக்கூடிய கிராபைட் வோவன் இண்டெரியர் ட்ரிம், ஸ்மார்ட் ஆர்கனைசர் உடன் ஒளிரக்கூடிய க்ளோவ்பாக்ஸ், சறுக்கக்கூடிய முன்பக்க ஆர்ம்ரெஸ்ட், ஸ்டோரேஜ் & 2 கப்ஹோல்டர்கள் உடன் செண்டர் கன்சோல் பகுதி, டபுள் D-கட் ஸ்டீயரிங் சக்கரம், LED கேபின் விளக்குகள் மற்றும் பின்பக்க லக்கேஜ் பகுதிக்கு விளக்கு போன்றவற்றையும் இந்த விலை குறைவான டெக்டான் வேரியண்ட்டில் பெறலாம்.
பயண சவுகரியத்திற்கான அம்சங்கள்
சவுகரியமான பயணத்திற்காக நிமிர்த்த மற்றும் முன்னோக்கி பின்னோக்கி நகர்த்தக்கூடிய ஸ்டீயரிங் சக்கரம், பவர் ஜன்னல் கண்ணாடிகள், எலெக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய ORVM-கள், பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி காற்றுத்துளைகள், ஹைட்ராலிக் பொனெட் ஸ்டே, உயரத்தை அட்ஜெஸ் செய்யக்கூடிய டிரைவர் சீட், ஐடியல் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம், இரு விதமான ஒலிகளை எழுப்பக்கூடிய ஹார்ன், முன்பக்கத்தில் 12 வோல்ட்டில் சார்ஜிங் சாக்கெட், பேட்டரி சார்ஜை சேமிக்கும் சிஸ்டம் உள்ளிட்டவற்றை டெக்டானின் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டில் பெறலாம்.
பாதுகாப்பு அம்சங்கள்
6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, பிரேக் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், கார்னரிங் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர்களில் காற்றின் அழுத்தத்தை கண்காணிக்கும் சிஸ்டம், கார் ரோல்-ஓவர் ஆகுவதை தடுக்கும் சென்சார்கள், குழந்தை இருக்கைகளுக்கான ISOFIX மவுண்ட்கள் மற்றும் எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல் உள்ளிட்டவை பாதுகாப்பு அம்சங்களாக இந்த வேரியண்ட்டில் கிடைக்கும்.
இவற்றுடன், அனைத்து இருக்கைகளிலும் ரிமைண்டர் உடன் 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள், முன் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் & பின் சக்கரங்களில் டிரம் பிரேக்குகள், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், என்ஜினின் அடிப்பகுதி உள்பட ஒட்டுமொத்த காரின் அடிப்பகுதிக்கான கவர், இம்மொபிலிசர், பர்க்லர் அலார்ம், வேகத்தை உணர்ந்து அதற்கேற்ப லாக் ஆகும் கதவுகள், விபத்தை உணர்ந்து அதற்கேற்ப அன்லாக் ஆகும் கதவுகள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு லாக்குகள் உள்ளிட்டவற்றையும் விலை குறைவான டெக்டான் காரில் பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய நிசான் டெக்டான் காரை எப்படியாவது குறைந்த விலையிலாவது வாங்கிவிட வேண்டும் என விரும்புபவர்களுக்கு எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டே போதுமானதாக இருக்கும். விலை குறைவான வேரியண்ட்டாக இருப்பினும் இதனை வாங்கும் வாடிக்கையாளர்களும் நிசானின் கனெக்டட் ஓனர்ஷிப் சூழலை அனுபவிக்கலாம். விற்பனையில் இந்த புதிய நிசான் காருக்கு ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் கார்கள் முக்கிய போட்டியாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications